search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிட்காயின்ஸ்"

    • அச்சரப்பள்ளம் கிராம மக்கள் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கண்ணீர் மல்க புகார் மனு அளித்துள்ளனர்.
    • பிட்காயினில் முதலீடு செய்தால் பல லட்ச ரூபாய் சம்பாதிக்கலாம் என ஆசை ஏற்படுத்தி உள்ளார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த அச்சரப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்களிடம் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் என்பவர் அறிமுகம் ஆனார்.

    அவர் பிட்காயினில் முதலீடு செய்தால் பல லட்ச ரூபாய் சம்பாதிக்கலாம் என ஆசை ஏற்படுத்தி உள்ளார்.

    இதனால் அதிக வட்டியும் தங்க நாணயமும் வந்து சேரும் என்று தெரிவித்தார். இதனை நம்பிய கிராமத்தைச் சேர்ந்த 22 பேர் சுமார் ரூ.80 லட்சம் ரொக்க பணத்தை ஆனந்தனிடம் கொடுத்தனர். ஆனால் அவர் அதற்கு கூடுதல் பணம் கொடுக்க வில்லை. மேலும் அசல் பணத்தையும் திருப்பி கொடுக்க மறுத்து மிரட்டல் விடுத்தார்.

    இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அச்சரப்பள்ளம் கிராம மக்கள் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கண்ணீர் மல்க புகார் மனு அளித்துள்ளனர்.

    அந்த புகார் மனுவில் மோசடி செய்து பணத்தைப் பறித்த நபரிடம் இருந்து பணத்தை மீட்டு தர வேண்டும் என்று தெரிவித்து உள்ளனர்.

    ×