search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளி மாணவர்களுக்கு"

    • கோபிசெட்டிபாளையம் கச்சேரிமேட்டில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளியில் கோபி தீயணைப்புத்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • பெட்ரோல், மண்எண்ணை போன்றவற்றில் ஏற்படும் தீ விபத்துகளை தீயணைப்பு கருவியை பயன்படுத்தி அணைக்கும் முறை செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் கச்சேரிமேட்டில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளியில் கோபி தீயணைப்புத்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் பேரிடர் காலங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும், தீ விபத்து ஏற்படும் காலங்களில் மாணவர்கள் எவ்வாறு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும், எண்ணெய், பெட்ரோல் போன்ற பொருட்கள் மூலம் ஏற்படும் தீ விபத்துக்கள் குறித்தும், அவசர காலங்களில் மாணவர்கள் நடந்து கொள்ள வேண்டிய முறைகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.

    கோபி தீயணைப்பு நிலைய பொறுப்பு அலுவலர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கோபி முன்னணி தீயணைப்பு வீரர் கோபால், ராமச்சந்திர மூர்த்தி, தீயணைப்பு வீரர்கள் குருமூர்த்தி, சுரேஷ், கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியின் போது பெட்ரோல், மண்எண்ணை போன்றவற்றில் ஏற்படும் போது தீ விபத்துகளை தீயணைப்பு கருவியை கொண்டு தீயை அணைக்கும் முறை, தண்ணீரில் நனைக்கப்பட்ட சாக்கை பயன்படுத்தி தீ அணைக்கும் முறை, மணலை பயன் படுத்தி தீயை அணைக்கும் முறை போன்றவை செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • கோபிசெட்டிபாளைய நகராட்சி பகுதியில் உள்ள பள்ளிகளில் டெங்கு மற்றும் மலேரியா காய்ச்சல் தொடர்பாக மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    • தேங்காய் சிரட்டைகள், பெயிண்ட்டப்பாக்கள், உடைந்த மண்பாண்டங்கள் டயர்கள் போன்றவற்றை காட்சிப்படுத்தியும், கொசுப்புழுக்களை காண்பித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் நகராட்சி, மொடச்சூர் நகராட்சி மேல்நிலைப்பள்ளி மற்றும் ஜெயராம் நடுநிலைப் பள்ளிகளில் டெங்கு, மலேரியா நோய் ஒழிப்பு விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

    நகர் மன்ற தலைவர் என். ஆர். நாகராஜ் மற்றும் ஆணையாளர் பிரேம் ஆனந்த் உத்தரவின்படி, நகராட்சி துப்புரவு அலுவலர் சோழராஜ் முன்னிலையில், துப்புரவு ஆய்வாளர்கள் செந்தில்குமார், சவுந்தரராஜன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் மொடச்சூரில் உள்ள நகராட்சி மேல்நிலைப் பள்ளியிலும்,

    துப்புரவு ஆய்வாளர் கார்த்திக் தலைமையிலான குழுவினர் நகராட்சி ஜெயராம் நடுநிலைப் பள்ளியிலும் டெங்கு மற்றும் மலேரியா காய்ச்சல் தொடர்பாக மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தனர்.

    இதில் கொசு முட்டைகள் இட்டு வளரும் இடங்களான தேவையற்ற பிளாஸ்டிக் டப்பாக்கள், முட்டை ஓடுகள், தேங்காய் சிரட்டைகள், பெயிண்ட்டப்பாக்கள், உடைந்த மண்பாண்டங்கள் டயர்கள் போன்றவற்றை காட்சிப்படுத்தியும், கொசுப்புழுக்களை காண்பித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    ×