search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிளெமிங்"

    ஏற்கனவே ராயுடுவின் ட்வீட் குறித்து சென்னை அணி சி.இ.ஓ காசி விஸ்வநாதன் விளக்கம் அளித்திருந்தார்.
    மும்பை:

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் அம்பத்தி ராயுடு இந்த ஆண்டு ஐபிஎல் தொடருடன் ஓய்வுப்பெறப்போவதாக கடந்த மே 14-ஆம் தேதி ட்விட்டரில் அறிவித்துவிட்டு பதிவை உடனே நீக்கினார். இதுகுறித்து சென்னை அணி சி.இ.ஓ காசி விஸ்வநாதன் கூறுகையில், 'ராயுடு கடந்த சில போட்டிகளில் சரியாக விளையாடாததால் மன உளைச்சலில் இருந்தார். அதனால் அவ்வாறு ட்வீட் செய்து பின் நீக்கிவிட்டார். அவர் தொடர்ந்து அணியில் இடம்பெறுவார்' என கூறினார்.
    இதை தொடர்ந்து நேற்று நடைபெற்ற குஜராத் டைடன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணியில் ராயுடு இடம்பெறவில்லை. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து சென்னை அணி தலைமை பயிற்சியாளர் ஃபிளெமிங் விளக்கம் அளித்துள்ளார். 
    அவர் கூறுகையில், ராயுடு கடந்த சில நாட்களாக தனிப்பட்ட காரணங்களுக்காக மன உளைச்சலில் இருந்தார். இப்போது அவர் சரியாகிவிட்டார். அவர் அணியில் தொடர்ந்து இடம்பெறுவார். எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை என தெரிவித்துள்ளார்.
    எம்எஸ் டோனி இல்லாமல் வெற்றி பெறுவது கடினம் என்று, அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் பிளெமிங் தெரிவித்துள்ளார். #IPL2019 #CSK
    ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் டோனி ஐதராபாத்துக்கு எதிரான போட்டியில் விளையாடவில்லை. முதுகு வலி காரணமாக அவர் விலகி இருந்தார். இதனால் சென்னை அணிக்கு ரெய்னா கேப்டனாக செயல்பட்டார். ஐதராபாத்துக்கு எதிரான அந்த போட்டியில் சென்னை சூப்பர்கிங்ஸ் தோல்வியை தழுவியது.

    இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது 10-வது லீக் ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன் மோதுகிறது. இந்த போட்டியில் டோனி விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் டோனி இல்லாமல் வெற்றி பெறுவது கடினம் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சியாளர் பிளெமிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    டோனி மிக சிறந்த வீரர். அவரைப் போன்ற வீரர் அணியில் விளையாட இயலாமல் போனால் அதை சரி கட்ட உங்களுக்கு மிகப்பெரிய வேலையாக இருக்கும். தற்போது அவர் சிறந்த பார்மில் உள்ளார்.



    இதனால் அணியில் சற்று பாதிப்பை ஏற்படுத்தத்தான் செய்யும். ஆனாலும் அதை சரி கட்டுவது அவசியம். டோனி இல்லாமல் வெற்றி பெறுவது கடினமான வி‌ஷயம்தான். பெங்களூர் மைதானத்தில் நடக்கும் போட்டியில் அதிக ரன் குவிப்பு ஆட்டமாக இருக்கும் என்று கருதுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×