search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிளமிங்"

    அவர்தான் வெற்றி பெறுவதற்கான திட்டம் எல்லாம் வைத்திருப்பார். நான் அதை செயல்படுத்துவேன் என்று கேப்டன் டோனி கூறியுள்ளார். #IPL2018 #CSKvSRH #IPLFinal #Dhoni
    மும்பை:

    சர்வதேச கிரிக்கெட்டிலும், ஐ.பி.எல். போட்டியிலும் வெற்றிகரமான கேப்டனாக செயல்படுபவர் டோனி. அவர் 10-வது முறையாக மிகப்பெரிய ஆட்டத்தின் இறுதிப்போட்டியில் ஆடுகிறார். ஏற்கனவே 6 ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் விளையாடி இருக்கிறார். இதில் 2 முறை பட்டம் பெற்றார். 20 ஓவர் உலக கோப்பையில் 2 முறையும், 50 ஓவர் உலக கோப்பையில் ஒரு முறையும் அவர் இறுதிப்போட்டியில் ஆடினார்.

    இதில் டோனி 2011 ஒருநாள் போட்டி உலக கோப்பையையும், 2007-ல் 20 ஓவர் உலககோப்பையும் பெற்று கொடுத்தார்.

    இன்றைய ஐ.பி.எல். இறுதிப்போட்டி தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான டோனி நிருபர்களிடம் கூறியதாவது:-


    இறுதிப்போட்டியில் வெற்றி பெற என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள் என கேட்கிறீர்கள். திட்டம் வைத்து இருப்பது எல்லாம் பயிற்சியாளர் பிளமிங் தான். நான் அதை செயல்படுத்துவேன். இதற்காக பிளமிங்குக்கு பெரிய பணத்துக்கான செக் கிடைக்கிறது. ஐதராபாத்துக்கு எதிரான ‘குவாலிபையர் 1’ ஆட்டத்தில் ஹர்பஜன் சிங்கை பந்துவீச அழைக்காதது ஏன்? என்று கேட்கிறார்கள்.


    எனது வீட்டில் நிறைய கார்களும், பைக்குகளும் இருக்கின்றன. ஆனால் அனைத்தையும் ஒரே நேரத்தில் பயன்படுத்துவது இல்லை. அது போலத்தான் அணியில் 6 மற்றும் 7 பந்துவீச்சாளர்கள் இருக்கும் போது யார் பேட்டிங் செய்கிறார் அந்த நேரத்தில் என்ன தேவை என்பது போன்ற சூழ்நிலையை பொறுத்து தான் பந்துவீச்சாளர்களை அழைக்க முடியும். அப்படித்தான் செயல்படுகிறேன். அந்த ஆட்டத்தில் ஹர்பஜன்சிங் பந்துவீச வேண்டிய தேவை ஏற்படவில்லை.

    ஒவ்வொரு ஐ.பி.எல். தொடரிலும் சிறந்த இந்திய வீரர்கள் உருவாகி இருக்கிறார்கள். இந்த தொடர் தீபக் சாஹர், ‌ஷர்துல் தாகூர், ஷிவம் மவி, கிருஷ்ணா ஆகியோர் வேகப்பந்தில் சிறப்பாக செயல்படுகிறார்கள்.

    இவ்வாறு டோனி கூறினார். #IPL2018 #CSKvSRH #IPLFinal #Dhoni
    கடினமான ஆடுகளத்தை தவிர்த்து மற்ற இடங்களில் ஜோஸ் பட்லர் கிளாஸ் பேட்ஸ்மேன் என்று ஸ்டீபன் பிளமிங் புகழாரம் சூட்டியுள்ளார். #IPL2018 #RRvCSK
    ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. முதலில் களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் பட்லரின் பொறுப்பான ஆட்டத்தால் 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. பட்லர் 60 பந்தில் 95 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றிக்கு உதவினார்.

    அவரது ஆட்டத்தை பாராட்டிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங், கடினமான ஆடுகளத்தை தவிர்த்து கிளாஸ் பேட்ஸ்மேன் என்று கூறியுள்ளார்.



    இதுகுறித்து ஸ்டீபன் பிளமிங் கூறுகையில் ‘‘பட்லருக்கு எதிராக நாங்கள் ஏராளமான திட்டம் வைத்திருந்தோம். அதில் லெஃப்ட் ஆர்ம் ஸ்பின்னும் ஒன்று. அதை நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். ஆனால், அது சரியாக வேலை செய்யவில்லை. கடினமான ஆடுகளத்தை தவிர்த்து பட்லர் கிளாஸ் பேட்ஸ்மேன். அவர் இன்னிங்ஸ் முழுவதும் பேட் செய்தார். அவரை முன்னதாகவே வீழ்த்தியிருந்தால் முடிவு வேறு மாதிரி இருந்திருக்கும்.

    நாங்கள் பென் ஸ்டோக்ஸை விரைவில் வீழ்த்திய போதிலும், பட்லரை அவுட்டாக்க முடியவில்லை. அவர் நங்கூரம் பாய்ச்ச மாதிரி நின்றுவிட்டார். முதல் ஆறு ஓவரில் முன்னேற்றம் அடைந்துவிட்டார்கள். இது ஒரு சிறந்த ஆட்டம். நாங்கள் இந்த போட்டியில் சிறப்பாக செய்திருக்கனும். ஆனால் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்த முடியாமல் போய்விட்டது’’ என்றார்.
    ×