search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பருவநிலை மாநாடு"

    • ஐ.நா. பருவநிலை மாநாட்டில் பங்கேற்க உலக தலைவர்கள் எகிப்து நாட்டில் குவிந்து வருகின்றனர்.
    • 2 வாரம் நடைபெறும் இந்த மாநாட்டில் 100-க்கும் மேற்பட்ட உலக தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

    கெய்ரோ:

    ஆர்டிக், அண்டார்டிகா கண்டங்களில் உள்ள பனிப்பாறைகள் உருகி வருவதால் உலக நாடுகள் இதுவரை கண்டிராத பெரும் அபாயத்தை எதிர்கொள்ள இருப்பதாக விஞ்ஞானிகள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். இதனால் பருவநிலை மாற்றத்தை சமாளிக்கவும், அதன் தீவிரத்தை குறைக்கவும் உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன.

    அதன் ஒரு பகுதியாக, ஐ.நா. பருவநிலை மாற்ற பணித்திட்டம் கடந்த 1992-ம் ஆண்டு உருவாக்கப்பட்டு, 1994-ம் ஆண்டில் அது முழுமையாக செயல்பாட்டுக்கு வந்தது. இந்த பணித்திட்டத்தில் கையெழுத்திட்டுள்ள 198 நாடுகளும், 1995 முதல் ஆண்டுதோறும் பருவநிலை மாநாட்டை கூட்டி, பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து விவாதித்து வருகின்றன.

    இதற்கிடையே, ஐ.நா. பருவநிலை மாற்ற பணித்திட்டத்தின் 27-வது மாநாடு எகிப்து நாட்டின் ஷார்ம் எல் ஷேக் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது.

    50-க்கும் மேற்பட்ட உலக தலைவர்கள் வரும் 18-ம் தேதி வரை 2 வாரங்களுக்கு நடைபெறும் இந்த மாநாட்டில் 100-க்கும் மேற்பட்ட உலக தலைவர்கள் பங்கேற்று பருவநிலை மாற்றத்தை சமாளிப்பதற்கான தங்களின் பரிந்துரைகளையும், முன்னெடுப்புகளையும் பகிர்ந்துகொள்ள இருக்கிறார்கள். நேற்று முதல் எகிப்தில் உலக தலைவர்கள் குவிந்து வருகின்றனர்.

    இந்நிலையில், நேற்றைய மாநாட்டில் பங்கேற்ற இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் பேசுகையில், கால நிலை மாற்றம் குறித்து விரைவாக செயல்பட வேண்டிய நேரம் இது என தெரிவித்தார். மேலும், காலநிலை நிதியத்திற்கு நாட்டின் அர்ப்பணிப்பாக 11.6 பில்லியன் பவுண்டுகளை வழங்கினார்.

    நிலையான வேளாண்மைக்கு மாறுவதற்கான நிலையான விவசாயக் கொள்கை மற்றும் விவசாயத்தில் புதுமைக்கான உலகளாவிய செயல்திட்டம் ஆகியவை முக்கியமான உறுதி மொழிகள் ஆகும்.
    லண்டன்:

    ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் பருவநிலை உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். மாநாட்டின் ஒரு வார நிகழ்வுகள் நிறைவடைந்துள்ள நிலையில், நிலையான வேளாண்மை குறித்த செயல்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. 

    விவசாயத்தை இன்னும் நிலையானதாகவும், சுற்றுச்சூழலை மாசுபடுத்தாததாகவும் மாற்றுவதற்கான புதிய உறுதிமொழிகளை வகுப்பதற்கான இந்த செயல்திட்டத்தில் இந்தியா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, உகாண்டா, வியட்நாம், ஜெர்மனி, நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட 27 நாடுகள் கையெழுத்திட உள்ளன. 

    நிலையான வேளாண்மைக்கு மாறுவதற்கான நிலையான வேளாண் கொள்கை மற்றும் வேளாண்மையில் புதுமைக்கான உலகளாவிய செயல்திட்டம் ஆகியவை முக்கியமான உறுதி மொழிகள் ஆகும்.

    இந்த செயல்திட்டத்தில் கையெழுத்திடும் நாடுகள் தங்கள் நாடுகளில் வேளாண் கொள்கைகளை மிகவும் நிலையானதாகவும், மிக குறைவாக மாசுபடுத்துவதாகவும் மாற்றுவதற்கு புதிய உறுதிமொழிகளை வகுத்துள்ளன. நிலையான வேளாண்மைக்குத் தேவையான அறிவியலில் முதலீடு செய்வதற்கும், பருவநிலை மாற்றத்தில் இருந்து உணவுப் பொருட்களைப் பாதுகாப்பதற்கும் உறுதிமொழிகளை வகுத்துள்ளன.

    ×