search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரதமர் வேட்பாளர் போட்டி"

    பிரதமர் வேட்பாளருக்கான போட்டியில் மம்தாபானர்ஜி முன்னிலையில் இருப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. #Parliamentaryelection, #MamataBanerjee
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் - மே மாதங்களில் நடக்கிறது. இந்த தேர்தலில் ஆளும் பா.ஜனதாவை வீழ்த்த காங்கிரஸ் அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறது.

    பா.ஜனதாவுக்கு எதிராக அனைத்து மாநில கட்சிகளையும் ஒன்று திரட்டி வலுவாக எதிர்க்க ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளார். அதன்படி பிரதமர் பதவியையும் விட்டு கொடுக்க காங்கிரஸ் கட்சி தயாராக இருக்கிறது.

    மாநில கட்சியை சேர்ந்த ஒருவரை பிரதமர் வேட்பாளராக முன்நிறுத்த முடிவு செய்து இருப்பதாக தெரியவந்துள்ளது. குறிப்பாக மாநில கட்சியின் பெண் தலைவரை பிரதமர் பதவிக்கு நிறுத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் பிரதமர் வேட்பாளர் பதவியில் மம்தாபானர்ஜி முன்னிலையில் இருப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த கட்சியின் தலைவர்களில் ஒருவரான டெரிக் ஒ பிரையன் கூறியதாவது:-


    2018-19-ம் ஆண்டு கூட்டாட்சி என்று நினைக்கிறேன். ஏனென்றால் மாநில கட்சிகள் மத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் மம்தா பானர்ஜிதான் இந்த அணிக்கு மிக மூத்த தலைவர்களில் ஒருவராக மதிப்பீடப்படுவார்.

    எல்லோரது கவனமும் பா.ஜனதாவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதாகும். பிரதமர் பதவிக்கு மம்தா பானர்ஜியே தகுதியானவர். புதிதாக எதுவுமில்லை. அவரே பிரதமர் வேட்பாளர்களில் முன்னிலையில் உள்ளார்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    மற்றொரு திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சுதீப் பிரதமர் பதவியை காங்கிரஸ் தியாகம் செய்யும் முடிவை வரவேற்றுள்ளார். #Parliamentaryelection, #PMCandidate #MamataBanerjee
    ×