search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹீரோ பிளெஷர் பிளஸ் 110"

    ஹீரோ மோட்டோகார்ப நிறுவனம் இந்தியாவில் பிளெஷர் பிளஸ் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது.



    மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் தயாரிப்பில் முன்னிலையில் இருக்கும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் பிளெஷர் மாடலில் மேம்படுத்தப்பட்ட ஸ்கூட்டரை ‘பிளஷர் பிளஸ்’ என்ற பெயரில் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 

    இந்தியாவில் புதிய பிளெஷர் பிளஸ் ஸ்கூட்டரின் விலை ரூ.47,300 ஆகும். இதில் அலாய் சக்கரங்களைக் கொண்ட மாடலின் விலை ரூ.49,300 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மேம்படுத்தப்பட்ட மாடல் 110.9 சி.சி. என்ஜினைக் கொண்டிருக்கிறது.



    இந்நிறுவனம் பெண்களுக்கென பிரத்யேகமாக வடிவமைத்த மாடல் இது. தனது கொள்கையில் எவ்வித சமரசமும் செய்துகொள்ளாமல், பெண் வாடிக்கையாளர்களை மனதில் கொண்டே மேம்படுத்தப்பட்ட மாடலை ஹீரோ மோட்டோகார்ப் உருவாக்கி இருக்கிறது.

    ஒற்றை சிலிண்டர் மோட்டாரைக் கொண்ட இந்த ஸ்கூட்டர் 8.1 பி.ஹெச்.பி. திறன் மற்றும் 8.7 என்.எம். டார்க் செயல்திறனை கொண்டது. இந்த மாடல் யமஹா ஃபாசினோ (ரூ.55,625), ஹோண்டா டியோ (ரூ.53,000) உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என்று தெரிகிறது.
    டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் இந்தியாவில் தனது ரேடியான் 110சிசி மோட்டார்சைக்கிளை இரண்டு புதிய நிறங்களில் அறிமுகம் செய்துள்ளது. #TVSMotors



    டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் தனது ரேடியான் 110சிசி மோட்டார்சைக்கிளை இரண்டு புதிய நிறங்களில் அறிமுகம் செய்திருக்கிறது. அந்தவகையில் தற்சமயம் டி.வி.எஸ். ரேடியான் 110 மோட்டார்சைக்கிள் டைட்டானியம் கிரே மற்றும் வொல்கானோ ரெட் என இரண்டு புதிய நிறங்களில் கிடைக்கிறது.

    டி.வி.எஸ். ரேடியான் 110 புதிய நிற மாடல்களின் விலை ரூ.50,070 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது மற்ற நிற வேரியண்ட்களை விட ரூ.1,200 அதிகம் ஆகும். ஏற்கனவே ரேடியான் 110 மாடல் மெட்டல் பிளாக், பியல் வைட், ராயல் பர்ப்பிள் மற்றும் கோல்டன் பெய்க் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது.

    தற்சமயம் ரேடியான் 110 மோட்டார்சைக்கிள் புதிய நிறம் தவிர மெக்கானிக்கல் அம்சம் மற்றும் தோற்றத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்பட்டவில்லை. அந்த வகையில் முந்தைய வேரியண்ட்களை போன்றே புதிய மாடலிலும் குரோம் கார்னிஷ், ரப்பர் டேன்க் பேட்கள், 3டி டி.வி.எஸ். லோகோ உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கிறது. 



    ரேடியான் மோட்டார்சைக்கிள் சின்க்ரோனைஸ் செய்யப்பட்ட பிரேக்கிங் தொழில்நுட்பம் கொண்டுள்ளது, இது இந்த பிரிவு மோட்டார்சைக்கிளில்களில் முதல் முறையாக வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இது சிறப்பான பிரேக்கிங் கண்ட்ரோல் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மோட்டார்சைக்கிள் ஸ்கிட் ஆகாமல் இருக்கும்.

    டி.வி.எஸ். ரேடியான் 110 சிசி மோட்டார்சைக்கிளில் 109.7சிசி, சிங்கிள் சிலிண்டர், 3-வால்வ், ஏர்-கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 8.3 பி.ஹெச்.பி. பவர் @7000 ஆர்.பி.எம். மற்றும் 8.7 என்.எம். @5000 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. ரேடியான் 110 சிசி மோட்டார்சைக்கிள் லிட்டருக்கு 69.3 கிலோமீட்டர் வரை செல்லும் என டி.வி.எஸ். நிறுவனம் தெரிவித்திருக்கிறது. 

    இந்தியாவில் அறிமுகமானது முதல் டி.வி.எஸ். ரேடியான் மாடல் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.
    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் சி.பி.எஸ். வசதி கொண்ட டிஸ்கவரி 110 மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. #BajajDiscover110 #Motorcycle



    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் (சி.பி.எஸ்.) வசதி கொண்ட டிஸ்கவர் 110 மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. சி.பி.எஸ். வசதி கொண்ட டிஸ்கவரி 110 மோட்டார்சைக்கிள் விலை இந்தியாவில் ரூ.52,273 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    ஏப்ரல் 01, 2019 முதல் 125சிசி மற்றும் அதற்கும் அதிக சிசி திறன் கொண்ட மோட்டார்சைக்கிள்களில் ஏ.பி.எஸ். வசதியும், 125சிசிக்கும் குறைவான திறன் கொண்ட மோட்டார்சைக்கிள்களில் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் வசதி வழங்கப்பட வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    அந்த வகையில் பஜாஜ் தனது வாகனங்களில் ஏ.பி.எஸ். மற்றும் சி.பி.எஸ். வசதிகளை வழங்கி வருகிறது. இந்த வரிசையில் பஜாஜ் பிளாட்டினா மாடலில் முதல்முறையாக சி.பி.எஸ். வசதி வழங்கப்பட்டது. பிளாட்டினாவை தொடர்ந்து டிஸ்கவர் 110 மாடலில் சி.பி.எஸ். வசதி வழங்கப்பட்டிருக்கிறது.



    கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் இருசக்கர வாகனங்களில் பிரேக் பயன்படுத்தும் போது இருசக்கரங்களுக்கும் சம-அளவு பிரேக்கிங் அழுத்தம் கொடுக்கப்படுவதை உறுதி செய்யும். புதிய பிரேக்கிங் வசதி தவிர டிஸ்கவர் 110 மாடலில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.

    பஜாஜ் டிஸ்கவர் 110 சி.பி.எஸ். வேரியண்ட் ஏர்-கூல்டு, சிங்கிள் சிலிண்டர், 115.45சிசி என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 8.6 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 9.81 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்தியாவில் பஜாஜ் டிஸ்கவர் 110 மாடல் ஹீரோ பேஷன் 110, டி.வி.எஸ். விக்டர் 110 மற்றும் ஹோன்டா சிடி110 டிரீம் டி.எல்.எக்ஸ். உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது.
    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் மேம்படுத்தப்பட்ட புது அம்சங்களுடன் இந்தியாவில் பிளாட்டினா 110 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. #platina



    பஜாஜ் ஆட்டோ இந்தியா நிறுவனம் இந்தியாவில் 2018 பிளாட்டினா 110 மோட்டார்சைக்கிள் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய 110 பிளாட்டினா மாடல் பல்வேறு மாற்றங்கள் மற்றும் புது அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் பிளாட்டினா 110 விலை ரூ.49,300 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    புதிய பஜாஜ் பிளாட்டினா 110 மாடலில் சக்திவாய்ந்த என்ஜின் குறிப்பிடத்தக்க அம்சமாக இருக்கிறது. முன்பக்க டிஸ்க் வசதியுடன் கிடைக்கும் புது பிளாட்டினா ஒரே வடிவமைப்பில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிளாக்-அவுட் அலாய் வீல்கள், புது கிராஃபிக்ஸ், எல்.இ.டி. டி.ஆர்.எல். உள்ளிட்டவை மோட்டார்சைக்கிளின் தோற்றத்தை புதிதாக வெளிப்படுத்துகிறது.



    பஜாஜ் பிளாட்டின் 110 மாடலில் ஆன்டி-ஸ்கிட் பிரேக்கிங் சிஸ்டம் குறிப்பிடத்தக்க அம்சமாக இருக்கிறது. இது ஹோன்டா மோட்டார்சைக்கிள்களில் வழங்கப்படும் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் போன்றதாகும். இந்த அம்சம் இரண்டு சக்கரங்களில் பிரேக் பிடிக்கும் போது சம அளவு அழுத்தம் கொடுக்கச் செய்யும்.

    புது பிளாட்டினா 110 மாடல் இரண்டு மீட்டர் நீளமாக இருப்பதால், நகரத்தில் பயன்படுத்த வசதியாக இருக்கிறது. 200 எம்.எம். கிரவுன்ட் கிளியரன்ஸ் கொண்டிருப்பதால் நாடு முழுக்க பெரும்பாலான சாலைகளில் பயணிக்க வசிதயாக இருக்கும். புது பிளாட்டினா 110 மாடலில் 115சிசி சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த என்ஜின் 8.5 பி.ஹெச்.பி. பவர், 9.8 என்.எம். டார்கியூ செயல்திறன் வழங்குவதோடு 4-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதே என்ஜின் பஜாஜ் டிஸ்கவர் 110 மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது. #platina #motorcycle
    3 நடைமேடைகளாக உருவாக்கப்பட்ட எழும்பூர் ரெயில் நிலையம் தற்போது 11 நடைமேடைகளாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. பழமை மாறாமல் கம்பீரமாக காட்சியளிக்கும் இந்த கட்டிடம் 110 வயதை தொட்டுள்ளது.
    சென்னை:

    சென்னை நகரில் சிறந்த கட்டிட கலைகளில் ஒன்றாக எழும்பூர் ரெயில் நிலையம் திகழ்கிறது. 1908-ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் இந்த கட்டிடம் கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தில் இருந்து முதல் ரெயிலாக ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடிக்கு ‘போட் மெயில்’ என்ற பெயரில் ரெயில் இயக்கப்பட்டது.

    3 நடைமேடைகளாக உருவாக்கப்பட்ட எழும்பூர் ரெயில் நிலையம் தற்போது 11 நடைமேடைகளாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. பழமை மாறாமல் கம்பீரமாக காட்சியளிக்கும் இந்த கட்டிடம் 110 வயதை தொட்டுள்ளது. இதையொட்டி எழும்பூர் ரெயில் நிலைய வளாகத்தில் சிறப்பு கண்காட்சி நேற்று நடைபெற்றது. எழும்பூர் ரெயில் நிலையம் கடந்து வந்த பாதை, இயக்கப்பட்ட பல்வேறு மாடல் ரெயில் என்ஜின் உள்பட எழும்பூர் ரெயில் நிலைய கட்டிடத்தை பறைசாற்றும் வகையில் ஏராளமான படங்கள் கண்காட்சியில் இடம்பெற்றன.

    பயணிகள் ஆர்வத்துடன் கண்காட்சியை பார்வையிட்டனர். கட்டிடத்தின் 110-வது வயதை கொண்டாடும் வகையில் தெற்கு ரெயில்வே சார்பில் ‘கேக்’ வெட்டும் நிகழ்ச்சி எழும்பூர் ரெயில் நிலையத்தில் நேற்று நடைபெற்றது. இதில் எழும்பூர் ரெயில் நிலையத்தின் மூத்த ஊழியரான பி.எம்.கோவிந்தராசு ‘கேக்கை’ வெட்டினார். இந்த நிகழ்ச்சியில் எழும்பூர் ரெயில் நிலைய இயக்குனர் ஜெயவெங்கடேசன் உள்பட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டனர். 
    ×