search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாராளுமன்ற மேல்சபை"

    பாராளுமன்ற மேல்சபையில் காலியாக இருந்த பதவிகளில் 4 உறுப்பினர்களை நியமனம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று உத்தரவிட்டுள்ளார். #RamShakal #4nominatedtoRajyaSabha
    புதுடெல்லி:

    பாராளுமன்ற மேல்சபைக்கு மாநிலங்களை சேர்ந்த சட்டசபை உறுப்பினர்கள் வாக்களித்து தேர்வு செய்யும் நபர்களை தவிர பல்வேறு துறைகளை சேர்ந்த 12 பிரபலங்களை ஜனாதிபதி நியமனம் செய்வது மரபாக உள்ளது.



    அவ்வகையில், காலியாக இருந்த பதவிகளில் 4 உறுப்பினர்களை நியமனம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று உத்தரவிட்டுள்ளார்.

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த தலித் இனத்தவரும் விவசாயிகள் சங்க தலைவருமான ராம் ஷகல், ஆர்.எஸ்.எஸ். இயக்க முன்னோடியும், டெல்லி பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மோதிலால் நேரு கல்லூரி  பேராசிரியருமான ராகேஷ் சின்ஹா ஆகியோர் எம்.பி.க்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.  இவர்களில் ராம் ஷகல் ஏற்கனவே பாராளுமன்ற மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, மக்கள் பணியாற்றியவராவார்.

    மேலும், கற்சிற்பக்கலை வல்லுனரான ரகுநாத் மோஹாபத்ரா, பிரபல நாட்டியக் கலைஞரும் நடனக் கலை ஆசிரியையுமான சோனால் மான்சிங் ஆகியோரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    இவர்களில் ரகுநாத் மோஹாபத்ரா பூரி ஜகநாதர் ஆலயத்தின் பழங்கால சிற்பங்களை பொலிவூட்ட அரும்பணியாற்றியுள்ளார். பாராளுமன்ற மைய மண்டபத்தில் உள்ள சூரியக் கடவுளின் சிலை மற்றும் பாரிஸ் நகர புத்த ஆலயத்தில் உள்ள மரத்திலான புத்தர் சிலையையும் வடித்ததுடன் சுமார் 2 ஆயிரம் சிற்பக்கலை மாணவர்களையும் உருவாக்கியுள்ளார்.

    சமூகச் சேவகியும், பரதநாட்டியம் மற்றும் ஒடிசி நாட்டிய கலைஞருமான சோனால் மான்சிங் டெல்லியில் இந்திய பாரம்பரிய நாட்டிய கலை பள்ளி ஒன்றை பலகாலமாக நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #RamShakal #4nominatedtoRajyaSabha
    ×