search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாஜக தலைவர் அமித்ஷா"

    சபரிமலை பக்தர்கள் மீது போலீசாரை வைத்து அடக்குமுறை நடவடிக்கைகள் எடுப்பதை கைவிட வேண்டும் என கேரள முதல் மந்திரி பினராயி விஜயனுக்கு பாஜக தேசிய தலைவர் அமித் ஷா எச்சரிக்கை விடுத்துள்ளார். #SabarimalaTemple #BJP #AmitShah #PinarayiVijayan
    திருவனந்தபுரம்:

    பாஜகவின் தேசிய தலைவர் அமித் ஷா இன்று கேரள மாநிலத்தின் கண்ணூரில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    இன்று கேரளாவில் மத நம்பிக்கைகள் மற்றும் மாநில அரசாங்கத்தின் கொடுமை ஆகியவற்றிற்கு இடையே ஒரு போராட்டம் நடக்கிறது. பாஜக, ஆர்எஸ்எஸ் மற்றும் பிற அமைப்புகளை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

    நீதிமன்ற தீர்ப்பை காட்டி வன்முறையை உருவாக்க முயல வேண்டாம். ஐயப்ப பக்தர்களின் நம்பிக்கையை மாநில அரசு புண்படுத்த நினைக்க கூடாது. சபரிமலை பக்தர்களோடும் அவர்களது நம்பிக்கையோடும் பாஜக என்றும் துணை நிற்கும்.



    இந்தியாவில் பல கோயில்களில் பலவிதமான விதிகளும், வழிபாடுகளும் உள்ளன என்பதை, கோர்ட் உத்தரவின்பேரில் சபரிமலை கோயிலுக்கு சென்று வன்முறையை தூண்ட நினைத்தவர்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

    சபரிமலையில் எப்படி பெண்களுக்கு அனுமதி இல்லையோ அதேபோல் இந்தியாவில் பல கோயில்களில் ஆண்களுக்கும் அனுமதி இல்லை.  எனவே ஐயப்ப பக்தர்களின் நம்பிக்கையை மாநில அரசு புண்படுத்த நினைக்க கூடாது என தெரிவித்துள்ளார். #SabarimalaTemple #BJP #AmitShah #PinarayiVijayan
    பிரதமர் மோடியின் ஆட்சியை பற்றி கேள்வி எழுப்புவதற்கு ராகுல் காந்திக்கு எந்த உரிமையும் கிடையாது என பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார். #AmitShah #RahulGandhi
    ராய்ப்பூர்:

    பாஜக தேசிய தலைவர் அமித் ஷா சட்டசபை தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக, சத்தீஸ்கர் மாநிலத்தில் தற்போது பிரச்சாரம் செய்து வருகிறார். 

    சத்தீஸ்கர் மாநிலத்தின்  குருபத் கிராமத்தில் உள்ள பிரயாககிரி மைதானத்தில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமித் ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

    கடந்த 60 ஆண்டு காலமாக காங்கிரசார் இந்தியாவை ஆட்சி செய்து வந்துள்ளனர். அப்பொழுது கிராமங்களுக்கு ஏன் மின்சார வசதி கிடைக்கவில்லை? விவசாயிகளுக்கு பயனளிக்க கூடிய கொள்முதல் விலை ஏன் கிடைக்கவில்லை?

    இந்தியாவை ஆட்சி செய்த 60 ஆண்டுகளின் கணக்குகளை காட்டவேண்டும் என மக்கள் உங்களிடம் எதிர்பார்க்கின்றனர். நீங்கள் பிரதமர் மோடியின் 4 ஆண்டு கால ஆட்சி குறித்து கணக்கு கேட்கிறீர்கள். உங்களுக்கு மோடி ஆட்சி பற்றி கேள்வி கேட்க எந்த உரிமையும் கிடையாது என தெரிவித்தார்.

    இந்த ஆண்டு இறுதியில், சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. #AmitShah #RahulGandhi
    நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்று சட்ட ஆணையத்துக்கு பாஜக தலைவர் அமித்ஷா கடிதம் எழுதி உள்ளார். #OneNationOnePoll #AmitShah #LawCommision
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி சட்ட ஆணையம் ஆய்வு செய்துவருகிறது. இதுதொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யும் முன்பு அனைத்து கட்சிகளின் கருத்தையும் கேட்க முடிவு செய்தது. இதற்காக அங்கீகரிக்கப்பட்ட 7 தேசிய கட்சிகள் மற்றும் 59 மாநில கட்சிகளுக்கு சட்ட ஆணையம் அழைப்பு விடுத்திருந்தது.

    மத்திய மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வி, பா.ஜனதா நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் விஜய் சஹஸ்ரபுத்தே, பூபேந்தர் யாதவ், அனில் பலுனி உள்பட கட்சியின் முக்கிய தலைவர்கள் சட்ட ஆணைய தலைவர் பி.எஸ்.சவுகானை சந்தித்து நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தினார்கள்.

    இந்த கருத்தை வலியுறுத்தி பாஜக நாளை முதல் 30-ம் தேதி வரை சமூக நீதி இயக்கம் நடத்த உள்ளது.

    இந்நிலையில், பாஜகவின் தேசிய தலைவர் அமித்ஷா சட்ட ஆணையத்துக்கு 8 பக்க கடிதம் அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்பது எங்கள் கருத்து மட்டுமல்ல, இது நிறைவேற்றப்பட வேண்டிய ஒரு கொள்கை முடிவு. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் செலவு குறையும். அதேபோல ஆண்டு முழுவதும் நாட்டின் ஏதாவது ஒரு பகுதியில் தேர்தல் நடைபெற்று வருவதும் தவிர்க்கப்படும்.

    இது நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்புக்கு எதிரானது என்பது ஆதாரமற்ற வாதம். மாறாக இது நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்பை வலுப்படுத்தும். இதுபற்றிய எதிர்க்கட்சிகளின் கருத்து அரசியலுக்காக கூறப்படுவதாகவே தெரிகிறது என கூறியுள்ளார்.

    முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் சமீபத்தில் சட்ட ஆணையத்தை சந்தித்து, நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்ற கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. #OneNationOnePoll #AmitShah #LawCommision
    பாஜகவின் சாதனைகளை விளக்கும் வகையில், பாஜக தலைவர் அமித்ஷா பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவாலை நேரில் சந்தித்தார். #BJP #AmitShah #SainaNehwal
    ஐதராபாத்:

    அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் ஆதரவு தரக்கோரி பாஜகவினர்  சம்பர்க் சே சமர்தான் என்ற பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த பிரச்சாரத்தில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா  உள்பட மத்திய மந்திரிகள், முக்கிய தலைவர்கள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு பிரபலங்களை சந்தித்து வருகின்றனர்.  இந்த சந்திப்பின்போது, பாஜக அரசின் நான்கு ஆண்டு கால சாதனைகள் குறித்த துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்படும்.

    அதன் ஒரு பகுதியாக, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா நேற்று தெலுங்கானா மாநிலத்துக்கு சென்றார். ஐதராபாத்தில் உள்ள பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் வீட்டுக்கு அமித்ஷா சென்றார்.

    அவரை நேரில் சந்தித்து  பாஜகவின் 4 ஆண்டுகால ஆட்சியின் சாதனைகள் குறித்து விளக்கினார். அப்போது அவருடன் பாஜகவின் முக்கிய பிரமுகர்கள் உடனிருந்தனர். #BJP #AmitShah #SainaNehwal
    பீகாரில் சுற்றுப்பயணம் செய்த பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, முதல் மந்திரி நிதிஷ்குமார் வீட்டில் இரவு உணவை முடித்து கவர்னரை சென்று சந்தித்தனர். #BJP #AmitShah #NitishKumar
    பாட்னா:

    கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பீகாரில் பாஜக கூட்டணி 31 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அந்தக் கூட்டணியில் தற்போது ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் இணைந்துள்ளது.

    இதற்கிடையே, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பாஜகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதற்கான பணியில் ஈடுபட்டு வருகிறார்.
      
    அதன் ஒரு பகுதியாக, பாஜக தலைவர் அமித் ஷா இன்று பீகார் சென்றார். அங்கு கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். மேலும், பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமாரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது அமித்ஷா செய்தியாளர்களிடம் கூறுகையில், பீகாரில் எங்கள் கூட்டணி ஆட்சி தொடரும் என தெரிவித்தார். 

    இந்நிலையில், பீகாரில் சுற்றுப்பயணம் செய்த பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, முதல் மந்திரி நிதிஷ்குமார் வீட்டுக்கு சென்றார். அங்கு அவரை பூங்கொத்து கொடுத்து வரவேற்றார் நிதிஷ்குமார். அதன்பின்னர், இருவரும் இரவு உணவை முடித்தனர். அதைத் தொடர்ந்து இருவரும் ராஜ்பவனுக்கு சென்று கவர்னரை சென்று சந்தித்தனர்.

    தே.ஜ. கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் மீண்டும் இணைந்த பிறகு அமித்ஷா பாட்னா வருவது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. #BJP #AmitShah #NitishKumar
    பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, வரவுள்ள பாராளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமாரை சந்தித்து இன்று ஆலோசனை நடத்துகிறார். #BJP #AmitShah #NitishKumar
    பாட்னா:

    கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பீகாரில் பாஜக கூட்டணி 31 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அந்தக் கூட்டணியில் தற்போது ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் இணைந்துள்ளது.

    இதற்கிடையே, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பாஜகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதற்கான பணியில் ஈடுபட்டு வருகிறார்.
     
    அதன் ஒரு பகுதியாக, பாஜக தலைவர் அமித் ஷா இன்று பீகார் செல்கிறார். அங்கு கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். மேலும், பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமாரை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.

    இன்று காலை 10 மணிக்கு விமான நிலையம் வரும் அமித் ஷா, அங்கிருந்து அரசு விருந்தினர் இல்லத்துக்குச் செல்கிறார். அங்கு நிதிஷ்குமாருடன் சிற்றுண்டி அருந்துகிறார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அமித் ஷா, இரவு நிதிஷ்குமார் வீட்டில் இரவு உணவு அருந்துகிறார்.

    இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் நித்யானந்தா ராய் கூறுகையில், அமித் ஷா கட்சித் தலைவராக பொறுப்பேற்ற பிறகு, உலகிலேயே மிகப்பெரிய அரசியல் கட்சியாக பாஜக வளர்ந்துள்ளது. இந்தப் பயணத்தின்போது பாஜகவின் ஊடக அணியினர் உள்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரை சந்தித்துப் பேசுகிறார் என தெரிவித்துள்ளார்.

    தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் மீண்டும் இணைந்த பிறகு அமித் ஷா பாட்னா வருவது இது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. #BJP #AmitShah #NitishKumar
    மேற்கு வங்காள மாநிலத்தில் உங்களின் எண்ணம் நிச்சயம் பலிக்காது என பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுக்கு திரிணாமுல் காங்கிரஸ் தகுந்த பதிலடி கொடுத்துள்ளது. #AmitShahinPurulia #MamataBanerjee
    கொல்கத்தா:

    பாஜக தேசிய தலைவர் அமித்ஷா இரண்டு நாள் பயணமாக மேற்கு வங்காள மாநிலத்துக்கு சென்றுள்ளார். அங்கு புரூலியா பகுதியில் பா.ஜ.க. சார்பில் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கலந்து கொண்டு பேசுகையில், இங்கு தாதாக்கள் ராஜ்ஜியம் நடைபெற்று வருகிறது. மோடி தலைமையிலான ஆட்சியில் மட்டுமே வளர்ச்சியை காண முடியும். மேற்கு வங்காளத்தின் இரண்டாவது பெரிய கட்சியாக பாஜக உருவாகி வருகிறது. விரைவில் பா.ஜ.க. இங்கு ஆட்சியை பிடிக்கும் என கடுமையாக சாடியுள்ளார்.

    இந்நிலையில், மேற்கு வங்காள மாநிலத்தில் உங்களின் எண்ணம் நிச்சயம் பலிக்காது என பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுக்கு திரிணாமுல் காங்கிரஸ் தகுந்த பதிலடி கொடுத்துள்ளது.



    இதுதொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் பார்த்தா சட்டர்ஜி கூறுகையில், பாஜக ஆளும் மாநிலங்களில் வரவுள்ள தேர்தல்களை பற்றி மட்டுமே அமித்ஷா கவனத்தில் கொள்ள வேண்டும்.  பாஜகவினரின் பிரித்தாளும் கொள்கை மேற்கு வங்காளத்தில் எடுபடாது.

    பொதுவாக காலி பாத்திரங்கள் தான் அதிக சத்தம் போடும். புருலியா கூட்டத்தில் பேசிய அமித்ஷாவின் இன்றைய பேச்சும் அப்படித்தான் உள்ளது.
    குஜராத் மற்றும் மற்ற மாநிலங்களில் பாஜகவின் செல்வாக்கு சரிந்து வருவதை நாங்கள் கண்கூடாகப் பார்த்து வருகிறோம் என காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார். #AmitShahinPurulia #MamataBanerjee
    மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற பாஜக தலைவர் அமித்ஷா பேசுகையில், இங்கு தாதாக்கள் ராஜ்ஜியம் நடைபெற்று வருகிறது என கடுமையாக சாடியுள்ளார். #AmitShahinPurulia #MamataBanerjee
    கொல்கத்தா:

    பாஜக தேசிய தலைவர் அமித்ஷா இரண்டு நாள் பயணமாக மேற்கு வங்காள மாநிலத்துக்கு சென்றுள்ளார். அங்கு புரூலியா பகுதியில் பா.ஜ.க. சார்பில் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

    வன்முறை என்பது வங்காளத்தின் கலாசாரம் அல்ல. இந்த மாநிலத்தில் குருதேவ் ரவீந்திரநாத் தாகூர், பங்கிம் சந்திர சட்டோபாத்யா உள்ளிட்ட பலர் அவதரித்துள்ளனர். ஆனால், மம்தா பானர்ஜி இங்கு வன்முறை கலாசாரத்தை நிறுவியுள்ளார்.

    சமீபத்தில் இங்கு நடந்த உள்ளாட்சி தேர்தலில் 20-க்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் கொல்லப்பட்டுள்ளனர். நடுநிலை மக்களை ஓட்டளிக்க அரசு அனுமதிக்கவில்லை. இங்கு குண்டர்கள் ராஜ்யம் நடக்கிறது. வெடிகுண்டுகள் தயாரிப்பு இங்கு பெருகி வருகிறது. மணல், நிலக்கரி கொள்ளை அதிகரித்துள்ளது. மாநில வளர்ச்சிக்கு பதில் இங்கு குண்டர்களின் வளர்ச்சியே அபாரமாக உள்ளது.

    மத்திய நிதி கமிஷனில் இருந்து மத்திய அரசு 3. 6 லட்சம் கோடி ரூபாய் வழங்கியுள்ளது. ஆனால் இந்த நிதி மக்களுக்கு சென்று சேரவில்லை. மோடி தலைமையிலான ஆட்சியில் மட்டுமே வளர்ச்சியை காண முடியும்.

    மேற்கு வங்காளத்தின் இரண்டாவது பெரிய கட்சியாக பாஜக உருவாகி வருகிறது. விரைவில் பாஜக இங்கு ஆட்சியை பிடிக்கும் என குறிப்பிட்டுள்ளார். #AmitShahinPurulia #MamataBanerjee
    தன்னுடைய அரசியல் எதிரி பா.ஜ.க. என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே சமீபத்தில் கூறிய நிலையில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா இன்று அவரை சந்தித்து பேசினார். #BJP #Amitshah #UddhavThackeray
    மும்பை:

    மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுக்கு சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் தோல்விக்கு மேல் தோல்வி ஏற்பட்டு வருகிறது.

    சிவசேனாவுக்கு ஆதரவாக இருந்த மாநில கூட்டணி கட்சிகள் ஒவ்வொன்றாக கூட்டணியில் இருந்து வெளியேறியது தான் இதற்கு காரணம் என்று தெரியவந்துள்ளது.

    அடுத்த ஆண்டு (2019) பாராளுமன்றத்துக்கு தேர்தல் வர உள்ள நிலையில் தற்போதைய நிலை நீடித்தால் அதிக இடங்களில் வெற்றி பெற இயலாது என்ற அபாய நிலைக்கு பா.ஜ.க. தள்ளப்பட்டுள்ளது.

    எனவே, இந்த அபாயத்தை முன்கூட்டியே சரிப்படுத்த பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் பழைய கூட்டணி கட்சிகளை மீண்டும் அரவணைத்துச் செல்லும் நடவடிக்கைகளை தொடங்கி உள்ளார்.

    இதன் ஒரு பகுதியாக, மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனாவுடன் இணக்கமாக செல்ல பா.ஜ.க. தீர்மானித்துள்ளது. இதற்காக அமித்ஷா இன்று மகாராஷ்டிரா மாநிலம் சென்றார். மும்பையில் உள்ள சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேயை அவரது வீட்டில் அமித்ஷா சந்தித்து பேசினார். அவருடன் மகாராஷ்டிரா முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் முக்கிய பிரமுகர்களும் சென்றனர்.

    இதுதொடர்பாக பாஜகவினர் கூறுகையில், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவை அமித்ஷா இன்று சந்தித்தார். இந்த 
    சந்திப்பின் மூலம் இரு கட்சிகளுக்கு இடையிலான விரிசல்கள் களையப்படும். மேலும், தொடர்ந்து இதுபோன்ற சந்திப்புகள் அமையவுள்ளன என தெரிவித்துள்ளனர். #BJP #Amitshah #UddhavThackeray
    ×