search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணம் பறிப்பு"

    • திருச்சி தாராநல்லூர் வாலிபரிடம் பணம் பறிப்பு
    • போலீசார் வழக்கு பதிவு செய்து ரவுடி ஜாக்கியை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    திருச்சி 

    திருச்சி தாராநல்லூர் விஸ்வாஸ் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜா( வயது 37) இவர் எடதெரு பொது கழிப்பிடம் பகுதியில் நடந்து சென்றார்.அப்போது அங்கு வந்த திருச்சி எடத்தெரு பிள்ளை மாநகர் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி ஜாக்கி என்கிற ஜாக்கிஜான் (28) அவரிடம் செலவுக்கு பணம் கேட்டார்.ஆனால் அவர் கொடுக்க மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த ரவுடி கத்தி முனையில் அவரிடமிருந்து ரூ. 2000 பணத்தை பறித்துக் கொண்டு தப்பி சென்றார்.இது குறித்து ராஜா காந்தி மார்க்கெட் போலீசில் புகார் செய்தார்.அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ரவுடி ஜாக்கியை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • கொள்ளையில் ஈடுபட்ட கும்பலை பிடிக்க அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.

    ராயபுரம்:

    தண்டையார்பேட்டை. வைத்தியநாதன் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பிரகாஷ் பாபு (47). இவர் வரதராஜ பெருமாள் கோயில் தெருவில் இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். இவர் இரும்பு சப்ளை செய்த கடைகளில் இரவில் பணம் வசூல் செய்வது வழக்கம்.

    இந்நிலையில் பிரகாஷ் பாபு நேற்று இரவு மண்ணடி பகுதியில் உள்ள இரும்பு கடைகளில் மொத்தம் ரூ.8 லட்சம் பணத்தை வசூல் செய்து விட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டு இருந்தார்.

    மழை பெய்து கொண்டு இருந்ததால் அவர் கடற்கரைசாலையோரம் உள்ள ஒரு கடை அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு ஒதுங்கி நின்றார். அப்போது அருகில் நின்ற வாலிபர் ஒருவர் பணப்பை மழையில் நனையாமல் இருக்க பிளாஸ்டிக் கவர் ஒன்றை கொடுத்தார். அதனை பணம் இருந்த பை மீது சுற்றி வைத்துக்கொண்டு பிரகாஷ் பாபு சிறிது நேரத்தில் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார்.

    பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் வந்து கொண்டு இருந்தபோது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கும்பல் திடீரென பிரகாஷ்பாபு வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதினர். இதில் நிலை தடுமாறிய பிரகாஷ் பாபு மோட்டார் சைக்கிளோடு கீழே விழுந்தார். உடனே மர்ம நபர்களில் ஒருவன் அவரிடம் இருந்த ரூ.8 லட்சம் பணப்பைபை பறித்தான். இதனால் அதிர்ச்சி அடைந்த பிரகாஷ்பாபு கத்தி கூச்சலிட்டதும் மர்ம கும்பல் கத்தியால் அவரை தாக்கினர். இதில் பிரகாஷ் பாபுவின் வலது கையில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது.

    பின்னர் மர்ம கும்பல் ரூ.8 லட்சத்துடன் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். பலத்த காயம் அடைந்த பிரகாஷ்பாபு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். அவரது வலது கையில் 7 தையல் போடப்பட்டுள்ளது

    இதுகுறித்து பிரகாஷ்பாபு போலீஸ்கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கொள்ளையில் ஈடுபட்ட கும்பலை பிடிக்க அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.

    பிரகாஷ்பாபு பணம் வசூலித்து வருவதை அறிந்து மர்ம நபர்கள் திட்டமிட்டு கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர். அவரை நீண்ட நாட்கள் நோட்டமிட்டு கைவரிசை காட்டி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஏ.டி.எம். கார்டை பிடுங்கி அதில் இருந்து 35 ஆயிரம் பணத்தை திருநங்கை எடுத்து கொண்டார்.
    • விசாரணை முடிவில் திருநங்கை கைது செய்யபடுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.

    சேலம்:

    சென்னையில் இருந்து 45 வயதுடைய தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் நேற்றிரவு சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு வந்தார். அவர் குடிபோதையில் இருந்த நிலையில் பஸ் நிலையத்தின் முன் பகுதியில் வந்த போது திருநங்கை ஒருவர் அவரிடம் நைசாக பேச்சு கொடுத்தார்.

    தொடர்ந்து 2 பேரும் ஆட்டோவில் சேலம் 5 ரோடு பகுதிக்கு சென்றனர். பின்னர் திருநங்கை அந்த நபரிடம் பணம் கேட்டார். ஆனால் அந்த நபர் பணம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து அவரிடம் இருந்த ஏ.டி.எம். கார்டை பிடுங்கி அதில் இருந்து 35 ஆயிரம் பணத்தை திருநங்கை எடுத்து கொண்டார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த நபர் பள்ளப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணை முடிவில் திருநங்கை கைது செய்யபடுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.

    • 2பேர் திடீரென செல்வி வைத்திருந்த பணப்பையை பறித்து தப்பி சென்றுவிட்டனர்.
    • சம்பவம் குறித்து கே.கே நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    சென்னை, எம்.ஜி.ஆர் நகர், அடுத்த நெசப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மனைவி செல்வி (50).அதே பகுதியில் வீட்டு வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று மாலை அடமானம் வைத்திருந்த நகையை திரும்புவதற்காக கே.கே நகர் வேம்புலி அம்மன் கோவில் தெரு வழியாக ரூ.33 ஆயிரத்தை கைப்பையில் வைத்துக்கொண்டு நடந்து சென்றார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2பேர் திடீரென செல்வி வைத்திருந்த பணப்பையை பறித்து தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து கே.கே நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாலிபரிடம் பணம் பறித்த ரவுடிகள் 2 பேரை போலீசார் தேடிவருகின்றனர்
    • 2 பேர் கைது செய்யப்பட்டனர்

    திருச்சி ,

    திருச்சி மதுரை ரோடு வள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 33) இவர் சிந்தாமணி அண்ணா சிலை அருகாமையில் நின்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த 4 வாலிபர்கள் அவரிடம் பணம் ேகட்டனர். அதற்கு அவர் பணம் இல்லை என்று கூறியுள்ளார். உடனே அந்த அவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மிரட்டி, அவரது சட்டை பாக்கெட்டில் இருந்த ரூபாய் 2000 பணத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    இதில் அதிர்ச்சி அடைந்த மாரியப்பன் உடனடியாக கோட்டை போலீசில் புகார் செய்தார். வழக்கு பதிவு செய்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    அவர்கள் விரைந்து சென்று பணம் பறித்துச் சென்ற குழுமணி பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்கிற ஆட்டோ சக்திவேல் (35), சிந்தாமணி புது தெரு பகுதியைச் சேர்ந்த தினேஷ் என்கிற தினேஷ்குமார் (23) ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர்.

    ரவுடி பட்டியலில் இருக்கும் இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி மேல சிந்தாமணி காளியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (37), திருச்சி சங்கரன் பிள்ளை ரோடு பகுதியைச் சேர்ந்த முகில் குமார் (27) ஆகிய இரண்டு ரவுடிகளையும் தேடி வருகின்றனர்.

    பெரம்பலூர் அருகே லாரி டிரைவரிடம் அரிவாளை காட்டி மிரட்டி பணம் பறித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்

    பெரம்பலூர் லாரி டிரைவர் திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகா, பெரும்பாக்கம் இந்திரா நகரை சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் சின்னதம்பி (வயது 33), லாரி டிரைவர். இவர் பெரம்பலூர் மாவட்டம், விஜயகோபாலபுரத்தில் உள்ள தனியார் டயர் தொழிற்சாலையில் சரக்கு ஏற்றுவதற்காக நேற்று முன்தினம் மாலை திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுவாச்சூரில் பெட்ரோல்-டீசல் விற்பனை நிலையம் அருகே லாரியை நிறுத்தி விட்டு காத்திருந்தார்.அப்போது அங்கு வந்த 3 வாலிபர்கள் சின்னதம்பியை அரிவாளை காட்டி மிரட்டி, அவரது சட்டைப்பையில் இருந்த ரூ.1,000-ஐ பறித்து சென்றனர்.இந்த சம்பவம் தொடர்பாக சின்னதம்பி பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சின்னதம்பியிடம் பணம் பறித்தது பெரம்பலூர்-ஆலம்பாடி ரோடு, சமத்துவபுரத்தை சேர்ந்த ராஜாவின் மகன் சந்துரு (23), பெரம்பலூர்-ஆலம்பாடி ரோடு, புதிய காலனியை சோ்ந்த தனசேகரின் மகன் விஷ்ணு (19), பாடாலூர் அண்ணா நகரை சேர்ந்த சதக்கத்துல்லாவின் மகன் சாதிக் பாட்சா (22) என்பது தெரியவந்தது.இதையடுத்து தலைமறைவாக இருந்த சந்துரு, விஷ்ணுவை போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள சாதிக் பாட்ஷாவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • 3 வாலிபர்கள் அரிவாளை எடுத்து மிரட்டி சுரேஷிடம் இருந்த ரூ.1,000 பணத்தை பறித்தனர்.
    • போலீசார் 17 வயது கல்லூரி மாணவர் உள்பட 3 பேரை கைது செய்தனர்.

    கோவை,

    புதுக்கோட்டை மாவட்டம் கணபதிபுரம் அருகே உள்ள மீனாம்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ்(வயது 29). லாரி டிரைவர். சம்பவத்தன்று இவர் லாரியில் மணலை ஏற்றிக் கொண்டு விளாங்குறிச்சியில் இருந்து கோவைக்கு வந்தார்.

    லாரி வெள்ளலூர் மாரியம்மன் கோவில் அருகே சென்ற போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் லாரியை வழிமறித்து நிறுத்தினர்.

    பின்னர் மறைத்து வைத்து இருந்த அரிவாளை எடுத்து மிரட்டி சுரேஷிடம் இருந்த ரூ.1,000 பணத்தை பறித்தனர். இதில் அதிர்ச்சியடைந்த அவர் சத்தம் போட்டார். இதனை கேட்ட அங்கு இருந்த லாரி டிரைவர்கள் 3 பேரையும் மடக்கி பிடித்தனர்.

    பின்னர் அவர்களை போத்தனூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் வெள்ளலூரை சேர்ந்த மெக்கானிக் தீபக் என்ற விவேக் (27),ரா மநாதபுரத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் முத்தரசு (19), கணேசபுரத்தை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவர் என்பது தெரிய வந்தது.

    இதனையடுத்து போலீசார் கல்லூரி மாணவர் மெக்கானிக் ஆகியோரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். 17 வயது கல்லூரி மாணவரை சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.

    • பாபி சர்தாரிடமிருந்த ரூ. 5ஆயிரம் மற்றும் 20 இரும்பு ராடுகளை பறித்து கொண்டு தப்பி சென்றுள்ளனர்.
    • இரவில் பாபி சர்தார் தங்கி இருந்த அறை கதவை 3 மர்ம நபர்கள் முகத்தை துணியால் மறைத்து தட்டி உள்ளனர்.

    அவினாசி:

    மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் பாபி சர்தார் (வயது 25). இவர் அவிநாசி மங்கலம் ரோட்டில் கட்டுமான பணிகள் நடந்து வரும் கட்டிடத்தில் வேலை பார்த்து வருகிறார். அங்கு இரவில் அவர் தங்கி இருந்த அறை கதவை 3 மர்ம நபர்கள் முகத்தை துணியால் மறைத்து தட்டி உள்ளனர்.

    கதவை திறக்காததால் அந்த நபர்கள் சிமெண்ட் சீட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து பாபி சர்தார் கழுத்தில் வைத்து மிரட்டி அவரிடமிருந்த ரூ. 5ஆயிரம் மற்றும் 20 இரும்பு ராடுகளை பறித்து கொண்டு தப்பி சென்றுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் அவினாசி போலீசார் வழக்குபதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • மயக்கம் தெளிந்து பார்த்தபோது தான் அணிந்திருந்த நகை மற்றும் பணம் திருட்டு போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
    • பயணி மீது மயக்க மருந்து தெளித்து நகை பணம் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருச்சி:

    கரூர் மாவட்டம் கடவூர் செம்பிநாதம் பகுதியைச் சேர்ந்தவர் கன்னியப்பன் (வயது 51). விவசாயியான இவர் திருச்சியில் உள்ள ஒரு உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக மணப்பாறை பஸ் நிலையம் வந்தார். பின்னர் திருச்சி செல்லும் பஸ் நிறுத்த பகுதிக்குச் சென்றார்.

    அப்போது 3 மர்ம நபர்கள் அருகாமையில் வந்து மயக்க மருந்தை அவர் மீது தெளித்தனர். அடுத்த நொடி கன்னியப்பன் மயங்கிய நிலைக்கு சென்றுள்ளார்.

    உடனே அந்த ஆசாமிகள் அவர் கழுத்தில் அணிந்திருந்த ஒரு பவுன் செயின், அரை பவுன் மோதிரம், ரூ. 1000 ரொக்க பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.

    பின்னர் மயக்கம் தெளிந்து பார்த்தபோது தான் அணிந்திருந்த நகை மற்றும் பணம் திருட்டு போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

    அதன் பின்னர் இதுகுறித்து கன்னியப்பன் மணப்பாறை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பயணி மீது மயக்க மருந்து தெளித்து நகை பணம் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • 2 வாலிபர்கள் சிவனந்தபெருமாளை தாக்கி அவரிடம் இருந்த ரூ.16 ஆயிரத்தை பறித்து தப்பி சென்று விட்டனர்.
    • பலத்த காயம் அடைந்த அவர் பாண்டிச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

    மரக்காணத்தைச் சேர்ந்தவர் சிவனந்தபெருமாள். மாற்றுத்திறனாளியான இவர் உப்பு மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவர் வந்தவாசி, செய்யார், சேத்துபட், உத்திரமேரூர் ஆகிய இடங்களில் உப்பு லோடு இறக்கியதற்கான பணத்தை வசூலித்துக் கொண்டு, உத்திரமேரூர் வந்தார்.

    அவர், தீட்டாளம் சாலையில் வைப்பனை கிராமம் அருகே சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் சிவனந்தபெருமாளை தாக்கி அவரிடம் இருந்த ரூ.16 ஆயிரத்தை பறித்து தப்பி சென்று விட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் பாண்டிச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

    • டாக்டர்களை மிரட்டி பணம் வாங்கியது குறித்து தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் விசாரணை நடத்தினார்.
    • விசாரணையில் பணம் வாங்கியது உறுதியானதால் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்து தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.

    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை சென்னையை அடுத்த திரிசூலம் பகுதியை சேர்ந்த ரஞ்சித் (வயது 27) என்பவர் அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமியின் தந்தை கூடுவாஞ்சேரியில் உள்ள வண்டலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் மகிதா அன்ன கிருஷ்டி வழக்குப்பதிவு செய்து அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தார்.

    இதற்கிடையே பாதிக்கப்பட்ட சிறுமிக்கு போலீசார் செங்கல்பட்டு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை செய்தபோது அந்த சிறுமிக்கு ஏற்கனவே கருக்கலைப்பு செய்யப்பட்டது தெரியவந்தது.

    இதையடுத்து சிறுமியின் தாயார் தனது மகளுக்கு சிங்கப்பெருமாள் கோவில், மறைமலைநகர் பகுதியில் உள்ள ஆஸ்பத்திரி மற்றும் கிளினிக்கில் கருக்கலைப்பு செய்ததாக இன்ஸ்பெக்டரிடம் தெரிவித்தார்.

    இதன் அடிப்படையில் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் ஆஸ்பத்திரி நடத்தி வரும் அரசு டாக்டர் பராசக்தி மற்றும் மறைமலைநகர் பகுதியில் கிளினிக் நடத்தி வரும் டாக்டர் உமா மகேஸ்வரி ஆகியோரிடம் இன்ஸ்பெக்டர் மகிதா அன்ன கிருஷ்டி விசாரணை நடத்தினார்.

    பின்னர் உங்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்டி அரசு டாக்டர் பராசக்தியிடம் ரூ.10 லட்சம், தனியார் ஆஸ்பத்திரி டாக்டரிடம் இருந்து ரூ.2 லட்சம் என மொத்தம் ரூ.12 லட்சம் வாங்கினார். டாக்டர்களை மிரட்டி பணம் வாங்கியது குறித்து தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் விசாரணை நடத்தினார்.

    விசாரணையில் பணம் வாங்கியது உறுதியானதால் கடந்த 11-ந்தேதி இன்ஸ்பெக்டர் மகிதா அன்ன கிருஷ்டியை பணியிடை நீக்கம் செய்து தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.

    இதையடுத்து சிங்கப்பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்த அரசு டாக்டர் பராசக்தி, மறைமலைநகர் போலீஸ் நிலையத்தில் மகிதா அன்ன கிருஷ்டி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த வக்கீல் பன்னீர்செல்வம் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் செய்தார்.

    இதுகுறித்து மறைமலைநகர் போலீசார், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் மகிதா அன்ன கிருஷ்டி மற்றும் வக்கீல் பன்னீர்செல்வம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் மறைமலைநகர் தனிப்படை போலீசார் நேற்று திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே மகிதா அன்ன கிருஷ்டியை கைது செய்து மறைமலைநகர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.

    • ரமேஷ் (39). இவர் கார் மற்றும் லாரி பட்டறை வைத்து நடத்தி வருகிறார்.
    • அப்போது அங்கு வந்த 3 வாலிபர்கள் ரமேஷ் மற்றும் அவரது நண்பர்களை தாக்கி 2 பவுன் தங்க செயின், ரூ.450-ஐ பறித்துக் கொண்டு தப்பியோடி விட்டனர்.

    சேலம்:

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாரசிராம் மெயின்ரோடு பகுதியை சேர்ந்த ரமேஷ் (39). இவர் கார் மற்றும் லாரி பட்டறை வைத்து நடத்தி வருகிறார். ேநற்று முன்தினம் இரவு சேலம் டவுன் தாதுபாய்குட்டை அருகே உள்ள ஒரு ஓட்டலில் தன் நண்பர்கள் அண்ணாதுரை, சுரேஷூடன் சாப்பிட சென்றார்.

    அப்போது அங்கு வந்த 3 வாலிபர்கள் ரமேஷ் மற்றும் அவரது நண்பர்களை தாக்கி 2 பவுன் தங்க செயின், ரூ.450-ஐ பறித்துக் கொண்டு தப்பியோடி விட்டனர்.

    பூ வியாபாரி

    இதேபோல், சேலம் பொன்னம்மாபேட்ைட வாசக சாலை பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (42). பூ வியாபாரியான இவர் நேற்று முன்தினம் இரவு சேலம் பழைய நிலையம் அண்ணா சிலை அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது இவரை வழிமறித்து தாக்கிய 3 வாலிபர்கள், அவரிடம் இருந்த ரூ.500-ஐ பறித்துக் கொண்டனர்.

    இந்த 2 சம்பவங்கள் குறித்து சேலம் டவுன் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் பழனியம்மான் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக சேலம் கிச்சிப்பாளையம் களரம்பட்டி மெயின்ரோடு காந்தி நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த ராஜா மகன் ரவிக்குமார் என்கிற போலீஸ் ரவி (32), கோவிந்த சாமி நகர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (33), கஸ்தூரிபாய் தெருவை சேர்ந்த பிரசாத் (25) ஆகியோரை கைது செய்து பணம், நகை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர். 

    ×