search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாலமுருகன் கோவில்"

    • இந்த கோவிலின் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேக விழாவுக்காக கடந்த மாதம் 26-ந் தேதி முகூர்த்தகால் நடப்பட்டது.
    • விழாவில் முனிசிப ல்காலனி மற்றும் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டு சென்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட முனிசிபல்காலனி பாப்பாத்திகாடு 2-வது வீதியில் பாலமுருகன் கோவில் உள்ளது. இங்கு செல்வகணபதி, தர்ம சாஸ்தா, சிவகாமசுந்தரி, அம்பிகை சமேதே கைலாச நாதர் மற்றும் லட்சுமி நாராயணர், ராம பக்த ஆஞ்சநேயர் சன்னதிகள் உள்ளன.

    இந்த கோவிலின் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேக விழாவுக்காக கடந்த மாதம் 26-ந் தேதி முகூர்த்தகால் நடப்பட்டது. கோவிலின் கும்பாபிஷேக விழா கடந்த 4-ந் தேதி காலை கணபதி பூஜை, நவக்கிரஹ, மகாலட்சுமி ஹோமத்துடன் தொடங்கியது.

    அன்று மாலை ரக்‌ஷா பந்தனம், 108 திரவியங்களால் திரவியாகுதி, திருமறை பாராயணம் நடந்தது.

    நேற்றுவேத பாராயணம், மகா பூர்ணாகுதி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான கும்பாபிஷேகம் இன்று காலை நடந்தது. இதில் சிவாச்சாரி யார்கள் பங்கேற்று கோவிலின் கும்பம், மூலவர் மற்றும் பரிவார பீடங்களுக்கு புனித நீர் ஊற்றி குடமுழுக்கு செய்து வைத்தனர்.

    விழாவில் முனிசிப ல்காலனி மற்றும் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டு சென்றனர். விழாவை யொட்டி பக்தர்களுக்கு அன்ன தானமும் வழங்கப்பட்டது. நாளை (வியாழக்கி ழமை) முதல் மண்டல பூஜைகள் தொடங்க உள்ளது.

    ×