search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாராயணன் திருப்பதி"

    • நிலத்தடி நீர் ஆணைய விளம்பரத்தை சுட்டிக்காட்டி தமிழக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின
    • தமிழகத்தில் நிலத்தடி நீர் மேலாண்மை விதிமுறைகள் தமிழக அரசினால் கையாளப்பட்டு வருகின்றன.

    சென்னை:

    தமிழக பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நிலத்தடி நீர் எடுப்பதற்கு அனைவரும் முறையான அனுமதி பெற வேண்டும் என மத்திய நிலத்தடி நீர் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக கடந்த சில தினங்களாக, அந்த ஆணையத்தின் விளம்பரத்தை சுட்டிக்காட்டி தமிழக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால், தமிழகத்திற்கு இது பொருந்தாது என்பதை அறிந்துகொள்ளாமல் சிலர் விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.

    தமிழகத்தை சேர்ந்த பல நிறுவனங்கள் வெளி மாநிங்களில் தொழிற்சாலைகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களை நிர்வகித்து வரும் நிலையில், பொதுவான விளம்பரமாகவே இது கொடுக்கப்பட்டுள்ளது. 20 மாநிலங்களில் நிலத்தடி நீரை பாதுகாக்கும் ஆணையங்கள் இல்லாத நிலையில், அந்த மாநிலங்களில் மத்திய நிலத்தடி நீர் ஆணையம் அப்பணியினை செய்து வருகிறது. தமிழகம் உள்ளிட்ட 14 மாநிலங்களில் உள்ள நிலத்தடி நீர் ஆணையங்கள் நிலத்தடி நீர் குறித்த விவகாரங்களை கவனித்து கொள்ளும். மேலும், தமிழகத்தில் நிலத்தடி நீர் மேலாண்மை மற்றும் கட்டுப்பாட்டு விதிமுறைகள் தமிழக அரசினால் கையாளப்பட்டு வருகின்றன. மத்திய அரசின் வழிகாட்டுதலோடு முறையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் தற்போது உள்ள விதிமுறைகளே தொடர்கிறது.




    இந்த பொது அறிவிப்பு எண் : 3 /2022 விளம்பரம் மத்திய நிலத்தடி நீர் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 20 மாநிலங்களுக்கு மட்டுமே பொருந்தும் என மத்திய நிலத்தடி நீர் ஆணையத்தின் இணைய தளத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு நாராயணன் திருப்பதி கூறி உள்ளார்.

    • படுகொலை செய்வதை வீடியோ எடுத்து சமூக வளைதளங்களில் பதிந்தது கொடூர செயல்.
    • மதத்தின் பெயரால் சட்டத்தை கையிலெடுத்து, கொலை செய்யம் உரிமை யாருக்கும் இல்லை.

    பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

    ராஜஸ்தானில் கன்ஹையாலால் என்ற தையற்காரர் பட்டப்பகலில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். துணி தைக்க அளவு கொடுப்பதாக சொல்லிக் கொண்டு தையற்கடைக்குள் சென்ற ரியாஸ் மற்றும் முகமது என்ற இரு நபர்கள் கன்ஹையா லாலை கடைக்குள்ளே வெட்டி படுகொலை செய்வதை அவர்களே வீடியோ எடுத்து சமூக வளைதளங்களில் பதிந்ததும் உள்ளது கொடூர செயல்.

    கன்ஹையாலால் நுபூர் ஷர்மாவுக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் பதிவு செய்ததை அடுத்து இந்த படுகொலை நடைபெற்றுள்ளது. கொலை செய்தவர்கள் கைது செய்யப்பட்டு விட்டாலும், ஏற்கனவே பல மிரட்டல்கள் விடப்பட்டிருந்த நிலையில் ராஜஸ்தானில் உள்ள காங்கிரஸ் அரசு கன்ஹையாலாலுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க தவறியது. கொடூரமான இந்த கொலைச் சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

    மதத்தின் பெயரால் சட்டத்தை கையிலெடுத்து, கொலை செய்யம் உரிமை யாருக்கும் இல்லை. காட்டுமிராண்டித்தனமான இந்த கொடூர செயலை செய்தவர்களுக்கு உச்சபட்ச தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்பதோடு மதத்தின் பெயரால் நடைபெறும் படுகொலைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.  இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×