search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பீளமேடு"

    • பீளமேட்டில் துணிகரம்
    • மர்மநபர்கள் வந்து செல்லும் காட்சிகள் ஏதும் பதிவாகி உள்ளதா என ஆய்வு செய்து வருகிறார்கள்.

    கோவை:

    கோவை விளாங்குறிச்சி அருகே உள்ள ஜீவா நகரை சேர்ந்தவர் முரளி (வயது 62). ஓய்வு பெற்ற தனியார் நிறுவன மேலாளர்.

    கடந்த 31-ந் தேதி இவர் தனது வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் பீளமேடு புதூரில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றார். நள்ளிரவு முரளி வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த வளையல், செயின், கம்மல், டாலர் உள்பட 27½ பவுன் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.7,500 ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

    நேற்று வீட்டிற்கு திரும்பிய முரளி வீட்டின் கதவு திறந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது நகைகள் கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது. இது குறித்து முரளி பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் சம்பவஇடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.

    அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த மர்மநபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இதனை வைத்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓய்வு பெற்ற தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்.

    மேலும் அந்த பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் வீதிகளில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு காமிராக்களில் மர்மநபர்கள் வந்து செல்லும் காட்சிகள் ஏதும் பதிவாகி உள்ளதா என ஆய்வு செய்து வருகிறார்கள். 

    • மசக்காளி பாளையத்தில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.
    • ரூ.15 ஆயிரம் ரொக்க பணம், ரூ.65 ஆயிரம் மதிப்பிலான சிகரெட் பாக்கெட் கொள்ளையடிக்கப்பட்டது.

    கோவை:

    கோவை பீளமேடு அருகே உள்ள பாலன் நகரை சேர்ந்தவர் சிவ சுப்பிரமணியம் (வயது 46). இவர் மசக்காளி பாளையத்தில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு இவர் வழக்கம் போல கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். நள்ளிரவு கடையில் மேற்கூரையை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் கல்லாவில் இருந்து ரூ.15 ஆயிரம் ரொக்க பணம், கடையில் இருந்த ரூ.65 ஆயிரம் மதிப்பிலான சிகரெட் பாக்கெட் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

    மறுநாள் கடையை திறந்து உள்ளே சென்ற சிவசுப்பிரமணியம் கல்லாவில் இருந்த பணம் மற்றும் சிகரெட் பாக்கெட் கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இது குறித்துபீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மளிகை கடையில் மேற்கூரையை உடைத்து கொள்ளையடித்த சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.  

    • காவலாளியிடம் தங்களது செல்போனில் உள்ள சில பெண்களின் போட்டோக்களை காட்டினர்.
    • இந்த வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது

    கோவை:

    பீளமேட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் அழகிகள் இருப்பதாக வாலிபர்களிடம் பணம் மோசடி செய்த பெண் உள்பட 4 பேர் சிக்கினர்.

    இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்ட தாவது:-

    கோவை சவுரிபாளை யத்தில் தனியார் அடுக்கு மாடி குடியிருப்பு உள்ளது.

    இங்கு சம்பவத்தன்று வந்த சில வாலிபர்கள், காவலாளியிடம் தங்களது செல்போனில் உள்ள சில பெண்களின் போட்டோக்களை காட்டினர். பின்னர் அவர்கள் தங்கி இருக்கும் குடியிருப்பை காட்டுங்கள் என கூறியுள்ளனர்.

    அதனை பார்த்த காவலாளி, அப்படி யாரும் இங்கு இல்லை என்றார். ஆனால் வாலிபர்கள் எங்களுக்கு சமூக வலைத்தளம் மூலம் புகைப்படத்தை அனுப்பிய பெண், தான் இங்கே தங்கி இருப்பதாகவும், ஆன்லைன் மூலமாக பணம் அனுப்பினால் ஜாலியாக உல்லாசம் அனுபவிக்கலாம் என கூறினார்.

    அதனை நம்பி நாங்கள் பணத்தை அனுப்பி வைத்தோம். அதன் பின்னர் இங்கு வந்து அந்த பெண்ணிடம் ஜாலியாக இருப்பதற்காக வந்தோம் என்றனர்.

    இதுகுறித்து காவலாளி, அடுக்குமாடி குடியிருப்பு சூப்பர்வைசருக்கு தகவல் தெரிவித்தார். இதுகுறித்து அவர் பீளமேடு போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    அதில் அடுக்குமாடி குடியிருப்பில் அழகிகள் இருப்பதாக கூறி வாலிபர்களிடம் பணம் மோசடி செய்தது கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சுபாஷ் சந்தர் (வயது 24) மற்றும் கோவையை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.

    இந்த வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய கன்னியாகுமரியை சேர்ந்த ஆர்த்தி (24), கரூரைச் சேர்ந்த (26), குமரவேல்(26) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

    • தப்பியோடிய 3 பேரை மடக்கி பிடித்த மக்கள்
    • 3 பேரையும் போலீசார் கோர்டில் ஆஜர்படுத்து ஜெயிலில் அடைத்தனர்.

    கோவை:

    கோவை மசக்காளி பாளையம் வி.கே ரோட்டை சேர்ந்தவர் பாலகுமார் (வயது 23). இவர் அந்த பகுதியில் தொழிற்சாலை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவர் பீளமேடு துளசியம்மாள் லே-அவுட் பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் பாலகுமாரிடம் இருந்து செல்போனை பறித்து தப்பி ஓடினர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் சத்தம் போட்டார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் தப்பியோட முயன்ற 3 பேரையும் மடக்கிப்பிடித்தனர்.

    பின்னர் அவர்களை சிங்காநல்லூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் நீலிக்கோணாம்பாளையம் அண்ணா நகரை சேர்ந்த காளிதாஸ் (34), மசக்காளிபாளையத்தை சேர்ந்த விமல்ராஜ் (34), ரகு (30) என்பது தெரியவந்தது. 3 பேரையும் போலீசார் கோர்டில் ஆஜர்படுத்து ஜெயிலில் அடைத்தனர்.

    கோவை ஆர்.எஸ்.புரம் மேற்கு சம்பந்தம் ரோட்டை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (65). இவர் ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை அதிகாரி. சம்பவத்தன்று இவர் ஆர்.எஸ்.புரம் டி.பி ரோட்டில் உள்ள கண் ஆஸ்பத்திரி அருகே நின்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர் கோபாலகிருஷ்ணன் வைத்திருந்த செல்போனை பறித்து தப்பிச்சென்றார்.இதுகுறித்து அவர் ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போனை பறித்துச் சென்ற வாலிபரை தேடி வருகிறார்கள்.

    கோவை குனியமுத்தூர் அருகே உள்ள செந்தமிழ் நகரை சேர்ந்தவர் சந்தோஷ் குமார். இவரது மனைவி கவிதா. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு சாவியை ஜன்னலில் வைத்துவிட்டு சென்றார்.

    இதனை நோட்டமிட்ட மர்ம நபர் யாரே, வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்றனர். பின்னர் அறையிலிருந்த பீரோவை திறந்து அதில் இருந்த தங்க நகைகள் மற்றும் ரூ.30 ஆயிரம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச்சென்றனர்.

    • சவுரிபாளையத்தில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு செயல்பட்டு வருகிறது.
    • வாலிபர்கள் எங்களுக்கு சமூக வலைத்தளம் மூலம் புகைப்படத்தை அனுப்பிய பெண், தான் இங்கே தங்கி இருப்பதாகவும், ஆன்லைன் மூலமாக பணம் அனுப்பினால் ஜாலியாக உல்லாசம் அனுபவிக்கலாம் என கூறினார்.

    கோவை:

    கோவை சவுரிபாளையத்தில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு செயல்பட்டு வருகிறது. இந்த குடியிருப்பில் சூப்பர்வைசராக ராஜேந்திரன் (வயது 84) என்பவர் உள்ளார்.

    சம்பவத்தன்று இந்த குடியிருப்பிற்கு சில வாலிபர்கள் வந்தனர். அவர்கள் அங்கு இருந்த காவலாளியிடம் தங்களது செல்போனில் உள்ள சில பெண்களின் போட்டோவை காட்டினர். பின்னர் அவர்கள் தங்கி இருக்கும் குடியிருப்பை காட்டுங்கள் என கூறியுள்ளனர்.

    அதனை பார்த்த காவலாளி இவர்கள் யாரும் இங்கு தங்கவில்லை என கூறினார். அந்த வாலிபர்கள் எங்களுக்கு சமூக வலைத்தளம் மூலம் புகைப்படத்தை அனுப்பிய பெண், தான் இங்கே தங்கி இருப்பதாகவும், ஆன்லைன் மூலமாக பணம் அனுப்பினால் ஜாலியாக உல்லாசம் அனுபவிக்கலாம் என கூறினார்.

    அதனை நம்பி நாங்கள் பணத்தை அனுப்பி வைத்தோம். அதன் பின்னர் இங்கு வந்து அந்த பெண்ணிடம் ஜாலியாக இருப்பதற்காக வந்தோம் என்றனர். இதுகுறித்து காவலாளி, சூப்பர்வைசர் ராஜேந்திரனுக்கு தகவல் தெரிவித்தார்.

    அவர் இது குறித்து பீளமேடு போலீசில் எங்களது அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம் நடப்பதாக சில போலியான முகவரியை கொடுத்து வாலிபர்களிடம் பணத்தை பெற்றுஏமாற்றி உள்ளனர். எனவே எங்களது அடுக்குமாடி குடியிருப்பில் தவறான முறையில் சித்தரிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×