search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரியா லால்"

    சுசீந்திரன் இயக்கத்தில் யுவன் இசையில் ரோஷன், பிரியா லால் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஜீனியஸ்’ படத்தின் விமர்சனம். #Genius #GeniusReview
    ஆடுகளம் நரேன்-மீரா கிருஷ்ணன் தம்பதியின் ஒரே மகன் ரோஷன். படிப்பில் படுசுட்டியாக திகழும் ரோஷனின் திறமையை உணர்ந்த தந்தை நரேன், அவனை சிறு வயது முதலே படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வைக்கிறார். தொடர்ந்து கோச்சிங் சென்டருக்கு அனுப்பி படிக்க வைத்து, பத்தாம் வகுப்பில் மாநிலத்திலேயே முதல் மார்க்கும் வாங்க வைக்கிறார். 

    இதனால், ரோஷனின் விளையாட்டு ஆர்வமும், சந்தோஷமும் பறி போகிறது. அதன் பின் ரோஷன் கல்லூரி படிப்பை முடித்து நல்ல ஐடி கம்பெனியிலும் வேலை கிடைத்து கை நிறைய சம்பாதிக்கிறார். இந்நிலையில் ரோஷனின் திறமையை பார்த்து மேலதிகாரி அதிக வேலைகளை கொடுக்கிறார். 

    இரவு பகல் பாராமல் வேலை செய்யும் ரோஷனுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் ரோஷன், குணமடைந்தாலும் மன அழுத்தத்தால் அடிக்கடி கோபப்படும் சூழ்நிலையும் தன்னிலை மறக்கும் நிலையும் உருவாகிறது. ரோஷனை குணப்படுத்த பெற்றோர்கள் பலவிதங்களில் முயற்சி செய்கிறார்கள். இவர்களின் முயற்சி வெற்றி பெற்றதா? ரோஷன் குணமடைந்தாரா? என்பதே மீதிக்கதை.



    இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி இருக்கிறார் ரோஷன். தன்னால் முடிந்தளவிற்கு சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். கதாநாயகியாக நடித்திருக்கும் பிரியாலால், சிறிது நேரம் மட்டுமே வந்தாலும் மனதில் நிற்கிறார். 

    பெற்றோர்களாக நடித்திருக்கும் நரேன், மீரா கிருஷ்ணன் ஆகியோரின் நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. வழக்கம்போல் இல்லாமல் வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். டாக்டராக ஜெயபிரகாஷ், சிங்கமுத்து, ஈரோடு மகேஷ், பாலாஜி, திலீபன் ஆகியோர் படத்தின் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவியிருக்கிறார்கள்.



    குழந்தைகளுக்கு படிப்பு மட்டும் போதாது கூடவே விளையாட்டும் முக்கியம் என்பதை ஜீனியஸ் படம் மூலம் சொல்லியிருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன். இந்தக் காலத்தில் பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் எப்படி நடந்துகொள்கிறார்கள்? என்பதை காட்சிகளில் பிரதிபலித்திருக்கிறார் இயக்குனர். அத்துடன் பெற்றோர்களுக்கு எச்சரிக்கையோடு நல்ல அறிவுரையும் வழங்கியிருக்கிறார்.

    யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையையும் ரசிக்க முடிகிறது. ஆர்.பி.குருதேவ்வின் ஒளிப்பதிவு ஆங்காங்கே பளிச்சிடுகிறது.

    மொத்தத்தில் ‘ஜீனியஸ்’ அட்வைஸ்.
    படிப்பு முக்கியம் தான், படிப்போடு விளையாட்டும் தேவை என்பதை படத்தில் மிகவும் ஆழமாக கூறியுள்ளோம் என்று இயக்குனர் சுசீந்திரன் கூறியுள்ளார். #Genius #Suseenthiran
    சுதேசிவுட் நிறுவனம் சார்பில் ரோஷன் தயாரித்து நடிக்கும் திரைப்படம் `ஜீனியஸ்'. சுசீந்தரன் இயக்கியிருக்கும் இந்த படம் வருகிற 26-ஆம் தேதி (நாளை) வெளியாக இருக்கிறது.

    படத்தை பற்றி இயக்குனர் சுசீந்திரன் கூறியதாவது, பத்து வருடங்களுக்கு முன்னர் ஒரு டீ கடையில் ஒரு நபரை பார்த்தேன். ஐடியில் வேலை செய்பவரை போல் நன்றாக உடை அணிந்துக்கொண்டு டீ ஆர்டர் செய்து அதை குடித்துவிட்டு பணம் கொடுக்காமல் திரும்பி சென்றார். அப்படி சென்ற அவரிடம் கடைகாரர் பணம் கேட்ட போது அவரிடம் பயங்கரமாக கோபப்பட்டு நாளை தருகிறேன் என்று கத்தி கூறினார். அந்த கோபம் பயங்கரமானதாக இருந்தது. 

    நல்ல படித்த, பெரிய வேலையில் உள்ள நபர் போல் தோற்றமளித்த அவரின் ஸ்ட்ரெஸ்க்கு காரணம் என்னவாக இருக்கும் என்று யோசிக்கும் போது தோன்றிய கதை தான் இந்த படத்தின் கதை. இக்கதையை நான் விஜய், அல்லு அர்ஜுன் மற்றும் ஜெயம் ரவி போன்ற பல ஹீரோக்களிடம் கூறியுள்ளேன். அனைவருக்கும் இக்கதையில் நடிக்கவேண்டும் என்று ஆசை. ஆனால் இக்கதையில் ஹீரோ இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று எனக்கு தோன்றியது. ஹீரோவுக்காக கதை பண்ணாமல் இக்கதைக்கான ஹீரோவை படத்தின் கதையே முடிவு செய்தது.



    இப்படம் கல்வி பற்றி பேசும் படமாக இருக்கும். தமிழில் வெளிவந்த படங்களில் கல்வி மையமாக கொண்டு வெளிவந்த திரைப்படங்களில் ஜீனியஸ் முக்கியமான படமாக இருக்கும். ஒரு படைப்பாளிக்கு கதையை எழுதிவிட்டு அதை படமாக திரையில் பார்க்க வேண்டும் என்று ஆசை இருக்கும். எனக்கும் அந்த ஆசை இருந்தது, அது ரோஷன் மூலம் நிறைவேறியுள்ளது. ரோஷன் நல்ல தயாரிப்பாளர் விரைவில் நல்ல நடிகராக அனைவராலும் அறிப்படுவார். 

    இன்று ஆங்கில வழி கல்வி முக்கியமான ஒன்றாகிவிட்டது. எனக்கு ஆங்கிலம் பெரிதாக தெரியாது, நான் 12-ஆம் வகுப்பு வரை தமிழ் வழி கல்வி தான் கற்றேன். நமது அரசாங்கம் ஆங்கில வழி கல்வியை இலவசமாக வழங்க வேண்டும். அப்போது தான் அனைவராலும் ஆங்கிலம் எளிதாக பயின்று பேச முடியும். இன்று ஆங்கிலம் மிகவும் தேவையான ஒன்றாகிவிட்டது. படத்தில் படிப்போடு விளையாட்டும் தேவை என்பதை மிகவும் ஆழமாக கூறியுள்ளோம் என்றார் இயக்குனர் சுசீந்திரன். #Genius #Suseenthiran

    ×