search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிக் ஜோனாஸ்"

    மும்பையில் நடைபெற்று வரும் ஆகாஷ் அம்பானி திருமண நிச்சயதார்த்த விழாவில் தன்னுடைய காதலருடன் கலந்துக் கொண்டிருக்கிறார் பிரியங்கா சோப்ரா. #PriyankaChopra #NickJonas
    இந்தியாவின் நம்பர் 1 பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானிக்கும், அவரது பள்ளித் தோழியான ஷ்லோகா மேத்தாவுடன் காதல் மலர்ந்தது. இவர்களது திருமணத்திற்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர். 

    இன்று ஆகாஷ் அம்பானி மற்றும் ஷ்லோகா மேத்தாவின் நிச்சயதார்த்த நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இதில் பாலிவுட் பிரபலங்கள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள் பலர் பங்கேற்றனர்.

    மும்பையில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் ஷாருக் கான், அவரது மனைவி கவுரி கான் மற்றும் பாலிவுட் நடிகை ஆலியா பட் உள்பட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதில் நடிகை பிரியங்கா சோப்ரா, தனது காதலர் நிக் ஜோனாஸுடன் கலந்துக் கொண்டார்.



    நடிகை பிரியங்கா சோப்ராவும், பாப் பாடகர் நிக் ஜோனாஸும் பொது இடங்களில் அவ்வப்போது சுற்றி வருவதால், இருவரும் காதலித்து வருவதாகவும், ஜூலை மாதம் திருமணம் செய்ய இருப்பதாகவும் செய்திகள் வரும் நிலையில், அதை உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் ஜோடியாக விழாவில் கலந்துக் கொண்டனர்.
    பிரபல அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனாஸ், இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா இடையே காதல் இருப்பதாக கூறப்படும் நிலையில், இருவரும் ஒன்றாக சுற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. #PriyankaChopra #NickJonas
    தமிழன் படத்தில் விஜய் ஜோடியாக நடித்த பிரியங்கா சோப்ரா, இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். பாலிவுட் படங்களிலும் நடித்து வரும் பிரியங்கா அமெரிக்காவில் பிரபலமான குவான்டிகோ என்ற தொலைக்காட்சி தொடர் மூலமும் பிரபலமாகி இருக்கிறார். 

    ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். தன்னுடன் நடித்த சில இந்தி நடிகர்களுடன் பிரியங்கா சோப்ராவை இணைத்து ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன.

    தற்போது அமெரிக்காவின் பிரபல இளம் பாப் பாடகரான நிக் ஜோனாசுடன் பிரியங்கா சோப்ராவுக்கு நெருக்கம் ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அடிக்கடி இருவரும் ஜோடியாக ஊர் சுற்றும், புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. 



    படகு சவாரி, நண்பர்களுடன் விருந்து என புகைப்படங்கள் வெளியாகிய நிலையில், பிரியங்காவும், நிக் ஜோனாசும் நியூயார்க்கில் நடந்த கால்பந்து போட்டியை பார்க்க ஜோடியாக வந்துள்ளனர். இருவரும் ஸ்டேடியத்துக்கு ஜோடியாக வந்த வீடியோ படம் இணையதளத்தில் பரவி இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு இருப்பதை உறுதிப்படுத்தி உள்ளது. இது இந்தி பட உலகில் பரபரப்பாக பேசப்படுகிறது. 

    இருவரும் காதலிக்கவில்லை என்றும், அவை வெறும் வதந்தி தான் என்றும் சில தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. சமீப காலமாக இங்குள்ள நடிகைகள் பலர், வெளிநாட்டினர் மீது காதல் வயப்படுவதும் சேர்ந்து வாழ்வதும் அதிகரித்து வருகிறது. #PriyankaChopra #NickJonas
    ×