search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெற் பயிர்கள்"

    • மாண்டஸ் புயலின் மையப் பகுதியான கண் பகுதி மாமல்லபுரத்தின் அருகே கரையைக் கடக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
    • 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 100 ஏக்கருக்கு மேல் நெல் பயிரிட்டனர்.

    விழுப்புரம்:

    வங்கக் கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயலின் மையப் பகுதியான கண் பகுதி மாமல்லபுரத்தின் அருகே கரையைக் கடக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இப்புயல் கரையைக் கடக்கும் பொழுது மணிக்கு 65 முதல் 75 கி.மீ., வேகத்தில் காற்று வீசும் என்றும், சில இடங்களில் 85 கி.மீ., வேகத்தில் காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதையொட்டி விழுப்புரம் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் 19 மீனவ கிராமங்கள் உள்ளன. மேலும், 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் கிழக்கு கடற்கரை சாலையையொட்டி உள்ளது.

    இப்பகுதிகளில் இன்று காலை முதலே பலத்த காற்றுடன் கடல் சீற்றமாக உள்ளது. இந்த வருடம் முழுவதும் பரவாலாக மழை பொழிவதால் மரக்காணம் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. இதனால் கிணற்றுப் பாசனத்தை நம்பியுள்ள மரக்காணம் பகுதி விவசாயிகள் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 100 ஏக்கருக்கு மேல் நெல் பயிரிட்டனர். நெற்பயிர்கள் அனைத்தும் கதிர் வந்த நிலையில் மரக்காணம் பகுதியில் இன்று காலை முதல் முதல் 30 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் கதிர்வந்த நெற்பயிர்கள் அனைத்தும் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் சோகத்தில் முழ்கினர்.

    ×