search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "படிக்கட்டில் பயணம்"

    • டிரைவர், கண்டக்டரை உறவினர்கள் தாக்கியதால் பரபரப்பு
    • போலீசில் புகார்

    கே.வி.குப்பம்:

    கே.வி.குப்பத்தில் இருந்து குடி யாத்தம் நோக்கி நேற்று முன் தினம் மாலை அரசு டவுன் பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தது.

    இதனால், உள்ளே மாணவிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடம்விட்டு, படியில் நின்றபடி மாணவர்கள் வந்தனர். அவர்களை டிரைவர் திருநாவுக்கரசு, கண் டக்டர் கோட்டீஸ்வரன் ஆகியோர் பலமுறை எச்சரிக்கை செய்தனர். அவர்கள் தொடர்ந்து படிக்கட்டிலேயே பயணம் செய்தனர்.

    அதைத்தொடர்ந்து பஸ்சை நிறுத்திவிட்டு இறங்கி வந்த கண்டக்டர், மாணவர்களை கீழே இறங்கும்படி கூறி வாக்குவாதம் செய்தார். அதற்கு மறுத்த ஒரு மாணவரை கண் டக்டர் கன்னத்தில் அடித்த தாக கூறப்படுகிறது.

    இதைத் தொடர்ந்து அந்த மாணவர் கீழ் ஆலத்தூரில் இறங்கினார். அவர் தாக்கப்பட்ட தகவல் அறிந்த அவரது பெற்றோர், உறவினர்கள் பஸ்நிறுத்தத்திற்கு விரைந்து பஸ் குடியாத்தம் சென்று திரும்பி வரும் வரை காத்திருந்தனர்.

    பஸ் வந்ததும் பஸ்சை நிறுத்தி கண்டக்டரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதை தடுக்க வந்த டிரைவரும் தாக்கப்பட்டார்.

    இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் கே.வி.குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

    • உறுதிமொழி எடுக்க வைத்த சப்-இன்ஸ்பெக்டர்
    • பயணத்தின் ஆபத்து குறித்தும் விளக்கிகூறினார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம், விக்கிரவாண்டி பகுதியில் பயிலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்கள் கிராமங்களிலிருந்து அரசு பஸ்களில் பயணிக்கும் போது பஸ்களின் படி கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் வீடியோ சமூக வலை தளங்களிலும், முகநூல்களிலும் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து மாவட்ட எஸ்.பி., சசாய்சங் உத்திரவின் பேரில் சப்-–இன்ஸ்பெக்டர் காத்தமுத்து, போக்குவரத்து சப்–-இன்ஸ்பெக்டர் துரைராஜ் தலைமையிலான போலீசார் பள்ளி நேரங்களிலும், முடியும் நேரங்களில் அரசு பஸ் போக்குவரத்தை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    அதன்படி நேற்று காலை திருவக்கரையிலிருந்து விழுப்புரம் நோக்கி சென்ற அரசு பஸ்சில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர்களை சப்–-இன்ஸ்பெக்டர் காத்தமுத்து, பனையபுரம் செக் போஸ்டில் பஸ்சிலிருந்து இறக்கி அவர்களுக்கு போக்குவரத்து விதிமுறை குறித்தும், படிக்கட்டு பயணத்தின் ஆபத்து குறித்தும் விளக்கிகூறி இனி வரும் காலங்களில் போக்குவரத்து விதிமுறைகள் கடை பிடிக்க உறுதி மொழி ஏற்க வைத்தார். மேலும் பஸ் படிக்கட்டில் தொங்கி மாணவர்கள் பயணம் செய்யும் போது பஸ் டிரைவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறு கூறினார்.

    • அருப்புக்கோட்டையில் உயிரை பணயம் வைத்து மாணவர்கள் பஸ்சின் படியில் பயணம் செய்கின்றனர்.
    • கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அருப்புக்கோட்டை

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ -மாணவிகள் மற்றும் தொழிலாளர்கள் மதுரை, விருதுநகரில் நாள்தோறும் பள்ளி, கல்லூரிகளுக்கு மற்றும் வேலைக்கு சென்று வருகின்றனர்.

    இதன் காரணமாக அருப்புக்கோட்டையில் இருந்து காலை நேரங்களில் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்களில் கூட்டம் அலைமோதும். இதில் மாணவ-மாணவிகள் உரிய நேரத்தில் பள்ளி, கல்லூரிக்கு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் கூட்ட நெரிசலையும் பொருட்படுத்தாமல் பஸ்சில் முண்டியடித்துக் கொண்டு ஏறுகின்றனர். இதில் மாணவர்கள் பஸ்சின் படியில் ஆபத்தான முறையில் உயிரை பணயம் வைத்து செல்கிறார்கள்.

    இந்த காட்சிகளை காலை மற்றும் மாலை நேரங்களில் காண முடியும். சில நேரங்களில் சிலர் பஸ்சில் இருந்து தவறி விழுந்து காயமடைவது வழக்கமாக இருந்து வருகிறது.

    எனவே அருப்புக்கோட்டைக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • விழுப்புரத்தில் பஸ் படிக்கட்டில் தொங்கி செல்லும் மாணவர்களை போலீசார் உறுதிமொழி ஏற்க வைத்தனர்.
    • பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அல்லா தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பஸ் படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு பயணம் செய்வதை தடுக்க விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா அறிவுறுத்தலின் பேரில் விழுப்புரம் ,விக்கிரவாண்டி, திண்டிவனம் போக்குவரத்து போலீசார் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இதுதொடர்பாக தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் பஸ் வழித்தடங்களில் பயணம் செய்யும் மாணவர்களை பிடித்து போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆனாலும் மாணவர்கள் மீண்டும் மீண்டும் பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடியே பயணம் செய்கின்றனர். எனவே பள்ளி, கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க ஸ்ரீநாதா உத்தரவிட்டிருந்தார் .

    இதையடுத்து விழுப்புரம் டி.எஸ்.பி. பார்த்திபன் அறிவுறுத்தலின் பேரில் விழுப்புரம் போக்குவரத்து போலீஸ்இன்ஸ்பெக்டர் வ சந்த் மேற்பார்வையில் சப்- இன்ஸ்பெக்டர் ராஜாராம், ரமேஷ் குமார்மற்றும் போக்குவரத்து போலீசார் பஸ்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனை யின்போது பஸ் படி க்கட்டுகளில் தொங்கிய படி பயணம் செய்த பள்ளி மாணவர்களையும், கல்லூரி மாணவர்களையும், பஸ்களில் இருந்து கீழே இறக்கிவிட்டு அந்த மாணவர்களின் பெயர், முழு முகவரியை பள்ளி, கல்லூரியின் அடையாள அட்டை மூலம் சரிபார்த்து பெற்று அந்த மாணவர்களின் பெற்றோருக்கும், சம்பந்த ப்பட்ட பள்ளி, கல்லூரி முதல்வர்களுக்கும் செல்போன் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அல்லா தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வசந்த் பஸ் படியில் உயிரினை உச்சமாக மதித்து சாகசங்கள் புரிய நினைக்கும் மாணவர்களை அழைத்துஇதுபோல் பஸ் படியில் பயணம் செய்ய மாட்டோம் எனஉறுதி மொழி ஏற்க வைத்து அதன் பின்னர் அவர்களை அனுப்பி வைத்தார்.

    ×