search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரதமர் மோடி இரங்கல்"

    கங்கை நதியை சுத்தப்படுத்த வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய சமூக ஆர்வலர் அகர்வால் மரணத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். #Agarwal #SaveGanga #Modi
    புதுடெல்லி:

    கங்கை நதியை சுத்தப்படுத்த வலியுறுத்தி சமூக ஆர்வலர் ஜிடி அகர்வால் 4 மாத காலமாக உண்ணாவிரதம் இருந்து வந்தார். 

    87 வயதான அகர்வால் ஜூன் 22 முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். போராட்டம் 100 நாட்களை தாண்டிய நிலையில், நேற்று அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து அவர் ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 



    இந்நிலையில், சமூக ஆர்வலர் அகர்வால் மரணம் அடைந்தத்ற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
     
    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், அகர்வால் மரணம் அடைந்த செய்தி கேட்டு துயரத்தில் ஆழ்ந்துள்ளேன். அவரது பரந்த அறிவு மற்றும் சமூகத்தின் பால் அவர் கொண்டுள்ள அக்கறையை எண்ணிப் பார்க்கிறேன்.

    குறிப்பாக, கங்கை நதியை தூய்மைப்படுத்தும் விவகாரத்தில் அவர் நடத்திய போராட்டம் என்றென்றும் நினைவில் பசுமையாக இருக்கும் என பதிவிட்டுள்ளார். #Agarwal #SaveGanga #Modi
    ஐ.நா. சபையின் முன்னாள் செயலாளரும் நோபல் பரிசு பெற்றவருமான கோபி அன்னான் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். #PMcondoles #KofiAnnan #RIPKofiAnnan
    புதுடெல்லி:

    ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச்செயலாளராக 10 ஆண்டுகள் பதவி வகித்த கோபி அன்னான் தனது 80-ம் வயதில் சுவிட்சர்லாந்தில் இன்று மரணம் அடைந்தார்.

    அவரது மறைவுக்கு உலக நாடுகளின் பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவ்வகையில், கோபி அன்னான் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.


    ‘ஐ.நா. சபையின் முன்னாள் செயலாளரும், நோபல் பரிசு பெற்றவருமான கோபி அன்னான் மறைவு செய்தி கேட்டு நாங்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளோம். ஆப்பிரிக்காவை சேர்ந்த பெரும் தலைவராக மட்டுமல்லாமல் மனிதநேயம் மிக்கவராகவும், உலகநாடுகள் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் இருக்க எண்ணியவருமான அவரை உலகம்  இழந்து விட்டது.

    இந்த நூற்றாண்டின் இலக்குகளை எட்ட அவர் ஆற்றிய பங்களிப்பு என்றென்றும் நினைவுகூரத்தக்கதாகும். இந்த சோகமயமான வேளையில் அவரை இழந்து துயரப்படும் அபிமானிகள் மற்றும் குடும்பத்தாருடன் எனது நினைவுகள் இணைந்திருக்கும். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்’ என்று தனது இரங்கல் செய்தியில் மோடி குறிப்பிட்டுள்ளார். #PMcondoles #KofiAnnan #RIPKofiAnnan
    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மேகாலயா மாநில முன்னாள் கவர்னருமான எம்.எம்.ஜேக்கப் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
    திருவனந்தபுரம்:

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மேகாலயா மாநில முன்னாள் கவர்னராகவும் இருந்தவர் எம்.எம்.ஜேக்கப் (வயது90).

    கேரள மாநிலம் கோட்டயத்தை அடுத்த பாலாவைச் சேர்ந்தவர் எம்.எம். ஜேக்கப். வயது முதிர்வு காரணமாக கடந்த சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். பாலாவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த எம்.எம்.ஜேக்கப் நேற்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இவரது இறுதி சடங்கு இன்று பிற்பகல் நடக்கிறது. எம்.எம்.ஜேக்கப்பின் சொந்த ஊரான பாலா, ராமபுரத்தில் உள்ள புனித அகஸ்டின் ஆலயத்தில் நடக்கும் திருப்பலிக்கு பிறகு உடல் அடக்கம் நடைபெறுகிறது.

    எம்.எம்.ஜேக்கப் 1928-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9-ந்தேதி பிறந்தார். பள்ளி படிப்பை கேரளாவிலும், கல்லூரி படிப்பை சென்னை லயோலா கல்லூரி மற்றும் லக்னோ பல்கலைக்கழகத்திலும் படித்தார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக திகழ்ந்த எம்.எம்.ஜேக்கப் மாநில மந்திரியாகவும், மத்திய மந்திரியாகவும் பதவி வகித்தவர்.

    டெல்லி மேல் சபை துணைத்தலைவராகவும் இருந்தார். அதன் பிறகு மேகாலயா மாநில கவர்னராக 2 முறை பதவி வகித்தார்.


    எம்.எம்.ஜேக்கப் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கேரள மாநில வளர்ச்சிக்கு சிறந்த சேவை ஆற்றியவர் எம்.எம்.ஜேக்கப். மிகச்சிறந்த பாராளுமன்றவாதியாகவும் திகழ்ந்தார். அதோடு மத்திய மந்திரி பொறுப்பிலும், கவர்னராகவும் சிறப்பாக செயல்பட்டவர். அவரது மறைவால் வருந்தும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

    இது போல காங்கிரஸ் தலைவர்கள், பல்வேறு கட்சி தலைவர்களும் எம்.எம். ஜேக்கப் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    இறந்து போன எம்.எம். ஜேக்கப்பின் மனைவி அச்சம்மாள். இவர் ஏற்கனவே இறந்து விட்டார். #MMJacob
    ×