search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஞ்சாப் ராஜீவ் காந்தி சிலை"

    பஞ்சாப் மாநிலத்தின் லூதியானா நகரில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் சிலையை அவமதித்த சம்பவம் காங்கிரசார் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. #SukhbirSinghBadal #GurpreetSingh #RajivGandhi
    சண்டிகர்:

    முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி, கடந்த 31-10-1984-ம் அன்று டெல்லியில் உள்ள தனது வீட்டில் சீக்கிய பாதுகாவலர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

    இந்த படுகொலைக்குப்பிறகு சீக்கியர்களுக்கு எதிராக நாடு முழுவதும் வன்முறை வெறியாட்டங்கள் நடந்தன. இதில் 2800 சீக்கியர்கள் பலியாகினர். டெல்லியில் மட்டும் 2100 சீக்கியர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர்.

    இந்த கலவரம் தொடர்பான வழக்கில் இருந்து முன்னர் விடுவிக்கப்பட்ட காங்கிரஸ் பிரமுகர் சஜ்ஜன் குமாருக்கு சமீபத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

    இதன்மூலம் சீக்கியர்களுக்கு எதிரான அந்த வன்முறையில் காங்கிரஸ் கட்சிக்கு இருந்த தொடர்பை கோர்ட் உறுதிபடுத்தி விட்டதாக சீக்கியர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். இதற்காக காங்கிரஸ் தலைமை பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


    இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தின் லூதியானா நகரில் உள்ள சலேம் தப்ரி பகுதியில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் சிலையை நேற்றிரவு சிலர் பெயின்ட் பூசி அலங்கோலப்படுத்தினர்.

    இந்த சம்பவம் அம்மாநில காங்கிரசார் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, காவல் நிலையத்தில் லூதியானா நகர காங்கிரஸ் தலைவர் குர்பிரீத் சிங் புகார் அளித்துள்ள நிலையில் சிரோன்மணி அகாலி தளம் கட்சி தொண்டர்கள்தான் இந்த காரியத்தை செய்ததாக பஞ்சாப் முதல் மந்திரி கேப்டன் அமரிந்தர் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.

    இந்த விரும்பத்தகாத செயலுக்காக சிரோன்மணி அகாலி தளம் கட்சி தலைவர் சுக்பிர் சிங் பாதல் பஞ்சாப் மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். #SukhbirSinghBadal #GurpreetSingh #RajivGandhi
    ×