search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பக்தர்கள் காணிக்கை"

    திருப்பதி கோவிலில் காணிக்கையாக பெறப்பட்ட தலைமுடி ரூ.1¼ கோடிக்கு ஏலம் போனதாக தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது.
    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களில் பலர் தங்களின் தலைமுடியை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். காணிக்கையாக பெறப்பட்ட தலைமுடி திருப்பதிக்குக் கொண்டு சென்று சுத்தம் செய்து நேற்று இ.டெண்டர் மூலம் ஏலம் விடப்பட்டது.

    நேற்று மொத்தம் 600 கிலோ தலைமுடி ஏலம் போனதில் தேவஸ்தானத்துக்குக் கிடைத்த வருமானம் ரூ.1¼ கோடி ஆகும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    திருப்பதி கோவில் ஆண்டு வருமானம் ரூ.3,100 கோடியாக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு இதுவரை கோவிலுக்கு 2.5 கோடி பக்தர்கள் வருகை தந்து தரிசனம் செய்துள்ளனர். #Tirupati
    திருப்பதி:

    திருப்பதி தேவஸ்தான அதிகாரி ஒருவர் கூறியிருப்பதாவது:-

    திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் சிலவற்றில் வைப்பு வைக்கப்பட்டுள்ள தொகையின் மதிப்பு ரூ.12,000 கோடியைத் தாண்டியுள்ளது. அவற்றிலிருந்து ஆண்டு தோறும் சுமார் ரூ.845 கோடி வட்டியாக கிடைத்து வருகிறது.

    கோவிலின் ஆண்டு வருமானம் ரூ.3,100 கோடியாக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு இதுவரை கோவிலுக்கு 2.5 கோடி பக்தர்கள் வருகை தந்து தரிசனம் செய்துள்ளனர்.

    பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக வழங்கிய வகையில் 8.7 டன் தங்கம், கற்கள் பதிக்கப்பட்ட 550 கிலோ தங்க ஆபரணங்கள் தேவஸ்தானம் வசம் உள்ளன. அதில் ஆபரண தங்கம் உருக்கப்பட்டு சொக்கத் தங்கமாக மாற்றப்படும்.


    காணிக்கையாக கிடைத்த 8.7 டன் தங்கத்தில், 5,387 கிலோ பாரத ஸ்டேட் வங்கியிலும், 1,938 கிலோ இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிலும் வைப்பு செய்யப்பட்டுள்ளன.

    பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் வைப்பு செய்யப்பட்டிருந்த 1,381 கிலோ தங்கம் வைப்புக் காலம் முடிந்து சமீபத்தில் தேவஸ்தானத்திடம் ஒப்படைக்கப்பட்டது என்றார். #Tirupati
    பக்தர்கள் காணிக்கையாக அளித்த 1 லட்சத்து 43 ஆயிரத்து 900 கிலோ தலைமுடி ஏலம் விடப்பட்டதில் ரூ.11 கோடியே 17 லட்சம் வருமானம் கிடைத்ததாக திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Tirupati
    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களில் சிலர், தங்களின் தலைமுடியை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.

    காணிக்கை தலைமுடி மூட்டைகளில் கட்டி வாகனங்கள் திருமலையில் இருந்து திருப்பதிக்கு தினமும் அனுப்பி வைக்கப்படுகிறது.

    அங்கு, தலைமுடியைச் சுத்தம் செய்து நீளம் மற்றும் நிறத்தின் அடிப்படையில் தரம் பிரித்து, விலை நிர்ணயம் செய்து, இ.டெண்டர் மூலம் ஒவ்வொரு மாதமும் முதல் வியாழக்கிழமை அன்று ஏலம் விடப்படுகிறது. மாதத்தின் முதல் வியாழக்கிழமையான நேற்று காணிக்கை தலைமுடி இ.டெண்டர் மூலம் ஏலம் விடப்பட்டது.

    27 அங்குலம் நீளத்துக்கு மேலுள்ள முதல் ரக தலைமுடியை ஏ மற்றும் பி என இரு பிரிவாக தரம் பிரித்து ஏலம் விடப்பட்டது. அதில் ஏ பிரிவு ரக தலைமுடி கிலோ ரூ.26 ஆயிரத்து 500 வீதம், 2 ஆயிரத்து 900 கிலோ ஏலத்தில் வைக்கப்பட்டது. அதில் 200 கிலோ தலைமுடி ஏலம் போனது. அதன் மூலம் ரூ.53 லட்சம் வருமானம் கிடைத்தது.

    பி பிரிவு ரக தலைமுடி கிலோ ரூ.18 ஆயிரத்து 331 வீதம், 2 ஆயிரத்து 100 கிலோ ஏலத்தில் வைக்கப்பட்டது. அதில் 200 கிலோ தலைமுடி ஏலம் போனது. அதன் மூலம் ரூ.36 லட்சத்து 66 ஆயிரத்து 200 வருமானம் கிடைத்தது.

    19 அங்குலம் நீளத்தில் இருந்து 26 அங்குலம் நீளம் வரை உள்ள 2-வது ரக தலைமுடியை ஏ மற்றும் பி என இரு பிரிவாக தரம் பிரித்து ஏலம் விடப்பட்டது. அதில் ஏ பிரிவு ரக தலைமுடி கிலோ ரூ.17 ஆயிரத்து 11 வீதம், 3 ஆயிரத்து 100 கிலோ ஏலத்தில் வைக்கப்பட்டது. அதில் அனைத்துக் கிலோ தலைமுடியும் ஏலம் போனது. அதன் மூலம் ரூ.5 கோடியே 27 லட்சத்து 34 ஆயிரத்து 100 வருமானம் கிடைத்தது.

    பி பிரிவு ரக தலைமுடி கிலோ ரூ.8 ஆயிரத்து 529 வீதம், 9 ஆயிரத்து 500 கிலோ ஏலத்தில் வைக்கப்பட்டது. அதில் 4 ஆயிரத்து 300 கிலோ தலைமுடி ஏலம் போனது. அதன் மூலம் ரூ.3 கோடியே 66 லட்சத்து 74 ஆயிரத்து 700 வருமானம் கிடைத்தது.

    10 அங்குலம் நீளத்தில் இருந்து 18 அங்குலம் நீளம் வரை உள்ள 3-வது ரக தலைமுடியை ஏ மற்றும் பி என இரு பிரிவாக தரம் பிரித்து ஏலம் விடப்பட்டது. அதில் ஏ பிரிவு ரக தலைமுடி கிலோ ரூ.6 ஆயிரத்து 20 வீதம், 1000 கிலோ ஏலத்தில் வைக்கப்பட்டது. அதில் 1000 கிலோ தலைமுடியும் ஏலம் போனது. அதன் மூலம் ரூ.60 லட்சத்து 20 ஆயிரம் வருமானம் கிடைத்தது.

    பி பிரிவு ரக தலைமுடி கிலோ ரூ.4 ஆயிரத்து 553 வீதம், 11 ஆயிரத்து 700 கிலோ ஏலத்தில் வைக்கப்பட்டது. அதில் 100 கிலோ தலைமுடி ஏலம் போனது. அதன் மூலம் ரூ.4 லட்சத்து 55 ஆயிரம் வருமானம் கிடைத்தது.

    5 அங்குலம் நீளத்தில் இருந்து 9 அங்குலம் நீளம் வரை உள்ள 4-வது ரக தலைமுடி கிலோ ரூ.1800 வீதம், 2 ஆயிரத்து 500 கிலோ ஏலத்தில் வைக்கப்பட்டது. அதில் ஒரு கிலோ கூட ஏலம் போகவில்லை.

    5 அங்குலத்துக்கும் குறைவான நீளமுள்ள 5-வது ரக தலைமுடி கிலோ ரூ.36 வீதம், 1 லட்சத்து 35 ஆயிரம் கிலோ ஏலத்தில் வைக்கப்பட்டது. அதில் 1 லட்சத்து 35 ஆயிரம் கிலோ தலைமுடியும் ஏலம் போனது. அதன் மூலம் ரூ.48 லட்சத்து 60 ஆயிரம் வருமானம் கிடைத்தது. இதுதவிர வெள்ளை நிறத் தலைமுடி ஏலத்தில் வைக்கப்பட்டது.

    ஆக மொத்தம் 1 லட்சத்து 43 ஆயிரத்து 900 கிலோ தலைமுடி ஏலம் விடப்பட்டதில், அதன் மூலம் மொத்தம் ரூ.11 கோடியே 17 லட்சம் வருமானம் கிடைத்ததாக திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  #Tirupati #TirupatiTemple
    ×