search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பரபரப்பு வாக்குமூலம்"

    • கைதான தொழிலாளி பரபரப்பு வாக்குமூலம்
    • முன்விரோதத்தில் மூதாட்டியை கட்டையால் அடித்து கொன்றேன் என்றார்

    கரூர்,

    கரூர் சக்தி நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி அமராவதி(வயது 75). இந்த நிலையில் சுப்பிரமணியன் நேற்று முன்தினம் அரவக்குறிச்சி பகுதியில் நடந்த ஒரு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றுவிட்டார்.

    இதனால் வீட்டில் தனியாக இருந்த அமராவதி தலையில் கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த கொலை குறித்து கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து, சந்தேகத்தின் பேரில் அதே பகுதியை சேர்ந்த கருப்பையா (40) என்பவரை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதன் விவரம் பின்வருமாறு:- கருப்பையாவின் சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்தவர். இவர் கரூர்-கோவை ரோட்டில் தள்ளுவண்டியில் ஓட்டல் தொழில் செய்து வந்துள்ளார். மேலும் கருப்பையா ஓட்டலுக்கு பயன்படுத்தி வந்த பாத்திரங்களை அமராவதியின் வீட்டின் அருகே வைத்து கழுவி சுத்தம் செய்துள்ளார்.

    இதனால் அமராவதி கருப்பையாவிடம் வாக்குவாதம் செய்து வந்துள்ளார். இதனால் கருப்பையாவிற்கும், அமராவதிக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கருப்பையா சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த அமராவதியை கட்டையால் அடித்து கொலை செய்தது தெரியவந்தது. பின்னர் கருப்பையா கூறியதை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர். பின்னர் கருப்பையாவை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • நிறுவனத்திற்கு சேரவேண்டிய ரூ.6 லட்சத்தை சுரேஷ் கையாடல் செய்து தலைமறைவானார்.
    • மீதி பணத்தை கேட்ட நாங்கள் 6 பேரும் சுரேசை கடுமையாக தாக்கியதில் அவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே அம்பிளிக்கையை சேர்ந்தவர் சுரேஷ்(28). இவர் அ.தி.மு.க பிரமுகர் நடராஜனிடம் கார் டிரைவராக பணிபுரிந்து வந்தார். மேலும் அவர் நடத்தி வரும் நெய் நிறுவனத்தில் பணம் வசூல் செய்யும் பணியிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.

    இந்த நிலையில் கடந்த 17-ந்தேதி சுரேஷ் அடித்து கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து உறவினர் வடிவேலை கைது செய்தனர். மேலும் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய மனோகரன்(45), பாண்டி(37), தேனியை சேர்ந்த சிவஞானம்(58), நிலக்கோட்டையை சேர்ந்த சதீஸ்குமார்(29), திருப்பூரை சேர்ந்த முத்துக்குமார்(23) ஆகியோரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.

    கார் டிரைவரை ெகான்றது ஏன் என 6 பேரும் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர். அதில் அவர்கள் கூறியுள்ளதாவது, சுரேஷ் வேலை பார்த்த இடத்தில் வடிவேல், மனோகரன், பாண்டி ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர். நிறுவனத்திற்கு சேரவேண்டிய ரூ.6 லட்சத்தை சுரேஷ் கையாடல் செய்து தலைமறைவானார். இதனைதொடர்ந்து தென்காசியில் இருந்த அவரை அம்பிளிக்கை அழைத்து வந்தனர்.

    பணத்தை திருப்பி கேட்டபோது ரூ.3லட்சத்து 50 ஆயிரத்தை கொடுத்தார். இதனால் மீதி பணத்தை கேட்ட நாங்கள் 6 பேரும் சுரேசை கடுமையாக தாக்கினோம். இதில் அவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொலையை மறைப்பதற்காக அவரை தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை நாடகமாடினோம். அதன்பின்னர் வடிவேல் மற்றும் உறவினர்களுடன் சுரேசின் உடலை மயானத்தில் எரித்தோம்.

    இருந்தபோதும் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் மாட்டிக்கொண்டோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • காதல் மனைவியை கொலை செய்த கணவர் பரபரப்பு வாக்குமூலம்
    • இது பற்றிய புகாரின் பேரில் ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மதுரை

    மதுரை தெற்கு வெளி வீதி, சப்பாணி கோவில் தெருவை சேர்ந்தவர் மீனாட்சிசுந்தரம். இவரது மகள் வர்ஷா (வயது19). இவர் நேற்று மதியம் சப்பாணி கோவில் தெருவில் பகுதியில் நடந்து சென்றார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர் வர்ஷாவுடன் தகராறு செய்து அவரை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பிச்சென்று விட்டார்.

    இதில் உயிருக்கு போராடிய வர்ஷாவை உறவினர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்து விட்டார். இது பற்றிய புகாரின் பேரில் ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் வர்ஷாவை கத்தியால் குத்திக்கொன்றது அவரது கணவர் பழனி (வயது26) என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். பழனி போலீசில் கொடுத்த வாக்கு மூலத்தில் கூறியிருப்பதா வது:-

    நானும், வர்ஷாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் என்னை பிரிந்து வர்ஷா, தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். அவரை குடும்பம் நடத்த வரும்படி பலமுறை அழைத்தும் வர மறுத்துவிட்டார்.

    இதில் ஏற்பட்ட தகராறில் வர்ஷாவை தாக்கினேன். இதுபற்றி வர்ஷா ஜெய்ஹிந்த்புரம் போலீசில் புகார் செய்தார். இதுதொடர்பான வழக்கு நடந்து வருகிறது. வர்ஷா என்னுடன் குடும்பம் நடத்த வர மறுத்து விட்டதுடன் போலீசிலும் என்னை பற்றி புகார் செய்ததால் அவர் மீது எனக்கு கடும் ஆத்திரம் ஏற்பட்டது. இத னால் அவரை கத்தியால் குத்தி கொலை செய்தேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • நாங்கள் அவரிடம் சென்று பீடி கேட்டோம்.
    • குடும்பதினர் குறித்து அவதூறாக பேசினார்.

    கோவை,

    கோவை கணபதி அருகே உள்ள பொன்னையா வீதியை சேர்ந்தவர் வெங்கட்ராஜ் என்ற வெங்கடேஷ் (வயது 49). கூலித் தொழிலாளி.

    இவர் கணேஷ் லே-அவுட்டில் உள்ள மாநகராட்சி நகர்நல மைய வளாகத்தில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இந்த தகவல் கிடைத்ததும் சரவணம்பட்டி போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கொலை செய்யப்பட்ட வெங்கடேசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசை கொலை செய்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவரை கணபதி ராஜவீதியில் உள்ள பிளாட்பாரத்தில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வரும் நஞ்சுண்டாபுரத்மோதை சேர்ந்த கன்ராஜ் (26), நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்த சரவணன் (19) என்பது தெரிய வந்தது.

    போலீசார் விசாரணை நடத்தி தலைமறைவாக இருந்த 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர்கள் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

    நாங்கள் 2 பேரும் பிளாட்பாரத்தில் அங்கி இருந்து வருகிறோர். சம்பவத்தன்று இரவு நாங்கள் 2 பேரும் மது போதையில் இருந்தோம். அப்போது வெங்கடேஷ் போததையில் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். இதனை பார்த்த நாங்கள் அவரிடம் சென்று பீடி கேட்டோம். அவர் கொடுக்க மறுத்து விட்டார். மேலும் எங்களது தாய் குறித்தும், குடும்பதினர் குறித்து அவதூறாக பேசினார். இது எங்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

    இதனையடுத்து நாங்கள் அங்கு இருந்த கல்லை எடுத்து அவரது தலையில் தாக்கினோம். இதில் நிலைகுலைந்த அவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து இறந்தார். பின்னர் நாங்கள் தலைமறைவாக இருந்தோம். போலீசார் விசாரணை நடத்தி எங்களை கைது செய்து விட்டனர். இவ்வாறு அவர்கள் கூறினார்.

    பின்னர் போலீசார் கைது செய்யப்பட்ட 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • தனியாக வசித்த நான் சிறுமுகையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று வந்தேன்.
    • வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து கழுத்து ,மார்பு, தலை உள்ளிட்ட இடங்களில் வெட்டினேன்.

    மேட்டுப்பாளையம் ,

    கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள திம்பம்பாளையத்தை சேர்ந்தவர் ரங்கராஜன் (வயது 67). நிதி நிறுவன அதிபர். இவர் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்து விட்டு தனியாக வசித்து வந்தார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த ரங்கராஜை அவரது தம்பி குபேந்திரன் (57) என்பவர் வெட்டி கொலை செய்தார். இது குறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் அண்ணனை வெட்டி கொலை செய்த குபேந்திரனை கைது செய்தனர். பின்னர் அவரிடம் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

    எனது மனைவி கடந்த 2014-ம் ஆண்டு உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தார். தனியாக வசித்த நான் சிறுமுகையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று வந்தேன். அப்போது அந்த பகுதியை சேர்ந்த திருமணமான பெண் ஒருவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தோம். எனக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது.

    இதனையடுத்து நான் தனியாக வசித்த எனது அண்ணன் ரங்கராஜ் வீட்டிற்கு சென்று தங்கினேன். பின்னர் கிடைக்கும் வேலைகளை செய்து அவருடன் வசித்து வந்தேன். எனது அண்ணனிடம் எனது கள்ளக்காதலிக்கு பணம் கொடுக்க வேண்டும் எனவும், அவரை திருமணம் செய்ய உள்ளதாகவும் கூறினேன். அதற்கு அவர் எதிப்பு தெரிவித்து என்னை கண்டித்தார். நேற்று முன்தினம் எனது கள்ளக்காதலி என்னை தேடி எனது அண்ணன் வீட்டிற்கு வந்துள்ளார்.

    அப்போது எனது அண்ணன் அவரிடம் உனக்கு பணம் தர முடியாது. எனது தம்பியும் உன்னை திருமணம் செய்ய மாட்டான் என கூறி உள்ளார். இது குறித்து அவர் என்னிடம் தெரிவித்தார்.எனவே நான் இது குறித்து எனது அண்ணனிடம் கேட்டேன். அப்போது அவருக்கும் எனக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த நான் அவரை கொலை செய்ய திட்டமிட்டேன்.

    அதிகாலை 2.30 மணிய ளவில் எனது அண்ணன் கட்டிலில் தூங்கி கொண்டு இருந்தார். அப்போது நான் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து கழுத்து ,மார்பு, தலை உள்ளிட்ட இடங்களில் வெட்டினேன். இதில் சம்பவஇடத்திலேயே ரத்த வெள்ளத்தில் அவர் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். பின்னர் நான் தலை மறைவாக இருந்தேன். போலீசார் விசாரணை நடத்தி என்னை கைது செய்து விட்டனர்.

    இவ்வாறு அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிரு ந்தார். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். 

    • எனது அண்ணன் உதயகுமார் கடந்த பிப்ரவரி மாதம் கொலை செய்யப்பட்டார்.
    • எனது அண்ணன் கொலைக்கு பழிக்கு பழியாக முரளியை தீர்த்து கட்ட திட்டமிட்டேன்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அந்திவாடியை முரளி (வயது 20). கூலித் தொழிலாளி. இவரது மனைவி நந்தினி (20). இவர்கள் ஒரு ஆண்டிற்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

    நேற்று முன்தினம் வீட்டில் இருந்த முரளியை சிலர் காரில் அழைத்து சென்றனர். இந்த நிலையில் அவர் பெத்தகொள்ளு என்னும் இடத்தில் சர மாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    இந்த கொலை தொடர்பாக ஓசூர் அட்கோ போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதில் கிடைத்த தகவல்கள் வருமாறு:&

    ஓசூர் அந்திவாடியை சேர்ந்தவர் உதயகுமார் (32). ரியல் எஸ்டேட், பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். கடந்த 28.02.2022 அன்று அவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அந்த கொலை வழக்கில் மத்திகிரி போலீசார் விசாரணை நடத்தி முரளியை (தற்போது கொலை செய்யப்பட்டவர்) கைது செய்தனர். அவர் அந்த வழக்கில் முதலாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருந்தார்.

    சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட முரளி, ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நிலையில் தான் முரளி கொலை செய்யப்பட்டது போலீசாரின் விசாரணை யில் தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், உதயகுமார் கொலைக்கு பழிக்கு பழி வாங்குவதற்காக அவரது தம்பி சரவணன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து முரளியை தீர்த்து கட்டியது தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து இந்த கொலையில் தொடர்புடைய ஓசூர் அந்திவாடி நாகராஜ் மகன் சரவணன் (31), ஒன்னுப்பள்ளி மாதேஷ் (28), கொரட்டகிரி ரகு (21), தொட்டபிளி முத்திரை நவீன்குமார் (21), திம்மசந்திரம் மதன்குமார் (25), குருப்பட்டி நவீன்குமார் (20), மிடிகிரிப்பள்ளி சுனில் (29), பரத் (27) ஆகிய 8 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.கைதான சரவணன் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    எனது அண்ணன் உதயகுமார் கடந்த பிப்ரவரி மாதம் கொலை செய்யப்பட்டார். அந்த கொலையில் முரளி முதல் குற்றவாளி ஆவார். அவர் உள்பட சிலரை போலீசார் கைது செய்தனர். சிறையில் இருந்த முரளி, ஜாமீனில் வெளியே வந்த தகவல் அறிந்தேன்.எனது அண்ணன் கொலைக்கு பழிக்கு பழியாக முரளியை தீர்த்து கட்ட திட்டமிட்டேன். அதன்படி மது குடிக்க அவனை அழைப்பது போல அழைத்து வந்து, சரமாரியாக வெட்டிக் கொலை செய்தோம். இவ்வாறு அவர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். கைதான வர்களிடம் இருந்து 4 வீச்சரிவாள்கள், 2 மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. 

    ×