search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயணியிடம்"

    • ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.
    • அவரிடம் இருந்து செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    ஈரோடு:

    சென்னை கொரட்டூரை சேர்ந்தவர் அசோக் (31). இவர் சம்பவத்தன்று பெங்களூர்-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்தார்.

    எக்ஸ்பிரஸ் ரெயில் ஈரோடு அருகே வந்து கொண்டிருந்தபோது அவருடைய 2 செல்போன்கள் திருட்டு போனது. இதுகுறித்து அவர் ஈரோடு ரெயில்வே போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் ஈரோடு ரெயில் நிலையம் முதலாவது நடைமேடையில் ரெயில்வே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கு இடமான வகையில் வாலிபர் ஒருவர் அங்கும் இங்குமாக சுற்றி கொண்டிருந்தார்.

    அவரை பிடித்து விசாரித்த போது அவர் தர்மபுரி மாவட்டம் பாப்பி ரெட்டிபட்டியை சேர்ந்த மணிகண்டன் (22) என்பதும்,ரெயில் பயணயிடம் செல்போனை திருடியதையும் ஒப்புக்கொண்டார்.

    இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். அவரிடம் இருந்து செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • இளம்பெண் திடீரென எல்லம்மாள் பணம் வைத்திருந்த பேக்கை திருடி கொண்டு தப்பிக்க முயன்றார்.
    • இதையடுத்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து நந்தினியை கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து நேற்று மதுரைக்கு பஸ் கிளம்ப தயாரானது. பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தது. அப்போது ஈரோட்டை சேர்ந்த எல்லம்மாள் என்ற பெண் பஸ்சில் ஏறி அமர்ந்து இருந்தார்.

    அவர் அருகே மற்றொரு இளம்பெண் அமர்ந்திருந்தார். பஸ் கிளம்ப தயாரான போது எல்லம்மாள் அருகே அமர்ந்திருந்த இளம்பெண் திடீரென எல்லம்மாள் பணம் வைத்திருந்த பேக்கை திருடி கொண்டு தப்பிக்க முயன்றார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் திருடி, திருடி என கூச்சலிட்டார். இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அந்த இளம்பெண்ணை ஓடி சென்று மடக்கிப் பிடித்தனர்.

    அந்த பெண் திருடிய பையில் ரூ.2000 ரொக்கப் பணம் இருந்தது. இது குறித்து டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்தப் பெண்ணை விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    விசாரணையில் அந்தப் பெண் திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த நந்தினி (28) என தெரிய வந்தது. இவர் பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்களிடம் திருடுவதை வாடிக்கையாக வைத்திருந்தது பெரிய வந்தது.

    மேலும் இவர் மீது சென்னை, காஞ்சிபுரம் பகுதிகளில் 6 திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து நந்தினியை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

    ×