search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பல்லாக்கு"

    • பூ பல்லாக்கு ஊர்வலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புறப்பட்டது.
    • மின் தட்டிகள் மற்றும் மேல தாளங்கள், நாட்டிய குதிரைகள் ஊர்வ லத்தில் இடம்பெற்றன.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை தெற்குதெரு அரபுசாஹிப் ஆண்டவர் பள்ளிவாசலில் 535-ம் ஆண்டு கந்தூரி விழா நேற்று தொடங்கியது.

    முன்னதாக விழா கமிட்டியினர் முன்னிலையில் கந்தூரி விழா ஊர்வலத்தை முத்துப்பேட்டை ஜாம்புவா னோடை தர்கா முதன்மை அறங்காவலரும், தமிழக தர்காக்கள் முன்னேற்ற பேரவை நிறுவன தலைவருமான எஸ்.எஸ்.பாக்கர்அலி சாஹீப் தொடங்கி வைத்தார்.

    அதனை தொடர்ந்து, அரபு சாஹிப் ஆண்டவர் பள்ளிவா சலில் இருந்து கந்தூரி பூ பல்லாக்கு ஊர்வலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புறப்பட்டது.

    இதில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட 2 பூப்பல்லாக்கு, கண்ணாடி களால் அலங்கரிக்கப்பட்ட 2 ரதங்கள், மின் விளக்கு களால் உருவாக்கப்பட்ட ஏராளமான மின் தட்டிகள் மற்றும் மேல தாளங்கள், நாட்டிய குதிரைகள் ஊர்வ லத்தில் இடம்பெற்றன.

    ஊர்வலம் பேட்டை ரோடு, முகைதீன் பள்ளி திடல், பட்டுக்கோட்டை சாலை, பங்களா வாசல், நியூ பஜார், பழைய பஸ் ஸ்டான்ட், திருத்துறைப்பூண்டி சாலை வழியாக புதிய பஸ் நிலையம் சென்றது.

    பின்னர், அங்கிருந்து பெரிய கடைத்தெரு, மரைக்காயர் தெரு, எஸ்.கே.எம் தெரு வழியாக மீண்டும் பள்ளிவா சலை வந்தடைந்தது.

    பின்னர் இரவு 9 மணிக்கு மௌலுத் ஷரீப் மற்றும் துஆ ஓதப்பட்டு புனித கொடி ஏற்றப்பட்டது.

    இதில் நூற்றுக்க ணக்கானோர் கலந்து கொண்டனர்.

    ஊர்வலத்தையொட்டி திருவாரூர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெள்ளத்துரை, முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன், இன்ஸ்பெக்டர் ராஜேஷ் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • புனித கொடி பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லாக்கில் வைக்கப்பட்டது.
    • முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு விழா வருகிற 4-ந் தேதி நடைபெற உள்ளது.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடையில் உலக புகழ் பெற்ற ஹக்கீம் ஷெய்கு தாவூது ஆண்டவர் தர்ஹா அமைந்துள்ளது.

    தர்ஹாவின் 721-ம் ஆண்டு பெரிய கந்தூரி விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    முன்னதாக, மாலை 5 மணிக்கு சேக்தாவூது ஆண்டவர் அடக்க சமாதியி லிருந்து புனித கொடியை பிராத்தனையுடன் தர்ஹா டிரஸ்டிகள் சுமந்து வந்து பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லாக்கில் வைக்கப்பட்டது.

    பின்னர், புனித கொடியை சுமந்த பூ பல்லாக்கின் ஊர்வலம் தர்ஹா முதன்மை அறங்காவலர் எஸ்.எஸ்.பாக்கர் அலி சாஹிப் தலைமையில் புறப்பட்டது.

    இதில் பெரிய பல்லாக்குடன் பூக்களால் ஆன சிறிய பல்லாக்குகள், கண்ணாடிகளால் அலங்கரிக்கப்பட்ட ரதம் மேளதாளங்கள், பேண்டு வாத்தியங்கள் யானை, ஒட்டகங்கள், ஆட்டகுதிரைகள் என ஊர்வலமாக வந்தது.

    ஊர்வலம் தர்ஹாவிலி ருந்து புறப்பட்டு ஜாம்புவா னோடை மேலக்காடு வழியாக ஆசாத்நகர் சென்றது.

    அங்கு ஆசாத்நகர் மீன் மார்க்கெட் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கிருந்து ஊர்வலம் புறப்பட்டு திருத்துறைப்பூண்டி சாலை வழியாக பழைய பஸ் நிலையம் சென்றது. அங்கு ஆட்டோ சங்கம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    அங்கு நடந்த சிறப்பு பிரார்த்தனை முடிந்து அங்கிருந்து ஊர்வலம் புறப்பட்டு புதிய பஸ் நிலையம் சென்று மீண்டும் ஆசாத்நகர் வழியாக கோரையாறுபாலம், ஜாம்புவானோடை சென்று தர்ஹாவை வந்தடைந்தது.

    பின்னர், தர்ஹா அருகில் உள்ள அம்மா தர்ஹா, ஆற்றாங்கரை பாவா தர்ஹா சென்று மீண்டும் தர்ஹாவை ஊர்வலம் மூன்று முறை சுற்றியது.

    பின்னர், கொடியேற்றும் நிகழ்ச்சி தர்ஹா முதன்மை அறங்காவலர் எஸ்.எஸ்.பாக்கர் அலி சாஹிப் தலைமையில் தொடங்கியது. தொடர்ந்து, அகமது முகைதீன் லெப்பை துஆ ஓதினார். பின்னர், சிறப்பு பிராத்தனை ஓதப்பட்டு இரவு புனித கொடியேற்றப்பட்டது.

    இதில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் உட்பட அனைத்து சமூகத்தினரும் கலந்து கொண்டனர்.

    விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு விழா வருகிற 4-ந் தேதி நடைபெற உள்ளது.

    தொடர்ந்து, 8-ந் தேதி இரவு புனித கொடி இறக்கப்பட்டு அனைவருக்கும் தப்ரூக் (அன்னதானம்) வழங்கப்படும்.

    ×