search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாட்னா மாணவி கற்பழிப்பு"

    பள்ளிக்கூடத்தில் கடந்த 7 மாதமாக ஏழை மாணவியை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கூட்டு சேர்ந்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பீகாரில் சரன் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    பாட்னா:

    பீகார் மாநிலம் சரன் மாவட்டத்தில் பர்சகர் என்ற ஊரில் திபேஸ்வர் பால் வித்யா நிகேதன் எனும் பள்ளிக்கூடம் உள்ளது.

    அந்த பள்ளியில் சுமிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மாணவி 10-ம் வகுப்பு படித்து வருகிறாள்.

    மாணவி சுமிதா அனைவரிடமும் மிக எளிதாக பழகும் இயல்பு கொண்டவள். உடன் படிக்கும் மாணவர்களிடமும் சகஜமாக பழகி வந்தாள். ஆனால் மாணவர்களில் சிலர் அதை தவறான கண்ணோட்டத்துடன் நினைத்தனர்.

    கடந்த டிசம்பர் மாதம் பள்ளி அரையாண்டு தேர்வு நடந்த சமயத்தில், அந்த மாணவி கழிவறைக்கு சென்ற போது 5 மாணவர்கள் பின் தொடர்ந்து சென்று அவளை மடக்கிப் பிடித்து பாலியல் பலாத்காரம் செய்தனர். 5 மாணவர்களும் அந்த மாணவியை கூட்டு சேர்ந்து கற்பழித்தனர்.

    மாணவி சுமிதா பலாத்காரம் செய்யப்பட்டதை மாணவர்களில் ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்தார். பிறகு 5 மாணவர்களும் அந்த செல்போன் பதிவு காட்சியை காண்பித்து மாணவியை மிரட்டி அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்தனர். நாளடைவில் அந்த 5 மாணவர்களின் நண்பர்களுக்கும் இது பற்றி தெரிய வந்தது.

    அவர்களும் அந்த செல்போன் காட்சியை காட்டி மாணவியை மிரட்டி கற்பழித்தனர். 15 மாணவர்கள் சுமார் 1 மாதமாக இந்த கொடூரத்தை அடிக்கடி செய்து வந்தனர். ஏழை குடும்பத்தை சேர்ந்த மாணவி சுமிதா, இந்த கொடூரத்தில் இருந்து எப்படி தப்பிப்பது என்பது தெரியாமல் தவித்து வந்தார்.

    இந்த நிலையில் 10-ம் வகுப்பு ஆசிரியர் ஒருவர், தனது மாணவர்களில் சிலரது நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை பார்த்தார். சந்தேகத்தின் பேரில் ஒரு மாணவனின் செல்போனை வாங்கி அவர் ஆய்வு செய்த போது, மாணவி சுமிதா பாலியல் பலாத்காரம் செய்யப்படும் காட்சிகளைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    இதுபற்றி அவர் தலைமை ஆசிரியர் உதயகுமார் சிங்கிடம் தெரிவித்தார். செல்போன் பதிவு காட்சிகளையும் காண்பித்தார். இதைத் தொடர்ந்து மாணவி சுமிதாவையும், சில மாணவர்களையும் அழைத்து விசாரித்தார்.

    மாணவர்கள் மீது அவர் கடும் நடவடிக்கை எடுப்பார் என்று ஆசிரியர் எதிர்பார்த்தார். ஆனால் தலைமை ஆசிரியர் உதய்குமார் சிங்குக்கு மனநிலை வேறு மாதிரி இருந்தது. செல்போன் காட்சிகளைப் பார்த்த அவர் மனம் சபலப்பட்டது. அவரும் மாணவியை அடைய துடித்தார்.

    மாணவி சுமிதாவை தனியாக அழைத்து விசாரித்த அவரும் அந்த மாணவியை கற்பழித்தார். மாணவியிடம் விசாரணை என்ற பெயரில் அடிக்கடி அழைத்து அவர் தனது காம இச்சையை தனித்துக் கொண்டார். கடந்த 7 மாதமாக இந்த கொடூரம் நடந்தது.

    இதற்கிடையே மாணவி சுமிதாவை 15 மாணவர்கள் பாலியல் பலாத்காரம் செய்த வி‌ஷயம் 2 ஆசிரியர்களுக்கும் தெரிய வந்தது. அவர்களும் அந்த மாணவியை காப்பாற்றவில்லை. மாறாக அவர்களும் மாணவிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்தனர்.

    15 மாணவர்கள், 2 ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர் என 18 பேரிடமும் அந்த மாணவி சிக்கி 7 மாதமாக படாதபாடுபட்டார். பள்ளி வளாகத்திலேயே 7 மாதமாக இந்த பாலியல் பலாத்காரம் நடந்தது.

    இந்த நிலையில் மராட்டியத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த மாணவி சுமிதாவின் தந்தை கடந்த வாரம் பீகார் வந்திருந்தார். அவர் தனது மகளிடம் ஏற்பட்டுள்ள மாற்றத்தை பார்த்து விசாரித்தார். அப்போது தான் சுமிதா 7 மாதமாக மிரட்டி கற்பழிக்கப்பட்டது தெரிய வந்தது.

    அதிர்ச்சி அடைந்த அவர் இக்மா போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் செய்தார். ஆனால் போலீசார் முதலில் அந்த புகாரை ஏற்க மறுத்தனர். இதையடுத்து உயர் போலீஸ் அதிகாரிகளிடம் மாணவி சுமிதாவும், அவர் தந்தையும் முறையிட்டனர்.

    இதையடுத்து இக்மா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். பிறகு பள்ளி தலைமை ஆசிரியர் உதய்குமார் சிங், ஆசிரியர் பாலாஜி, இரண்டு மாணவரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

    ஒரு ஆசிரியர் மற்றும் 13 மாணவர்கள் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர். அவர்கள் 14 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

    பள்ளிக்கூடத்தில் கடந்த 7 மாதமாக ஏழை மாணவி மிரட்டி கற்பழிக்கப்பட்ட சம்பவம் பீகாரில் சரன் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயர் போலீஸ் அதிகாரிகள் அந்த பள்ளிக்கு சென்று விசாரணையை தீவிரப் படுத்தி உள்ளனர்.
    ×