search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயிர் காப்பீடு இணையதள சேவை முடக்கம்"

    பயிர் காப்பீடு இணையதள சேவை முடக்கத்தால் வெண்ணந்தூர் சுற்று வட்டார விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    மல்லூர்:

    தமிழகத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் நடப்பு ஆண்டில் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து வந்தனர்.

    நேற்று முன்தினம் பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள் என்பதால் விவசாயிகள் கூட்டம் வங்கிகளிலும் பொது சேவை மையங்களிலும் அலைமோதியது. பயிர் காப்பீடு இணையதள சேவை முடக்கத்தால் வெண்ணந்தூர் சுற்று வட்டார விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    நடப்புப் பருவத்தில் பயிர் காப்பீடு குறித்து அறிக்கை கடந்த மாதம் வெளியிடப்பட்டது. கடந்த ஆண்டு தனியார் நிறுவனங்களுக்கு இன்சூரன்ஸ் பிரீமியம் வசூல் செய்ய அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இந்த ஆண்டு தனியார் நிறுவனங்களுக்கு இன்சூரன்ஸ் பிரீமியம் வசூல் செய்ய அனுமதி வழங்கப்படவில்லை. இந்த ஆண்டு தேசிய வங்கிகள் கூட்டுறவு வங்கிகள் பொது சேவை மையங்களுக்கு மட்டும் வசூல் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இந்த ஆண்டு தொடக்கத்தில் விவசாயிகள் காப்பீடு செய்ய ஆர்வம் காட்டாமல் இருந்தனர்.

    ஆனால் 2016,2017 ஆம் ஆண்டில் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்புஇழப்பீடு தொகை வழங்கப்பட்டது. இதையடுத்து விவசாயிகள் அனைவரும் தற்போது பயிர் காப்பீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இணையதள சேவை முடக்கத்தால் நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் பிரீமியம் தொகை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியர் கவனத்தில் கொண்டு மேலும் 10 நாட்களுக்கு கால நீடிப்பு செய்ய வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் இம்மாத இறுதிக்குள் 2016,2017-ஆம் ஆண்டு கட்டப்பட்ட பயிர் காப்பீடு கட்டியவர்களுக்கு நிலுவையில் உள்ள தொகை கொடுக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

    ×