search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாஜக பேரணி"

    பாராளுமன்ற தேர்தலில் ஆறுகட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்து இறுதிக்கட்ட பிரசாரம் சூடு பிடித்துள்ள நிலையில் பாஜக தலைவர் அமித் ஷாவின் பேரணிக்கு மேற்கு வங்காளம் அரசு அனுமதி மறுத்துள்ளது.
    கொல்கத்தா:

    ஏப்ரல் மாதம் 11-ம் தேதி தொடங்கி பாராளுமன்றத்துக்கு ஆறுகட்டங்களாக நடந்து முடிந்த தேர்தலில்  வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக தொண்டர்களிடையே கடுமையான மோதல்கள் நடந்தன.

    பிரதமர் மோடியும் மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி பானர்ஜியும் காரசாரமாக ஒருவரையொருவர் தாக்கி பேசி வருகின்றனர்.



    இந்நிலையில், இறுதிக்கட்ட பிரசாரத்துக்காக ஜாதவ்பூர் பகுதியில் பாஜக தலைவர் அமித் ஷாவின் மிக பிரமாண்டமான பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த பேரணிக்கு அனுமதி அளிக்க போலீசார் மறுத்து விட்டனர். இந்த பேரணியில் பங்கேற்பதற்காக அமித் ஷா வரும் ஹெலிகாப்டர் தரையிறங்கவும் அனுமதி மறுக்கப்பட்டதால் அம்மாநில பாஜகவினர் கொதிப்படைந்துள்ளனர்.

    சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் செல்ல அனுமதி அளித்த தீர்ப்பை எதிர்த்து கேரளாவில் இன்று பா.ஜ.க.வினர் பிரமாண்ட பேரணி நடத்தினர். #SabarimalaVerdict #BJPRally
    திருவனந்தபுரம்:

    சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோயிலுக்கு 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. இந்நிலையில் இது தொடர்பான பொதுநல மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், சபரிமலை ஐயப்பன் கோயிலும் அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்கலாம் என சமீபத்தில் தீர்ப்பு கூறியது.

    இந்த தீர்ப்பை எதிர்த்து முறையீடு செய்யப்போவதாக ஐயப்பன் கோயிலுக்கு ஆபரணங்களை அளித்துவரும் பந்தளம் அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.

    இதேபோல், கேரள மாநிலத்தில் சபரிமலை ஐயப்பன் கோயில், குருவாயூர் கோயில், பத்மநாபசாமி கோயில் உள்ளிட்ட 50 முக்கிய கோயில்களை நிர்வகித்துவரும் திருவிதாங்கூர் தேவசம் (தேவஸ்தானம்) சார்பிலும் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகின.

    ஆனால், சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பில் மேல்முறையீடு செய்யப் போவதில்லை என திருவிதாங்கூர் தேவஸ்தானம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது.

    இந்த தீர்ப்புக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் ஆர்ப்பாட்டங்களையும் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். அதேவேளையில் சிலர் இந்த தீர்ப்பை ஆதரிக்கின்றனர்.

    சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அமல்படுத்த இயலாதவாறு கேரள சட்டசபையில் அவசர சட்டம் இயற்றப்பட வேண்டும் என்னும் கோரிக்கையும் வலுத்து வருகிறது.

    இதற்கிடையில், துலாம் மாத சிறப்பு பூஜைக்காக வரும் 17-ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயில் திறக்கப்படவுள்ளதால் இதுதொடர்பான முன்னேற்பாடுகள் பற்றி ஆலோசிப்பதற்காக இந்த கோயிலின் தலைமை நிர்வாகிகள், தந்திரிகள் எனப்படும் தலைமை பூசாரிகள் கூட்டம் நாளை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தின்போது சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு பற்றியும் விவாதிக்கப்படலாம் என தெரிகிறது.



    இந்நிலையில், மத்தியில் ஆளும் பா.ஜ.க. சார்பில் இந்த தீர்ப்பை எதிர்த்து கேரள மாநில சட்டசபையை நோக்கி இன்று மாபெரும் பேரணி நடைபெற்றது.

    திருவனந்தபுரம் நகரின் முக்கிய சாலைகள் வழியாக சென்ற இந்த பேரணியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சியினரும் பங்கேற்றனர்.

    கேரள மாநில பா.ஜ.க. தலைவர் பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை தலைமையில் பாராளுமன்ற உறுப்பினரும் நடிகருமான சுரேஷ் கோபி, பாரதிய தர்ம சேனா தலைவர் துஷார் வேலப்பள்ளி உள்ளிட்டோர் இந்த பேரணியில் முன்வரிசையில் அணிவகுத்து சென்றனர்.

    பேரணியின்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஸ்ரீதரன் பிள்ளை, இவ்விவகாரத்தில் கேரள மாநில அரசு இன்னும் 24 மணி நேரத்துக்குள் தீர்வு காணாவிட்டால் எங்கள் போராட்டம் வேறு வடிவத்தில் தலைதூக்கும் என எச்சரித்துள்ளார்.  #SabarimalaVerdict #BJPRally
    கொல்கத்தாவில் வரும் 11-ம் தேதி பாஜக தலைவர் அமித் ஷா கலந்து கொள்ளவுள்ள பேரணிக்கு அனுமதி அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். #AmitShah
    கொல்கத்தா:

    அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் ஆட்சியை தக்கவைக்கும் வகையில் பாஜக திட்டமிட்டு தேர்தல் பிரசாரங்களை நடத்தி வருகிறது. #BJP #AmitShah

    அதன் ஒரு பகுதியாக, ஆகஸ்டு மாதம் 11-ம் தேதி மேற்கு வங்காளம் மாநிலத்தில் பாஜக சார்பில் மெகா பேரணி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பேரணியில் பாஜக தலைவர் அமித் ஷா கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.

    இந்நிலையில், கொல்கத்தாவில் வரும் 11-ம் தேதி பாஜக தலைவர் அமித் ஷா கலந்து கொள்ளவுள்ள பேரணிக்கு அனுமதி அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    ஏற்கனவே, மேற்கு வங்காள அரசின் அனுமதி இல்லாவிட்டாலும் நான் கொல்கத்தா செல்வேன். முடிந்தால் என்னை கைது செய்யுங்கள் என பாஜக தலைவர் அமித் ஷா இன்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. #BJP #AmitShah
    மேற்கு வங்காள அரசின் அனுமதி இல்லாவிட்டாலும் நான் கொல்கத்தா செல்வேன். முடிந்தால் என்னை கைது செய்யுங்கள் என பாஜக தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார். #AmitShah
    புதுடெல்லி:

    அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் ஆட்சியை தக்கவைக்கும் வகையில் பாஜக திட்டமிட்டு தேர்தல் பிரசாரங்களை நடத்தி வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக, ஆகஸ்டு மாதம் 11-ம் தேதி மேற்கு வங்காளம் மாநிலத்தில் பாஜக சார்பில் மெகா பேரணி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பேரணியில் பாஜக தலைவர் அமித் ஷா கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.

    இதற்கிடையே,  நேற்று முன்தினம் அசாம் குடிமக்கள் பதிவேடு தொடர்பான அறிக்கை வெளியானது. இது குறித்து மேற்கு வங்காளம் முதல் மந்திரி மம்தா பானர்ஜி கூறுகையில், இந்த அறிக்கையால் உள்நாட்டு போர் வெடிக்கும் எனக்கூறி அதிர்ச்சி அளித்தார். இதுதொடர்பாக பாஜக தலைவர்களை கடுமையாக சாடினார். 

    இந்நிலையில், மேற்கு வங்காள அரசின் அனுமதி இல்லாவிட்டாலும் நான் கொல்கத்தா செல்வேன். முடிந்தால் என்னை கைது செய்யுங்கள் என பாஜக தலைவர் அமித் ஷா இன்று தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், மேற்கு வங்காளம் மாநிலத்தில் வரும் 11-ம் தேதி பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்ப்பட்டுள்ள பேரணியில் பங்கேற்க செல்லவுள்ளேன். மாநில அரசு அனுமதி தராவிட்டாலும் நான் கண்டிப்பாக கலந்து கொள்வேன். முடிந்தால் என்னை கைது செய்யுங்கள் என ஆவேசமாக தெரிவித்துள்ளார். #AmitShah
    மேற்கு வங்க மாநிலத்தின் மிட்னாப்பூரில் ஜூலை 16-ம் தேதி நடைபெறவுள்ள பா.ஜ.க. பேரணியில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். #BJP #PMModi
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்தியில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இவரது ஆட்சியின் கீழ் நான்கு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

    அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளில் அனைத்து கட்சியினரும் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன் ஒரு பகுதியாக, பிரதமர் மோடி மேற்கு வங்க மாநிலத்தில் நடக்க உள்ள மெகா பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.

    மேற்கு வங்க மாநிலம் மிட்னாபூர் மாவட்டத்தில் பா.ஜ.க. சார்பில் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மெகா பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.

    அந்த பேரணியில் நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரித்து உத்தரவிட்டது உள்பட பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து உரையாற்ற உள்ளார் என பா.க.ஜ.வினர் தெரிவித்துள்ளனர். #BJP #PMModi
    ×