search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரவைக்"

    • பெங்களூரை சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன ஸ்டார்ட்அப் புது எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் அறிமுகம் செய்து இருக்கிறது.
    • இது அந்நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் என்பதோடு முழு சார்ஜ் செய்தால் 500 கிமீ ரேன்ஜ் வழங்குகிறது.

    பெங்களூரை சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன ஸ்டார்ட்அப் பிரவைக் தனது முதல் எலெக்ட்ரிக் எஸ்யுவி - டெஃபி-யை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய பிரவைக் டெஃபி எஸ்யுவி விலை ரூ. 39 லட்சத்து 50 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    பிரவைக் டெஃபி அந்நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் வாகனம் ஆகும். மேலும் இந்த கார் பவர், ஸ்பீடு மற்றும் ரேன்ஜ் உள்ளிட்டவைகளில் அதிரடி நம்பர்களை குறி வைத்து எட்டியிருக்கிறது. இது போன்ற செயல்திறன் கொண்ட தயாரிப்புகளை ஜெர்மனி மற்றும் தென் கொரிய நிறுவனங்கள் மட்டுமே இந்திய சந்தையில் வழங்கி வருகின்றன.

    புதிய பிரவைக் டெஃபி மாடலில் 402 ஹெச்பி பவர் மற்றும் 620 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் திறன் இரு ஆக்சில்களுக்கும் சமமாக பிரித்து வழங்கப்படுகிறது. மேலும் புதிய டெஃபி மாடல் ஆல் வீல் டிரைவ் வசதி கொண்டிருக்கிறது.

    இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 4.9 நொடிகளில் எட்டிவிடும். மேலும் மணிக்கு அதிகபட்சம் 210 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. பிரவைக் டெஃபி மாடலில் உள்ள 90.2 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் முழு சார்ஜ் செய்தால் 500-க்கும் அதிக கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்குகிறது.

    ×