search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நுபுர் சர்மா"

    • நுபுர் சர்மாவை பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வைத்தார்கள்.
    • ஓவைசி மன்னிப்பு கேட்கும்படி யாரும் கேட்கவில்லை.

    மும்பை:

    தொலைக்காட்சி விவாத மேடை நிகழ்ச்சி ஒன்றில் பாஜகவை சேர்ந்த நுபுர் சர்மா, நபிகள் நாயகம் குறித்து கூறிய சர்ச்சைக்குரிய கருத்தால் பல்வேறு பகுதிகளில் அவருக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றது. பாஜகவில் இருந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், பல்வேறு நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பொதுவெளியில் நுபுர் சர்மா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.

    இந்நிலையில் நுபுர் ஷர்மாவிற்கு ஆதரவாக தற்போது மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) தலைவர் ராஜ் தாக்கரே களம் இறங்கி உள்ளார். மும்பையில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் அவர் பேசியதாவது

    (முகமது நபிகள்) குறித்து நுபுர் சர்மா பேசியபோது, பகிரங்கமாக மன்னிப்பு கேட்க சொன்னார்கள். அக்பரூதீன் ஓவைசி (இந்திய மஜ்லிக் இ இதிஹாத் உல் முஸ்லிமின் கட்சி தலைவர்) அவரது சகோதரர் ஜாகிர் நாயக். ஜாகிர் நாயக்கின் பேட்டியை யாரும் பார்க்கலாம், அவரும் அதையே சொன்னார். ஆனால் யாரும் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொல்லவில்லை.

    இந்து கடவுள்களைப் பற்றி தெரிவித்த கருத்துக்களுக்காக அவர்கள் மீது இந்திய அளவில் ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை? . அந்த இரண்டு ஓவைசி சகோதரர்கள் நமது (இந்து) கடவுள்களைப் பற்றி இழிவாக பேசுகிறார்கள், மேலும் நமது கடவுள்களுக்கு மோசமான பெயர்களை வைத்திருக்கிறார்கள். நமது கடவுள்கள் கேவலமானவர்களா? இதற்கு மன்னிப்பு கேட்கும்படி யாரும் அவரிடம் யாரும் கேட்கப் போவதில்லை. இவ்வாறு ராஜ் தாக்கரே பேசியுள்ளார்.

    • முகமது நசீம் செல்போன் மெசேஜ்களை ஆய்வு செய்த போது அவனுக்கு பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இயங்கி வந்த பயங்கரவாத அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பு இருந்தது தெரியவந்தது.
    • ஜெயிஷ்-இ-முகமது-மற்றும் தெக்ரிக்-இ-தலிபான் ஆகிய அமைப்புகளுக்கு அவன் செல்போனில் பல்வேறு தகவல்களை பரிமாறி உள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    லக்னோ:

    இறை தூதர் நபிகள் நாயகம் பற்றி டி.வி. விவாத மேடை நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா தேசிய செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா கூறிய சர்ச்சைக்குரிய கருத்து பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதையடுத்து அவர் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவருக்கு பல கொலை மிரட்டல்களும் வந்தன.

    இந்தநிலையில் நுபுர் சர்மாவை கொல்வதற்காக வந்த பயங்கரவாதி ஒருவன் உத்தரபிரதேச மாநிலத்தில் கைது செய்யப்பட்டு உள்ளான். அவனது பெயர் முகமது நசீம் ( வயது 25) உத்தரபிரதேச மாநிலம் சகாரன்பூர் மாவட்டம் குண்டகலா கிராமத்தை சேர்ந்தவன்.

    பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் அவனை கைது செய்து விசாரணை நடத்தினார்கள். மேலும் அவனிடம் இருந்து வரைபடம், செல்போன், 2 சிம்கார்டு மற்றும் வெடி குண்டுகளை பறிமுதல் செய்தனர்.

    போலீசார் அவனிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியானது. முகமது நசீம் செல்போன் மெசேஜ்களை ஆய்வு செய்த போது அவனுக்கு பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இயங்கி வந்த பயங்கரவாத அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பு இருந்தது தெரியவந்தது.

    அந்த நாடுகளை சேர்ந்த ஜெயிஷ்-இ-முகமது-மற்றும் தெக்ரிக்-இ-தலிபான் ஆகிய அமைப்புகளுக்கு அவன் செல்போனில் பல்வேறு தகவல்களை பரிமாறி உள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது. முகமது நசீம் ஜெயிஷ்-இ-முகமது பயங்கரவாதிகளுடன் கடந்த 2018-ம் ஆண்டு முதல் தொடர்பில் இருந்து வந்து உள்ளான்.

    மேலும் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் பயங்கரவாத கும்பலிடம் இருந்து அவனுக்கு பயிற்சி பெற வருமாறு அழைப்பு வந்து உள்ளது. இதனால் அவன் விரைவில் பாகிஸ்தான் சென்று அங்கிருந்து சிரியா, எகிப்து, ஆப்கானிஸ்தான் செல்ல திட்டமிட்டு இருந்தான். இதற்காக அவன் விசாவுக்கு விண்ணப்பித்து இருந்தான்.

    இந்த சமயத்தில் தான் அவனுக்கு நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த நுபுர் சர்மாவை கொல்லுமாறும், அரசு அலுவலக கட்டிடங்கள் அல்லது போலீஸ் படை மீது தாக்குதல் நடத்துமாறும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பிடம் இருந்து உத்தரவு வந்தது.

    இந்த கட்டளையை ஏற்று அவன் நுபுர் சர்மாவை கொல்ல வந்த போது தான் ஆயுதங்களுடன் சிக்கி உள்ளான்.

    அவனிடம் இந்தியாவில் பயங்கரவாத அமைப்புடன் இருக்கும் தொடர்பு குறித்து பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நுபுர் சர்மாவிடம் விசாரணை நடத்துவதற்காக மும்பை போலீசார் டெல்லி வந்தனர்.
    • கடந்த 4 நாட்களாக அவரை காணவில்லை என்றும், அவர் எங்கு இருக்கிறார் என்ற விவரத்தை கண்டறிய முடியவில்லை என்றும் மும்பை போலீசார் தெரிவித்தனர்.

    நபிகள் நாயகம் குறித்து சரச்சையான கருத்துக்களை தெரிவித்த பா.ஜனதா முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவை கைது செய்யக்கோரி இஸ்லாமியர்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர் மீது மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் வழக்கு பதிவாகி இருந்தது. விசாரணைக்காக மும்பை பைகோர்னி போலீசார் நுபுர் சர்மாவுக்கு சம்மன் அனுப்பி இருந்தனர்.

    இந்த நிலையில் நுபுர் சர்மாவிடம் விசாரணை நடத்துவதற்காக மும்பை போலீசார் டெல்லி வந்தனர். ஆனால் கடந்த 4 நாட்களாக அவரை காணவில்லை என்றும், அவர் எங்கு இருக்கிறார் என்ற விவரத்தை கண்டறிய முடியவில்லை என்றும் மும்பை போலீசார் தெரிவித்தனர்.

    டெல்லி போலீசார் இந்த விஷயத்தில் தங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

    • பாஜக செய்திதொடர்பாளர் நுபுர் சர்மா முகமது நபிகள் குறித்து சர்ச்சை கருத்தை வெளியிட்டார்.
    • அவருடைய கருத்துக்கு இஸ்லாமிய நாடுகள் கண்டங்களை பதிவு செய்தன.

    தோகா:

    பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா முகமது நபிகள் குறித்த சர்ச்சை கருத்தை வெளியிட்டது தொடர்ந்து முஸ்லீம்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அவரது கருத்துக்கு ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் கண்டங்களை தெரிவித்தன. இதையடுத்து நுபுர் ஷர்மா செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். மேலும் அவருடைய கருத்துக்கும், மத்திய அரசுக்கும் சம்பந்தமில்லை என பா.ஜ.க தெரிவித்தது.

    இந்நிலையில் நுபுர் சர்மாவின் கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கத்தார் அரசு அந்நாட்டில் பணியாற்றும் இந்து தொழிலாளர்களை வெளியேற்றி வருவதாக தகவல் வெளியாகியது. இதுதொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    இந்நிலையில் அந்த வீடியோ உண்மையில்லை என தற்போது தெரியவந்துள்ளது.

    கடந்த மார்ச் மாதம் ரெட்கோ இண்டர்நேஷனல் என்ற நிறுவனம் வெளியிட்ட சம்பள அறிக்கைக்கு எதிராக, அந்நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் போராடினர். அந்த வீடியோ தற்போதுள்ள நுபர் சர்மா விவகாரத்துடன் இணைக்கப்பட்டு போலியாக பரப்பப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நுபுர் சர்மாவின் கருத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம்களின் வீடுகளை உ.பி அரசு புல்டோசர்கள் மூலம் இடித்து வருகிறது.
    • தமது குடும்பத்தினரை வாரண்ட் இல்லாமல் காவல்துறை தடுத்து வைத்துள்ளதாக தேசிய மகளிர் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.

    லக்னோ:

    கடந்த சில நாட்களுக்கு முன் நபிகள் நாயகம் பற்றி பா.ஜ.க செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா, நவீன்குமார் ஜிண்டால் ஆகியோர் தெரிவித்த கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு இஸ்லாமிய நாடுகள் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் அவர்களை கைது செய்யக் கோரி நாடு முழுவதும் முஸ்லிம் அமைப்புகளைச் சார்ந்தவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இதன் ஒரு பகுதியாக கடந்த வெள்ளிக்கிழமை உத்தரப்பிரதேசத்தில் உள்ள மொரதாபாத், பிரக்யாராஜ் ஆகிய இடங்களில் முஸ்லீம்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் பங்கேற்ற 300 பேரை அம்மாநில காவல்துறையினர் கைது செய்தனர்.

    இதுமட்டுமில்லாமல் போராட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம்களின் வீடுகளை உ.பி அரசு புல்டோசர்கள் மூலம் இடித்து வருகிறது. இதில் முஸ்லீம்களின் போராட்டத்தை தலைமையேற்று நடத்திய ஜாவேத் முஹமது என்ற நபரின் வீடு புல்டோசர் மூலம் இடித்துத் தள்ளப்பட்டது. இவரது வீடு பிரக்யா ராஜின் கரேலி பகுதியில் அமைந்துள்ள ஜேகே ஆஷியானா காலனியில் அமைந்திருந்தது.

    இதையடுத்து ஜாவேத்தின் மகளும் சமூக ஆர்வலருமான அஃப்ரீன் பாத்திமா, தமது குடும்பத்தினரை வாரண்ட் இல்லாமல் காவல்துறை தடுத்து வைத்துள்ளதாக தேசிய மகளிர் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். இவர் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவியும், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மகளிர் கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கத் தலைவியும் ஆவார். பல்வேறு போராட்டங்களில் மாணவர்களை ஒன்றிணைந்து, தலைமை தாங்கியுள்ளார்.

    இதையடுத்து ஆஃப்ரீன் பாத்திமாவுக்கு ஆதரவாக ஜே.என்.யூ வளாகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இத்துடன் #istandwithafreenfathima என்ற ஹேஷ்டேக்கும் டிரெண்ட் ஆகி வருகிறது.

    ×