search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிஎம் நரேந்திர மோடி"

    பி.எம். நரேந்திரமோடி படத்தை தேர்தல் கமி‌ஷன் அதிகாரிகள் நேரில் பார்த்து இதை வெளியிடலாமா? இல்லையா? என்று பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #PMNarendraModi
    புதுடெல்லி:

    பிரதமர் மோடி வாழ்க்கை வரலாற்றை சித்தரித்து ‘பி.எம். நரேந்திரமோடி’ என்ற சினிமா படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

    இதில் நடிகர் விவேக் ஒபராய் கதாநாயகனாக நடித்து உள்ளார். டைரக்டர் ஒமுங்குமார் இயக்கி இருக்கிறார்.

    இந்த படத்தை கடந்த 5-ந்தேதி வெளியிடுவதாக அறிவித்து இருந்தனர். ஆனால் படத்தை வெளியிட காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது.

    பாரதிய ஜனதாவுக்கு ஆதாயம் தரும் வகையில் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் படத்தை வெளியிடுவது தேர்தல் விதி முறைகளை மீறும் செயல் என்று காங்கிரஸ் கூறியது.

    இது சம்பந்தமாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. தேர்தல் கமி‌ஷன்தான் இதுபற்றி முடிவு எடுக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியது.

    இதையடுத்து தேர்தல் கமி‌ஷன் ஆய்வு செய்தது. படம் அரசியல் ஆதாயம் தேடும் வகையில் இருக்கலாம் என்று கருதுவதால் படத்தை வெளியிட தற்காலிகமாக தடை விதிப்பதாக தேர்தல் கமி‌ஷன் தனது உத்தரவில் கூறியது.

    இதை எதிர்த்து தயாரிப்பாளர் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் புதிய தனு தாக்கல் செய்தனர்.



    தேர்தல் கமி‌ஷன் உத்தரவு, கருத்து, பேச்சு சுதந்திரத்தை தடுப்பதாக உள்ளது. இந்த படம் சமுதாய கருத்துக்களை முன்வைத்தே தயாரிக்கப்பட்டுள்ளது. அரசியல் சார்பு படம் அல்ல என்று தயாரிப்பாளர் தரப்பில் கோர்ட்டில் வாதாடினார்கள்.

    இதற்கு நீதிபதிகள் இந்த படத்தை தேர்தல் கமி‌ஷன் அதிகாரிகள் நேரில் பார்த்து இதை வெளியிடலாமா? இல்லையா? என்று பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும். இதற்காக தயாரிப்பாளர் படத்தை தேர்தல் கமி‌ஷன் அதிகாரிகளுக்கு திரையிட்டு காட்ட வேண்டும் என்று உத்தரவிட்டனர். #PMNarendraModi
    ×