search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிர்வாகிகள் தேர்வு கூட்டம்"

    • அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம்ஊராட்சி ஒன்றிய தெற்கு பள்ளியில் தமிழக ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் தேர்வு கூட்டம் நடை பெற்றது.
    • இதில்100 மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம்ஊராட்சி ஒன்றிய தெற்கு பள்ளியில் தமிழக ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் தேர்வு கூட்டம் அரியலூர் வருவாய் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் உடையார்பாளையம் கல்வி மாவட்ட செயலாளருமான பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் தேர்தல் ஆணையாளராக வட்டார தலைவர் தேர்தல் ஆணையாளர் பிரபாகரன், வட்டார பொருளாளர் இணை ஆணையாளர் ராஜ்குமார் ஆகியோர் தேர்தல் அதிகாரிகளாக இருந்து தலைவர் செயலாளர் பொருளாளர் உள்ளிட்ட பொறுப்பாளர்களை தேர்வு செய்தனர்.

    இதில் வட்டத் தலைவராக ஆறுமுகமும், செயலாளராக அரங்கநாதனும், பொருளாளராக பாலசுப்பிரமணியனும், மகளிர் அணி செயலாளராக செல்வியும், துணை தலைவர்களாக சரண்சிங், ராமலிங்கம், உமா, துணை செயலாளராக ராஜேந்திரன், சேரன் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    இதில்100 மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • பாட்டாளி மக்கள் கட்சி தலைமை நிர்வாகிகள் மூலம் மாவட்ட நிர்வாகிகள் தேர்வு கூட்டம் மாவட்ட செயலாளர் காடுவெட்டி ரவி தலைமையில் சமூக நீதிப் பேரவை தலைவர் பா.ம.க. வழக்கறிஞர் பாலு முன்னிலையில் நடைபெற்றது.
    • இதில் அரியலூர் மாவட்டம் முழுவதும் உள்ள நபர்களை அழைத்து மாவட்ட நிர்வாகிகளை தேர்வு செய்தனர்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தனியார் திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தலைமை நிர்வாகிகள் மூலம் மாவட்ட நிர்வாகிகள் தேர்வு கூட்டம் மாவட்ட செயலாளர் காடுவெட்டி ரவி தலைமையில் சமூக நீதிப் பேரவை தலைவர் பா.ம.க. வழக்கறிஞர் பாலு முன்னிலையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் தலைமை அலுவலகத்தில் இருந்து வருகை தந்த மாநில தேர்தல் பணிக் குழு இணை செயலாளர் இசக்கி, மாநில தேர்தல் பணிக்குழு தலைவர் பேராசிரியர் செல்வகுமார், தர்மபுரி மாவட்ட அமைப்பு செயலாளர் சண்முகம், சென்னை ராயபுரம் பசுமைத்தாயக அமைப்பு செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் அரியலூர் மாவட்ட நிர்வாகிகள் தேர்வு கூட்டத்தில் கலந்துகொண்டு நிர்வாகிகளை நேர்முக தேர்வு நடத்தினர்.

    இதில் அரியலூர் மாவட்டம் முழுவதும் உள்ள நபர்களை அழைத்து மாவட்ட நிர்வாகிகளை தேர்வு செய்தனர். மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் நன்றி கூறினார்.

    ×