search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பப்புவா நியூகினியா"

    ஆஸ்திரேலியா அருகேயுள்ள தீவு நாடான பப்புவா நியூகினியாவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகள் மற்றும் அலுவலக கட்டிடங்களில் இருந்து வெளியேறினர். #Earthquake
    நியூபிரிட்டன்:

    ஆஸ்திரேலியா அருகே பசிபிக்கடலில் உள்ள தீவு நாடு பப்புவா நியூகினியா, நேற்று அங்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்குள்ள நியூபிரிட்டன் தீவு அதிரடியாக குலுங்கியது.

    இதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகள் மற்றும் அலுவலக கட்டிடங்களில் இருந்து வெளியேறினர். பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்தனர்.

    அங்கு 6.1 ரிக்டரில் நில நடுக்கம் பதிவாகியுள்ளது. கான்டீரியன் கிழக்கே 186 கி.மீ தொலைவில் நியூபிரிட்டன் தீவை மையமாக கொண்டு நிலநடுக்கம் உருவாகியுள்ளது.

    நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரம், உயிரிழப்பு மற்றும் காயம் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

    பப்புவா நியூகினியா பசிபிக் பிராந்தியத்தில் நிலநடுக்க அபாய பகுதியில் உள்ளது. இதனால் அங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. #Earthquake
    பப்புவா நியூகினியா நாட்டில் நாடாளுமன்ற கட்டிடத்துக்குள் ஆயுதப்படையினர், போலீசார், சிறை அதிகாரிகள் அதிரடியாக நுழைந்து தாக்குதல் நடத்தினர். #PapuaNewGuinea #SecurityForces #ParliamentAttack
    போர்ட் மோரஸ்பி:

    வறுமையில் வாடும் பப்புவா நியூகினியா நாட்டின் தலைநகரான போர்ட் மோரஸ்பியில், சமீபத்தில் ‘அபெக்’ என்று அழைக்கப்படுகிற ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங், அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் உள்ளிட்ட 21 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.



    இந்த உச்சி மாநாட்டின்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு துணையாக ஆஸ்திரேலியா, அமெரிக்கா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து பாதுகாப்பு படையினர் வந்திருந்தனர்.

    இந்த நிலையில், உள்நாட்டு படையினருக்கும், போலீசாருக்கும் உரிய அலவன்சினை (படி) அந்த நாட்டு அரசு வழங்க வில்லை என கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள், போர்ட் மோரஸ்பி நகரில் உள்ள அந்த நாட்டின் நாடாளுமன்ற கட்டிடத்துக்குள் அதிரடியாக நுழைந்து தாக்குதல் நடத்தினர். மேஜை, நாற்காலி, ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தெறிந்தனர். இந்த தாக்குதலை நூற்றுக்கணக்கானோர் நடத்தியதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

    ஆலன் பேர்டு என்ற எம்.பி. கருத்து தெரிவிக்கையில், “நாடாளுமன்றத்துக்குள் ஆயுதப்படையினர், போலீசார், சிறை அதிகாரிகள் என அனைவரும் நுழைந்து கிடைத்ததையெல்லாம் அடித்து நொறுக்கினார்கள்” என கூறினார்.

    இந்த தாக்குதல் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  #PapuaNewGuinea #SecurityForces #ParliamentAttack
    தென்மேற்கு பசிபிக் நாடான பப்புவா நியூகினியாவில் ஃபேஸ்புக் சேவைக்கு தடை விதிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    பப்புவா நியூகினியா:

    பப்புவா நியூகினியா அரசு ஃபேஸ்புக் சேவையை ஒரு மாத காலத்துக்கு தடை செய்ய திட்டமிட்டு வருகிறது. இதன் மூலம் போலி செய்திகள் அதிகளவு பரப்பப்படுவதை நிறுத்தும் வகையிலும், அந்நாட்டு மக்களின் பயன்பாடு குறித்து புரிந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இதுகுறித்து அந்நாட்டு தகவல் தொடர்பு துறை மந்திரி சாம் பசில் கூறும் போது, தடை விதிக்கப்படும் போது தகவல் தொடர்பு துறை மற்றும் பப்புவா நியூகினியா தேசிய ஆய்வு மையம் சார்பில் சமூக வலைத்தளம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

    ஃபேஸ்புக் தடை செய்யப்படும் குறிப்பிட்ட காலக்கட்டத்தில் போலி கணக்கு வைத்திருப்போர், ஆபாச புகைப்படங்களை பதிவேற்றம் செய்வோர், தவறான தகவல்களை பரப்புவோர் கண்டறியப்பட்டு, போலி தகவல்கள் முற்றிலுமாக நீக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என பசில் மேலும் தெரிவித்துள்ளார்.


    கோப்புப்படம்

    இந்த நடவடிக்கை மூலம் உண்மையான கணக்குகளை வைத்திருப்போர் சமூக வலைத்தளத்தை முறையாக பயன்படுத்த வழி செய்யும். பப்புவா நியூகினியாவில் ஃபேஸ்புக் சேவை தடை செய்யப்படுவது குறித்து ஃபேஸ்புக் சார்பில் எவ்வித தகவலும் இல்லை. இத்துடன் பப்புவா நியூகினியாவில் சைபர் குற்றத்திற்கென சட்டம் இயற்றப்பட இருக்கிறது.

    “எங்கள் நாட்டில் ஃபேஸ்புக் மூலம் ஏற்படும் தீங்குக்கு இடமளிக்க முடியாது. சைபர் குற்றத்திற்கான சட்டம் குறித்து முறையான பயிற்சி மற்றும் விவரங்களை முழுமையாக அறிந்து கொள்ளும் வரை காவல் துறையினருடன் இணைந்து பணியாற்றுவேன்,” என பசில் தெரிவித்துள்ளார்.

    முன்னதாக கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகா விவகாரம் குறித்து ஐரோப்பிய யூனியனில் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பர்க் மன்னிப்பு கோரினார். மேலும் ஃபேஸ்புக் வழங்கும் அனைத்து சேவைகளிலும் இதுபோன்ற தவறுகள் மீண்டும் நடைபெறாமல் இருக்க முறையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.  

    ஃபேஸ்புக் பயனர்களின் தகவல்களை ரகசியமாக திருடி அவற்றை சட்ட விரோதமாக பயன்படுத்திய கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவன நடவடிக்கை அம்பலமானதைத் தொடர்ந்து பப்புவா நியூகினியாவில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஃபேஸ்புக் பயன்படுத்துவோர் தகவல்கள் உளவியல் ஆய்வாளரான அலெக்சான்டர் கோகன் என்பவரால் உருவாக்கப்பட்ட செயலியை கொண்டு சேகரிக்கப்பட்டது.
    ×