search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நோய் கண்டறிதல்"

    • சிறப்பு மருத்துவ முகாமில் காய்ச்சல் கண்டறியப்பட்ட 728 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன.
    • சேலம் மாநகராட்சி பகுதியில் நடந்த முகாமில் 62 பேருக்கும் காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.

    சேலம்:

    தமிழகம் முழுவதும் காய்ச்சலால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருவதை தடுக்கும் வகையில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த சுகாதாரத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    அதன்படி, சேலம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக காய்ச்சல் சிறப்பு தடுப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது. சேலம் மாநகராட்சி பகுதியில் 28 இடங்களிலும், புறநகர் பகுதியில் 244 இடங்களிலும் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. சேலம் மாநகராட்சி பகுதியில் நேற்று முன்தினம் நடந்த முகாமில் 64 பேருக்கும், நேற்று நடந்த முகாமில் 62 பேருக்கும் காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.

    முடிவில், 2 நாட்களில் மொத்தம் 545 முகாம்கள் நடத்தப்பட்டதில் 29 ஆயிரத்து 348 பேர் பயனடைந்துள்ளனர். இவர்களில் 728 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவர்களுக்கு டாக்டர்கள் ஆலோசனையின்பேரில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×