search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஸ் சிறை பிடிப்பு"

    • 100-க்கும் மேற்பட்ட மாணவ , மாணவிகள் உளுந்தூர்பேட்டைக்கு சென்று கல்வி பயின்று செல்கின்றனர்.
    • தங்கள் கிராமத்திற்கு என்று தனி அரசு பஸ் பள்ளி நேரத்தில் வந்து செல்ல வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    உளுந்தூர்பேட்டை அருகே ஊ செல்லூர் கிராமத்தில் சுமார் 1000-திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திலிருந்து 100-க்கும் மேற்பட்ட மாணவ , மாணவிகள் உளுந்தூர்பேட்டைக்கு சென்று கல்வி பயின்று செல்கின்றனர். தடம் எண் 35 அரசு பஸ்சில் மாணவர்கள் எந்தவித சிரமமும் இன்றி பள்ளிக்குச் சென்று வந்தனர். 

    இந்நிலையில் சில நாட்களாக குறிப்பிட்ட அரசு பஸ் அந்த ஊருக்கு செல்லவில்லை என தெரிகிறது. இது குறித்து அந்த கிராம மக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ஊ செல்லூர் கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் இன்று அரசு பஸ்ஸை சிறை பிடித்து சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் கிராமத்திற்கு என்று தனி அரசு பஸ் பள்ளி நேரத்தில் வந்து செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த உளுந்தூர்பேட்டை போலீசார் பள்ளி மாணவ மாணவிகளின் பெற்றோரிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். ஒரு வாரத்தில் தனி அரசு பஸ் ஏற்பாடு செய்வதாக போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மறியலை அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • பள்ளி வளாகத்தில் மழை வெள்ளம் தேங்கியதால் ஆத்திரம்
    • அதிகாரிகள் பேச்சுவார்த்தை

    வேலூர்:

    வேலூர் அருகே உள்ள ஊசூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தொடர்மழை காரணமாக பள்ளி வளாகத்தில் மழை நீர் குளம் போல தேங்கியுள்ளது.நீர் வெளியேற வழியின்றி தேங்கி சேரும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் பள்ளிக்கு வரும் மாணவ மாணவிகள் சேற்றில் சிக்கி கீழே விழுந்து எழுந்து வகுப்பறைக்கு செல்கின்றனர்.

    மேலும் பள்ளி வளாகம் முழுவதும் மழை நீர் தேங்கி உள்ளதால் பாம்பு தேள் உள்ளிட்டவைகள் வகுப்பறைக்குள் வருகின்றன.

    மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப அவரது பெற்றோர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று காலை அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அரசு பஸ்சை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது பற்றி தகவல் அறிந்த மாவட்ட கவுன்சிலர் த.பாபு, ஒன்றிய குழு துணை தலைவர் மகேஸ்வரி, ஊராட்சி மன்ற தலைவர் விஜயகுமாரி, வட்டார வளர்ச்சி அலுவலர் வின்சென்ட் ரமேஷ் பாபு ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பள்ளி வளாகத்தில் மழை நீர் தேங்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதி அளித்தனர்.

    இதனை தொடர்ந்து பொதுமக்கள் பஸ்சை விடுவித்து போராட்டத்தை கைவிட்டனர்.

    பள்ளி வளாகத்தில் தேங்கி இருந்த மழை வெள்ளம் பொக்லைன் மூலம் தற்காலிக கால்வாய் அமைக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது.

    பள்ளி வளாகத்தில் தண்ணீர் தேங்குவதை தடுக்க மண் கொட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×