search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதிய ரேசன் கடை"

    • புதிய ரேசன் கடை- கலையரங்கம் கட்டிடத்தை தமிழரசி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
    • பயனாளிகளுக்கு ரேசன் பொருட்களை வழங்கி அரசு திட்டங்கள் பற்றி பேசினார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியம் அரியாண்டிபுரம் ஊராட்சி யில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.7.50 லட்சம் மதிப்பீட்டில் கலையரங்கம் கட்டிடம் மற்றும் புதிய ரேசன் கடை கட்டிடத்தை முன்னாள் அமைச்சரும், மானாமதுரை எம்.எல்.ஏ.வுமான தமிழரசி திறந்து வைத்தார். பின்னர் பயனாளிகளுக்கு ரேசன் பொருட்களை வழங்கி அரசு திட்டங்கள் பற்றி பேசினார்.

    விழாவில் வடக்கு ஒன்றிய செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. சுப. மதியரசன், கிழக்கு ஒன்றிய செயலாளர் தமிழ்மாறன், மேற்கு ஒன்றிய செயலாளர் வெங்கட்ராமன், ஊராட்சி மன்ற தலைவர் ராக்கு குமரேசன் , கண்ணமங்கலம், கூட்டுறவு சங்க தலைவர் சுபதமிழரசன், வட்டாட்சியர் கோபி, மற்றும் அரியாண்டி புரம் கிராம பொதுமக்கள் மகளிர் சுய உதவி குழுவினர் கலந்து கொண்டனர்.

    • அமைச்சர் ஆர்.காந்தி திறந்து வைத்தார்
    • ஏராளமாேனார் கலந்து கொண்டனர்

    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் ஒன்றியம் மருதாலம் ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டு முட்டவாடி பகுதியில் புதிய பகுதி நேர ரேஷன் கடை திறப்பு விழா, மகளிர் உதவி குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சரவணன், மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய குழு தலைவர் கலைக்குமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஊராட்சி மன்ற தலைவர் ராதாகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார்.

    இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு புதிய பகுதி நேர ரேஷன் கடையை ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு சர்க்கரை, அரிசி, பருப்பு வழங்கினார். 6 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 46 லட்சத்து 85 ஆயிரம் கடன் உதவி வழங்கினார்.

    அப்போது மாவட்ட துணைச் செயலாளர் சிவானந்தம் தலைமை செயற்குழு உறுப்பினர் அசோகன், மாவட்ட விவசாய அணி வெங்கடேசன், தலைமை கழக பேச்சாளர் சீனிவாசன் மற்றும் மேற்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    இதேபோல் சோளிங்கர் அடுத்த கரிக்கல் ஊராட்சிக்கு உட்பட்ட ரெண்டாடியிலும் புதிய பகுதி நேர ரேஷன் கடையை அமைச்சர் காந்தி திறந்து வைத்தார்.

    கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். இதில் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் நாகராஜ், ஒன்றிய குழு துணை பூங்கொடி ஆனந்தன், முன்னிலை வகித்தனர்.ஊராட்சி மன்ற தலைவர் நிர்மலா அனைவரையும் வரவேற்றார்.

    • பொதுமக்கள் வலியுறுத்தல்
    • மழை பெய்தால் பொருட்கள் நனைந்து போவதாக புகார்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள கொங்கராம்பட்டு கிராமத்தில் கற்பகம் கூட்டுறவு ரேசன் கடை சித்திரசாவடி கேட் பகுதியில் பழுதடைந்த கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.

    மழை பெய்தால் ரேசன் பொருட்கள் நனைந்து போகும் நிலை உள்ளது. எனவே புதிய ரேசன் கடை கட்ட, பழைய ஊராட்சி அலுவலகம் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு அஸ்திவாரம் போடப்பட்ட நிலையில் பூமி பூஜை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

    ஆனால் கட்டிட பணிகள் தொடங்கவில்லை. எனவே புதிய ரேஷன் கடை கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • உதயநிதி ஸ்டாலினை தி.மு.க. முன்னிலைப்படுத்த தொடங்கியதும் அவர் எம்.எல்.ஏ., அமைச்சர் பதவிகளுக்கு வருவார் என்று நாங்கள் எதிர்பார்த்தோம்
    • மாற்றம் என்று சொல்லிய தி.மு.க. இன்றைக்கு மக்களுக்கு ஏமாற்றத்தினை பரிசாக தந்துள்ளது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலையில் சட்டமன்ற உறுப்பினர் நிதயின் கீழ் ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய ரேசன் கடை திறப்பு விழா நடைபெற்றது.

    ரேசன்கடை திறப்பு

    முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி எம்.எல்.ஏ.வுமான கடம்பூர். ராஜூ கலந்து கொண்டு ரேசன் கடையை திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    உதயநிதி ஸ்டாலினை தி.மு.க. முன்னிலைப்படுத்த தொடங்கியதும் அவர் எம்.எல்.ஏ., அமைச்சர் பதவிகளுக்கு வருவார் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். வேறு வழி இல்லாமல் தி.மு.க . முன்னணி தலைவர்கள் உதயநிதி ஸ்டாலினை ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    ஆவின் விலை எற்றம்

    வார்த்தைகளுக்காக உதயநிதி ஸ்டாலினை புகழந்து பேசினாலும், அவர்கள் உள்ளுக்குள் இருக்கும் புழுக்கம் எல்லோருக்கும் தெரியும். அது காலம் நேரம் வரும் போது தெரியும்.

    தி.மு.க.வில் நிலை அப்படித்தான் உள்ளது. எங்கள் நிலை இப்படித்தான் என்று சொல்லாமல் சொல்கிறார் கே.என்.நேரு.

    மாற்றம் என்று சொல்லிய தி.மு.க. இன்றைக்கு மக்களுக்கு ஏமாற்றத்தினை பரிசாக தந்துள்ளது. அனைத்து தரப்பு மக்களும் கொதித்து போய் உள்ளனர்.

    தி.மு.க.விற்கு வாக்களிக்க மக்கள் தயாராக இல்லை, பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 40 தொகுதிகளிலும் மகாத்தான வெற்றி பெறும்.

    எல்லா கட்சிகளும் தனியாக போட்டியிட தயராக இருந்தால், அ.தி.மு.க.வும் தனித்து நிற்க தயராக உள்ளது.

    தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வரவுள்ள நிலையில் ஆவினில் பால், ெநய், வெண்ணை உள்ளிட்ட வைகளின் விலைகளை உயர்த்தி உள்ளனர். மக்கள் மீது தி.மு.க. அரசு தொடர்ந்து சுமையை தான் சுமத்துகிறது என்பதை நிரூபித்துள்ளது .

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அமலு விஜயன் எம்.எல.ஏ. திறந்து வைத்தார்
    • பலர் கலந்து கொண்டனர்

    பேரணாம்பட்டு:

    பேரணாம்பட்டு அடுத்த கள்ளிப்பேட்டை ஏரிகுத்தி போன்ற கிராமங்களில் புதிதாக கட்டப்பட்டிருந்த ரேசன் கடை திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு பேரணாம்பட்டு கூட்டுறவு சங்க சார்பதிவாளர் ரமேஷ் குமார் தலைமை தாங்கினார்.

    கூட்டுறவு பொது விநியோக திட்ட சார்பதி வாளர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.

    பேர்ணாம்பட்டு வட்ட வழங்கல் அலுவலர் தனலட்சுமி வரவேற்று பேசினார். 2 புதிய ரேசன் கடைகளையும் அமுலு விஜயன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    இதில் ஒன்றிய குழு பெருந்தலைவர் சித்ரா ஜனார்தனன், ஒன்றிய குழு துணை பெருந்தலைவர் லலிதா டேவிட், ஆத்மா குழு தலைவர் ஜனார்த்தனன், ஒன்றிய தி.மு.க. செயலாளர் டேவிட் சாத்கர், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் நீலா கபில், ரேசன் கடை விற்பனையாளர்களான சதீஷ், ரீகன், ரமேஷ், லோகேஷ், பாதுஷா, உஸ்மான், மஞ்சுளா, சங்கீதா, ராஜேந்திரன், கோகிலா, லிவின்குமார், பொறுப்பு ஊராட்சி செயலாளர் நேதாஜி மற்றும் சோக்கன் வில்லியம் அருமை நாயகம் உள்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் பி எஸ் கோபிநாத் நன்றி கூறினார்.

    • ரூ.14 லட்சம் ஒதுக்கீடு
    • பூவைஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ. பங்கேற்பு

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கே.வி.குப்பம் ராமாலை ஊராட்சி ஆர்.கிருஷ்ணாபுரம் கிராமத்தில் பல ஆண்டு பொதுமக்கள் கோரிக்கை ஏற்று புதிதாக ரேசன் கடை கட்ட சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பூவை ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ. 14 லட்சம் ரூபாய் ஒதுக்கினார்.

    இந்த ரேசன் கடை கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது.

    சிறப்பு அழைப்பாளராக கே.வி.குப்பம் பூவை ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு ரேசன் கடையின் புதிய கட்டிடத்திற்கான பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வி.ராமு, புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட செயலாளரும் குடியாத்தம் நகர் மன்ற உறுப்பினருமான பி. மேகநாதன், அக்கட்சியின் மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் மு.ஆ.சத்யனார், ராமாலை ஒன்றிய குழு உறுப்பினர் குட்டி வெங்கடேசன், அ.தி.மு.க. நிர்வாகிகள் எஸ்.எஸ்.ரமேஷ்குமார், ஜி.பி.மூர்த்தி, கே.மோகன், பிரகாசம், ஜான்சன் உள்பட அ.தி.மு.க., புரட்சி பாரதம் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ×