search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நூலக கட்டிடம்"

    • ஜலகண்டாபுரம் பேரூராட்சி அருகே உள்ள பொது நூலகத்தில் 4,470 உறுப்பினர்கள் உள்ளனர்.
    • இங்கு நூலகவாசிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் என தினமும் 100-க்கும் மேற்பட்டவர்கள் படிக்க வருகின்றனர்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த ஜலகண்டாபுரம் பேரூராட்சி அருகே உள்ள பொது நூலகத்தில் 4,470 உறுப்பினர்கள் உள்ளனர். இங்கு நூலகவாசிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் என தினமும் 100-க்கும் மேற்பட்டவர்கள் படிக்க வருகின்றனர்.

    1995-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த நூலக கட்டிடத்தின் மேற்கூரையில் உள்ள சிமெண்ட் பூச்சு ஆங்காங்கே பெயர்ந்து விழுந்து சேதம் அடைந்து பராமரிப்பின்றி காணப்ப டுகிறது.

    இதுகுறித்து நூலகத்திற்கு வருபவர்கள் கூறுகையில், இந்த கட்டிடம் மிகவும் பழமை வாய்ந்த கட்டிடம் ஆகும்.

    இதனால் மேற்கூரை இடிந்து விழுவதால் மாணவ, மாணவிகள் அச்சம் அடைந்து படிக்க வருவதில்லை. மேலும் பொதுமக்கள் சார்பில் பல முறை அரசு அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றனர்.

    மேலும் நூலகத்தை புதிய கட்டிடத்திற்கு மாற்றிக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    • வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • கட்டுமானப்பணிகளை துவங்க அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், அரூர் தேர்வு நிலைப் பேரூராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    தருமபுரி மாவட்டம், அரூர் தேர்வு நிலைப் பேரூராட்சியில் 2022-23ஆம் ஆண்டு கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.3.62 கோடி மதிப்பீட்டில் நவீன பேருந்து நிலையம் அமைக்கும் பணியினை தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி ஆய்வு மேற்கொண்டார்.

    இப்பணிக்கு 28.03.2023 ஆம் தேதியன்று ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு, 12.04.2023 ஆம் தேதியன்று பணி ஆணை வழங்கப்பட்டது.

    பழைய பேருந்து நிலையம் மற்றும் பேருந்து நிலையத்தில் உள்ள வணிக வளாக கடைகள் ஆகியவற்றை உடன் இடித்து அப்புறப்படுத்திவிட்டு, புதிய பேருந்து நிலையம் கட்டுமானப்பணிகளை துவங்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.

    மேலும், அரூர் வர்ணதீர்த்தம் பகுதியில் சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி உதவி திட்டத்தின்கீழ், ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் நூலக கட்டடம் கட்டப்பட உள்ள இடத்தினை மாவட்ட கலெக்டர் சாந்தி ஆய்வு மேற்கொண்டு, உடனடியாக உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு கட்டுமானப்பணிகளை துவங்க அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின் போது அரூர் வட்டாட்சியர் திரு.பெருமாள், அரூர் பேரூராட்சி செயல் அலுவலர் கலைராணி, பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணி ஆகியோர் உடன் இருந்தனர்.

    • செந்தில்குமார் எம்.எல்.ஏ. நேரில் ஆய்வு
    • இந்த ஆண்டு பணிகளை மேற்கொள்ளப்படும் என அவர்களிடம் உறுதி

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி நகரின் மையப்பகுதியில் மாவட்ட கிளை நூலகம் உள்ளது இந்த நூலகத்தின் கட்டிடங்கள் மிகவும் பழுதடைந்துள்ளதாகவும் மேற்கூறையில் உடைந்து விழுவதாகவும் பொதுமக்களும், வாசகர்களும் தொடர்ந்து புகார்களை கூறி வந்தனர்.

    வாணியம்பாடி செந்தில்குமார் எம்.எல்.ஏ. நூலகத்திற்கு சென்று கட்டிடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு இருந்த வாசகர்களிடம் குறை களையும் கேட்டு அறிந்தார்.

    இங்கு புதியதாக கட்டிடம் கட்ட சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கப்பட்டு இந்த ஆண்டு பணிகளை மேற்கொள்ளப்படும் என அவர்களிடம் உறுதியளித்தார்.

    • அடிக்கல் நாட்டு விழாவிற்கு கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார்.
    • கனிமொழி எம்.பி. தன்னையும் நூலகத்தில் ஒரு புரவலராக இணைத்துக் கொண்டார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முழுநேர நூலக கட்டிட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., சதன்திருமலை குமார் எம்.எல்.ஏ., தனுஷ் குமார் எம்.பி., ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட நூலக அலுவலர் மீனாட்சி சுந்தரம் வரவே ற்றார்.

    விழாவில் சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு நூலக கட்டிடத்திற்கு அடிக்கல் நட்டு விழாவை தொடங்கி வைத்தார். தொடர்ந்து நூலகத்தில் தன்னையும் ஒரு புரவலராக இணைத்துக் கொண்டார்.

    இதில் தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர்கள் யூ.எஸ்.டி. சீனிவாசன், பரமகுரு, மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் முத்துச்செல்வி, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்ச்செல்வி போஸ், நகராட்சி சேர்மன்கள் சங்கரன்கோவில் உமா மகேஸ்வரி சரவணன், புளியங்குடி விஜயா, தமிழ்நாடு அரசு கால மாற்ற குழு உறுப்பினர் சுந்தர்ராஜன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபீர், லயன்ஸ் கிளப் ஆளுநர் அய்யாதுரை, பாரதி வாசகர் வட்டம் கவுரவ தலைவர் வெள்ளைச் சாமி என்ற செல்வம், பள்ளி மேலா ண்மை குழு உறுப்பினர் கவுன்சிலர் முத்துமாரி பிரகாஷ், பாரதி வாசகர் வட்டம் தலைவர் ஆசிரியர் சங்கர்ராம், வட்டார நூலகர் கணேசன், மாவட்ட துணை செயலாளர் புனிதா, ஒன்றிய செயலாளர் பெரிய துரை, நகர செய லாளர்கள் சங்கரன்கோவில் பிரகாஷ், புளியங்குடி அந்தோணி சாமி, இளைஞர் அணி சரவணன் ஆசிரியர் நாரா யணன், நூலகர் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார நூலகர் முருகன் நன்றி கூறினார்.

    • தொண்டியில் பழுதடைந்த நூலக கட்டிடத்தை புனரமைக்க கோர்ட்டு உத்தரவிட்டது.
    • சுவர் இடிந்து விழும் நிலையில் இருப்ப தால் வேறு வாடகை கட்டத்திற்கு நூலகம் மாற்றப்பட்டது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி முதல் நிலை பேரூராட்சியின் சத்திரம் தெரு பகுதியில் கடந்த 1998-ம் ஆண்டு நூலக துறை சார்பில் பொது நூலக கட்டிடம் கட்டப்பட்டது. இதனால் மாணவ-மாணவிகளின் வாசிக்கும் திறன் அதிகரித்தது.

    அதன் பின்னர் இந்த கட்டிடம் கட்டி பல ஆண்டுகள் ஆனதால் பழுதடைய தொடங்கியது. இதனால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு பழுதடைந்து விட்டது. சுவர் இடிந்து விழும் நிலையில் இருப்ப தால் வேறு வாடகை கட்டத்திற்கு நூலகம் மாற்றப்பட்டது. அந்த கட்டிடத்தையும் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள முடியாத நிலையில் உள்ளது.

    எனவே தற்போது தொண்டி-மதுரை சாலையில் உள்ள செய்யது முகமது அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திற்குள் ஒரு வகுப்பறைக் கட்டிடத்தில் நூலகம் இயங்கி வருகிறது.

    பள்ளி கட்டிடத்திற்குள் இயங்குவதால் இங்கு பொதுமக்கள் சென்று பயன்படுத்த முடியவில்லை. இதனால் இந்தப்பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் கலந்தர் ஆசிக் என்பவர் தொண்டி யில் உள்ள பழுதடைந்த நூலக கட்டிடத்தை இடிக்க வும், அதே இடத்தில் புதிதாக பொது நூலகம் கட்டவும் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நீதிபதி கள் கிருஷ்ணகுமார், விஜயக்குமார் அமர்வு விசா ரித்து கட்டிடத்தை இடிக்க உத்தரவிட்டனர்.

    இதன் மூலம் தமிழகம் முழு வதும் உள்ள நூலகத்தின் நிலை என்ன? என்ற கேள்வி எழுப்பியுள்ளனர். இதனால் தொண்டி உட்பட தமிழகம் முழுவதும் உள்ள பொது நூலக கட்டிடம் புனரமைக்கப்படும் எனவும், கைபேசியின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் மீண்டும் மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் வாசிக்கும் திறன் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • சிவகங்கை உழவர் சந்தை அருகே புதிய நூலக கட்டிடத்தை செந்தில்நாதன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
    • சட்டமன்றத்தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டது.

    சிவகங்கை

    சிவகங்கை சட்டமன்றத்தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 10 லட்சம் மதிப்பில் சிவகங்கை உழவர் சந்தை அருகே புதிய நூலக கட்டிடம் அமைக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது. இதில் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு நூலக கட்டிடத்தை திறந்து வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜா, நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த், நகராட்சி பொறியாளர் பாண்டீஸ்வரி, ஒப்பந்ததாரர் முருகன், நகர் மன்ற உறுப்பினர்கள் ராபர்ட், கிருஷ்ணகுமார், தாமு, ராமதாஸ், விஜயக்குமார், தகவல் தொழில்நுட்ப மண்டல இணை செயலாளர் தமிழ்செல்வன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் செல்வமணி, கோபி, பாசறை மாவட்ட பொருளாளர் சரவணன், வட்டசெயலாளர் அருண்குமார் தங்கவேலு, நகர் மாணவரணி செயலாளர் ராஜபாண்டி மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • 90 ஆயிரம் புத்தகங்களை பாதுகாப்பாக வெளியே எடுப்பது குறித்து ஆலோசித்தனர்.
    • தொடர் மழையால் மாலை நேரத்தில் வாசகர்கள் நூலகத்தில் இல்லை.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் ஒரு வாரத்துக்கு மேலாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. இந்தநிலையில் கூடலூர் கிளை நூலக கட்டிடம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. சுமார் 46 ஆண்டுகள் பழமையான கட்டிடம் எந்த நேரத்திலும் இடிந்து விடும் நிலையில் உள்ளதாக வாசகர்கள் புகார் தெரிவித்து வந்தனர். இந்தநிலையில் தொடர் மழையால் நூலகத்துக்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. நேற்று மாலை 5 மணிக்கு நூலகர் கிளமெண்ட், ஊழியர் ஆரோன் ஆகியோர் நூலக பதிவேடுகளை சரிபார்த்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக நூலக கட்டிடத்தின் பெரும்பாலான பகுதி கண்ணிமைக்கும் நேரத்தில் இடிந்து விழுந்தது. இதை கண்ட நூலகர் மற்றும் ஊழியர் அச்சத்தில் வெளியே ஓடிவந்தனர். தொடர்ந்து மழையும் பெய்து கொண்டிருந்ததால் கட்டிடத்தில் இருந்த புத்தகங்கள் நனைந்தது. தகவல் அறிந்த கூடலூர் ஆர்.டி.ஓ. சரவண கண்ணன், தாசில்தார் சித்தராஜ் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் கட்டிடத்துக்குள் சேதமடைந்து உள்ள 90 ஆயிரம் புத்தகங்களை பாதுகாப்பாக வெளியே எடுப்பது குறித்து ஆலோசித்தனர். பின்னர் நூலகத்தில் இருந்த கணினிகள் உள்ளிட்ட பதிவேடுகள் வெளியே எடுக்கப்பட்டு மற்றொரு கட்டிடத்தில் வைக்கப்பட்டது. தொடர்ந்து பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் தீயணைப்பு படையினர் உதவியுடன் இடிபாடுகள் அகற்றப்பட்டது. பின்னர் இடிபாடுகளில் சிக்கி சேதம் அடைந்த புத்தகங்கள் சேகரிக்கப்பட்டு வேறு கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, தொடர் மழையால் மாலை நேரத்தில் வாசகர்கள் நூலகத்தில் இல்லை. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு உள்ளது என்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    ×