search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பார்சல் சர்வீஸ் அலுவலகம்"

    கோயம்பேடு தனியார் பார்சல் சர்வீஸ் அலுவலகத்தில் ரூ.11 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்களை லாரியுடன் பறிமுதல் செய்த போலீசார் 3 பேரை கைது செய்தனர். #gutkaseized
    போரூர்:

    கோயம்பேடு மற்றும் சுற்று வட்டார பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட பொருட்கள் மொத்தமாக பல்வேறு பகுதிகளுக்கு சப்ளை செய்யப்படுவதாக கோயம்பேடு போலீசா ருக்கு புகார் வந்தது.

    உதவி கமி‌ஷனர் ஜான் சுந்தர் மற்றும் இன்ஸ்பெக்டர் ராஜகுமார் ஆகியோர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கோயம்பேடு தெற்கு மாட வீதியில் உள்ள தனியார் பார்சல் சர்வீஸ் அலுவலகத்தில் குட்கா பொருட்கள் பார்சல் மூலம் வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது .

    இதையடுத்து இன்று காலை பார்சல் சர்வீஸ் அலுவலகத்தில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு இரண்டு மினி லாரிகளில் பார்சல் மூட்டைகளை போல குட்கா பொருட்களை ஏற்றிக்கொண்டு இருந்தனர்.

    உடனடியாக அங்கிருந்த ஊழியர்களான தாம்பரம் கஸ்தூரிபாய் நகரைச் சேர்ந்த விஜயகுமார், விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்த அன்வர், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த விஜய் என்கிற முன்னாராம் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். 2 மினி லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டது. கைப்பற்றப்பட்ட குட்காவின் மதிப்பு சுமார் ரூ. 11 லட்சம் ஆகும்.

    எங்கிருந்து குட்கா பொருட்கள் பார்சல் மூலம் வருகிறது. அதை யார் அனுப்பி வைக்கின்றனர். எங்கு சப்ளை செய்யப்படுகிறது என்கிற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். #gutkaseized

    ×