search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பழவேற்காடு மீனவர்கள்"

    • ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவுதளம் அருகே பழவேற்காடு கடல் உள்ளது.
    • பழவேற்காட்டை சுற்றி உள்ள மீனவ கிராமத்தினர் இந்த கடல் பகுதியில் மீன்பிடிப்பது வழக்கம்.

    பொன்னேரி:

    நிலவில் ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்காக சந்திராயன் -3 ராக்கெட் இன்று மதியம் 2.35 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட உள்ளது. இதற்கான அனைத்து பணிகளையும் இஸ்ரோ விஞ்ஞானிகள் முடித்து உள்ளனர். முன்எச்சரிக்கை பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.

    ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவுதளம் அருகே பழவேற்காடு கடல் உள்ளது. வழக்கமாக பழவேற்காட்டை சுற்றி உள்ள மீனவ கிராமத்தினர் இந்த கடல் பகுதியில் மீன்பிடிப்பது வழக்கம். சந்திராயன்-3 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்படுவதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடாக பழவேற்காடு மற்றும் சுற்றுவட்டார மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குனர் கங்காதரன் இதற்கான உத்தரவை பிறப்பித்து உள்ளார்.

    ×