search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிச்சயிக்கப்பட்ட பெண்"

    • சின்ராஜ் ரம்யாவுடன் நீண்ட நேரம் பேசிவிட்டு அதன்பிறகு அங்கிருந்து சென்றுள்ளார்.
    • சின்ராஜ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பெல்லம்பட்டி பகுதியை சேர்ந்த கோபால்- மாசாணி தம்பதியரின் மகள் ரம்யா(வயது 23). இவருக்கும் பனப்பாளையம் பகுதியை சேர்ந்த கோபால் மகன் சின்ராஜ் (25) என்பவருக்கும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

    இதையடுத்து ரம்யா வும், சின்ராஜூவும் தினமும் செல்போனில் பேசி வந்தனர். நேற்று ரம்யாவின் பெற்றோர் உறவினர்களுக்கு திருமண பத்திரிகை வழங்குவதற்காக சென்று விட்டனர். அப்போது அங்கு வந்த சின்ராஜ் ரம்யாவுடன் நீண்ட நேரம் பேசிவிட்டு அதன்பிறகு அங்கிருந்து சென்றுள்ளார்.

    நேற்று மாலை ரம்யாவின் பெற்றோர் வீட்டிற்கு வந்து பார்த்த போது ரம்யா வீட்டிற்குள் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இது குறித்து தாராபுரம் போலீசில் புகார் செய்தார்.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் இன்று காலை ரம்யாவின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுப ட்டனர்.

    சின்ராஜ் பேசி விட்டு சென்ற பிறகுதான் ரம்யா தற்கொலை செய்துள்ளார். எனவே சின்ராஜ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

    ராஜஸ்தான் மாநிலம் துங்கார்பூர் மாவட்டத்தில் நிச்சயிக்கப்பட பெண் வேறு ஒருவருடன் போனில் பேசியதை கேட்ட வாலிபர் கோபத்தில் அடித்த கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #rajasthanwomen
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் துங்காபூர் மாவட்டத்தில் உள்ளா பந்தால் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிஷ். இவருக்கு அப்பகுதியைச் சேர்ந்த நிஷா என்ற பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், நேற்று இரவு நிஷாவின் வீட்டிற்கு ஹரிஷ் சென்றார். அப்போது நிஷா போனில் வேறு ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தார். யாருடன் பேசி கொண்டிருந்தாய்? என கேட்டதற்கு நிஷா சரியான பதில் அளிக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த ஹரிஷ் போனை கேட்டதற்கு அவர் தர மறுத்தார்.

    இதையடுத்து, ஹரிஷ் கோபத்தில் நிஷாவை பயங்கரமாக தாக்கினார். அதனை தடுக்க வந்த நிஷாவின் தாயாரையும் ஹரிஷ் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த நிஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    நிஷா உடலில் ஏற்பட்ட உள் காயங்களினால் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹரிஷை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. சந்தேகத்தினால் இளம்பெண் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #rajasthanwomen

    ×