search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதிய டிரான்ஸ்பார்மர்"

    • மழைக் காலங்களில் வெள்ள நீர் தடையின்றி புறநகர் பகுதிக்கு செல்வதற்கு அமைக்கப்பட்ட கழிவு நீர் கால்வாய் பல லட்சம் செலவில் அமைக்கப்பட்டிருந்தது.
    • மின்வாரிய ஊழியர்கள் கழிவு நீர் கால்வாயில் மின் கம்பங்களை அமைத்து இருப்பதாக பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

    பாப்பிரெட்டிப்பட்டி,

    தருமபுரி மாவட்டம், பொ. மல்லாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பொம்மிடி பேருந்து நிலையம் நுழைவு வாயில் பகுதியில் 40 ஆண்டுகாலமாக இயங்கி வரும் மின் டிரான்ஸ்பாரம் நெடுஞ்சாலை பகுதியில் உள்ளது.

    இந்த மின் டிரான்ஸ்பாரத்தை தனியார் கட்டுமான பணிக்கு இடையூறாக உள்ளதாக கூறி மாற்றும்படி கட்டுமான பணி நடைபெறும் கட்டிட உரிமையாளர் கோரி இருந்தார்.

    அருகில் பேருந்து நிலையம், சந்தை பகுதி, போக்குவரத்து மிகுந்த பகுதி, வாகன ஓட்டுனர்கள், ஸ்டாண்ட் போன்றவை உள்ளதால் இந்த பகுதியில் வாடகை ஓட்டுனர்களும், பொது மக்களும், சமூக ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்த நிலையில் நேற்று திடீரென மின்வாரிய ஊழியர்கள், பேரூராட்சி ஊழியர்கள், நெடுஞ்சாலைத் துறையினர் இணைந்து வாடகை வாகனங்கள் நிறுத்தி வைக்கும் இடம் அருகில் கழிவு நீர் கால்வாய் செல்லும் கால்வாயில் குழி தோண்டி புதியதாக மின்கம்பங்களை நிறுத்தியுள்ளனர்.

    இதைக் கண்டு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் அதிர்ச்சி அடைந்தனர். தமிழக அரசு கழிவுநீர் வெளி யேறுவதற்கும், மழைக் காலங்களில் வெள்ள நீர் தடையின்றி புறநகர் பகுதிக்கு செல்வதற்கு அமைக்கப்பட்ட கழிவு நீர் கால்வாய் பல லட்சம் செலவில் அமைக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில், மின்வாரிய ஊழியர்கள் கழிவு நீர் கால்வாயில் மின் கம்பங்களை அமைத்து இருப்பதாக பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

    மின் டிரான்ஸ்பாரம் கழிவு நீர் கால்வாயில் அமைத்து செயல்படும் நேரங்களில் கீழ்ப்பகுதியில் சாக்கடை வெளியேறும் சமயத்தில் மின் கசிவு ஏற்பட்டால் பெருமளவிலான உயிரிழப்பு ஏற்படும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

    • அக்ரி.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    திருவண்ணாமலை:

    போளூர் மின்விநியோக கோட்டத்திற்கு உட்பட்ட போளூர் தொகுதியில் தடையில்லா மின்சாரம் விநியோகம் செய்யும் வகையில் ரூ.58 லட்சம் மதிப்பீட்டில் போளூர் வடக்கு பிரிவில்-4 அத்திமூர் பிரிவில்- 3, வடமாதிமங்கலம் பிரிவில்- 4 என11 டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டுள்ளன.

    இவற்றை மக்கள் பயன்பாட்டுக்காக இயக்கி வைக்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு போளூர் மின் வாரிய செயற்பொறியாளர் குமரன் தலைமை தாங்கினார்.

    போளூர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி எம்எல்ஏ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய 11 டிரான்ஸ்பர்களை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சிகளில் மின்வாரிய செயற்கு பொறியாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×