search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாஜக எம்பிக்கள் அமளி"

    ரபேல் விவகாரம் தொடர்பாக ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மாநிலங்களவையில் இன்று கடும் அமளியில் ஈடுபட்டதால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. #RafaleDeal #WinterSession #RajyaSabhaAdjourned
    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், மாநிலம் சார்ந்த பிரச்சனைகள் மற்றும் பாஜக ஆட்சிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. எதிர்க்கட்சிகள் கொடுத்த ஒத்திவைப்பு தீர்மானங்கள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. இதனால் உறுப்பினர்கள் போராட்டம் நீடிக்கிறது.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில் காலை 11 மணிக்கு பாராளுமன்றம் கூடியது. அப்போது, மக்களவையில் மேகதாது விவகாரம் தொடர்பாக அதிமுக உறுப்பினர்கள் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். ரபேல் போர் விமான ஒப்பந்த ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தும்படி காங்கிரஸ் எம்பிக்கள் முழக்கமிட்டனர்.

    மேலும் ரபேல் விவகாரத்தில் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் கூறி வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி பாஜக எம்பிக்கள் முழக்கம் எழுப்பினர்.


    ரபேல் ஒப்பந்த முறைகேடு புகார் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையடுத்து பாஜக எம்பிக்கள் இந்த விவகாரத்தை எழுப்பினர். பதிலுக்கு காங்கிரஸ் எம்பிக்களும் எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பியதால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து அவை நடவடிக்கைகள் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

    இதேபோல் மாநிலங்களவையிலும் மாநிலம் சார்ந்த பிரச்சனைகளை முன்வைத்தும், ரபேல், ரிசர்வ் வங்கி விவகாரத்தை முன்வைத்தும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். காங்கிரஸ் தலைவர்  ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி பாஜக எம்பிக்கள் முழக்கங்கள் எழுப்பினர். இரு தரப்பினரும் இடைவிடாமல் முழக்கமிட்டதால் முதலில் அரை மணி நேரம் அவை ஒத்திவைக்கப்பட்டது. அதன்பிறகு அவை கூடியபோதும், அமளி நீடித்தது. இதையடுத்து நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.  #RafaleDeal #WinterSession #RajyaSabhaAdjourned 
    ரபேல் விவகாரத்தில் மத்திய அரசை விமர்சித்து வரும் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை இன்று மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டது. #RafaleDeal #WinterSession #BJPRuckus
    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், மாநிலம் சார்ந்த பிரச்சனைகள் மற்றும் பாஜக ஆட்சிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. எதிர்க்கட்சிகள் கொடுத்த ஒத்திவைப்பு தீர்மானங்கள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. இதனால் உறுப்பினர்கள் போராட்டம் நீடிக்கிறது. இன்றும் பல்வேறு பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சி எம்பிக்கள் திட்டமிட்டுள்ளனர்.

    இந்நிலையில், ரிசர்வ் வங்கி விவகாரம், பணமதிப்பு நீக்க விவகாரம் தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வரக்கோரி காங்கிரஸ் எம்பி ரஞ்சீத் ரஞ்சன் மக்களவையில் இன்று மீண்டும் நோட்டீஸ் கொடுத்தார்.  இதேபோல் ரபேல் விவகாரம் தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வரக்கோரி காங்கிரஸ் எம்பி சுனில் குமார் ஜக்கார் மக்களவையில் மீண்டும் நோட்டீஸ் கொடுத்தார்.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில் காலை 11 மணிக்கு பாராளுமன்றம் கூடியது. அப்போது, மக்களவையில் மேகதாது விவகாரம் தொடர்பாக அதிமுக உறுப்பினர்கள் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். ரபேல் போர் விமான ஒப்பந்த ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தும்படி காங்கிரஸ் எம்பிக்கள் முழக்கமிட்டனர்.

    மேலும் ரபேல் விவகாரத்தில் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் கூறி வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி பாஜக எம்பிக்கள் முழக்கம் எழுப்பினர்.

    ரபேல் ஒப்பந்த முறைகேடு புகார் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையடுத்து பாஜக எம்பிக்கள் இந்த விவகாரத்தை எழுப்பினர். பதிலுக்கு காங்கிரஸ் எம்பிக்களும் எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பியதால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து அவை நடவடிக்கைகள் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. #RafaleDeal #WinterSession #BJPRuckus
    ×