search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புகை மாசு முறைகேடு விவகாரம்"

    அனுமதிக்கப்பட்ட அளவை விட வோல்க்ஸ்வோகன் கார்கள் அதிகளவு கார்பன் டை ஆக்சைடு புகையை வெளியேற்றுவதாக எழுந்த புகாரில் ஆடி கார் நிறுவனத்தின் சி.இ.ஓ ரூபெர்ட் ஸ்டாட்லெர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். #AudiCEO #RupertStadler
    முனிச்:

    ஜெர்மனியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கார் தயாரிப்பு நிறுவனம் வோல்க்ஸ்வோகன் , ஆடி கார் நிறுவனத்தின் தந்தை நிறுவனமாக இருந்து வருகிறது. இந்நிலையில், மூன்றாண்டுகளுக்கு முன்னர் தயாரிக்கப்பட்ட வோல்க்ஸ்வோகன் டீசல் கார்கள் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட, 40 மடங்கு அதிகளவு கார்பன் டை ஆக்சைடு புகையை வெளியேற்றுவது ஆய்வு ஒன்றில் தெரியவந்தது. 

    அமெரிக்காவில் நடந்த புகை மாசு பரிசோதனையில், அந்நிறுவனம் முறைகேடு செய்ததும் வெளிச்சத்திற்கு வந்தது. போலியாக விளம்பரம் வெளியிட்டு ஏமாற்றியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் உலகம் முழுவதும் கடும் நெருக்கடியை சந்தித்த வோல்க்ஸ்வோகன் நிறுவனம், லட்சக்கணக்கான கார்களை திரும்பப்பெற்றது. 

    இந்நிலையில், இந்த விவகாரத்தில் ஆடி கார் நிறுவனத்தின் சி.இ.ஓ ரூபெர்ட் ஸ்டாட்லெர் ஜெர்மனியில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், அந்நிறுவனத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் விசாரணை வளையத்திற்குள் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. 

    ×