search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயிர்க்கடன்கள் தள்ளுபடி"

    ஆட்சிக்கு வந்தால் அனைத்து விவசாயிகளின் பயிர்க்கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. #DMKmanifesto #CropLoan
    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசினார். அப்போது, வேளாண்துறைக்கு தனியாக நிதிநிலை அறிக்கை, சிறு குறு விவசாயிகளின் பயிர்க்கடன்கள் தள்ளுபடி, நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு, கல்விக்கடன் தள்ளுபடி நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.

    5 ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்திருப்பவர்கள் சிறு குறு விவசாயிகள் என வரையறுக்கப்பட்டிருக்கிறது. எனவே, திமுகவின் தேர்தல் அறிக்கை அனைத்து விவசாயிகளையும் திருப்தி செய்யும் வகையில் இருக்காது என்பதால், தேர்தல் அறிக்கையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.



    இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “திமுக தேர்தல் அறிக்கையில் சிறு குறு விவசாயிகளின் அனைத்து வகையான பயிர்க்கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்று வெளியிடப்பட்டு இருந்தது.

    தற்போது விவசாயிகளின் கோரிக்கை மற்றும் கூட்டணி கட்சிகளின் வேண்டுகோளை ஏற்று, அனைத்து விவசாயிகளின் பயிர்க்கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என தேர்தல் அறிக்கையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது” என கூறியுள்ளார். #DMKmanifesto #CropLoan
    ×