search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடிகை கஸ்தூரி"

    • திராவிட விழுதுகள் ஊழல் அழிப்பு, பலதார மணம் எதிர்ப்பு, லஞ்ச ஒழிப்பு என்று ஒரு சின்ன கூட்டமாவது போடுவார்களா?
    • தி.மு.க. ஆட்சிக்கு வந்தாலே சட்டம் ஒழுங்கு சீரழியும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான்.

    சென்னை:

    சனாதன தர்மத்தை டெங்கு, கொரோனாவுடன் ஒப்பிட்டு அதை ஒழிப்பேன் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா சனாதன தர்மம் எய்ட்ஸ், தொழுநோய் போன்றது என்று விமர்சித்தார்.

    இதுதொடர்பாக நடிகை கஸ்தூரி கூறியதாவது:-

    இளவரசருக்கு டெங்கு, கொரோனா... ஆ.ராசாவுக்கு எய்ட்ஸ், தொழுநோய் பொருத்தம்தான். அட மாநாடு வேணாம்யா... திராவிட விழுதுகள் ஊழல் அழிப்பு, பலதார மணம் எதிர்ப்பு, லஞ்ச ஒழிப்பு என்று ஒரு சின்ன கூட்டமாவது போடுவார்களா?

    பிடிக்காத விஷயத்தை தானே எதிர்க்க முடியும். தேர்தலுக்கு தேர்தல் இந்த மாதிரி எதையாவது பேசுவார்கள். தேர்தலுக்கு முற்றிய சனாதனிகளிடம் போய் நிற்பார்கள். அவர்களின் கூட்டணி தலைவர்கள் கூட இதை ஏற்றுக்கொள்ளவில்லை.

    காலை தந்தை (மு.க.ஸ்டாலின்) 1000 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டதாக மகிழ்ச்சி அடைந்தார். மாலையில் தனயன் சனாதனத்தை ஒழிப்பேன் என்கிறார். இந்த இரட்டை நிலைப்பாடு ஏன்?

    தி.மு.க. ஆட்சிக்கு வந்தாலே சட்டம் ஒழுங்கு சீரழியும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். முதலில் அதை ஒழித்துவிட்டு வரட்டும். அப்போது முதல் ஆளாக நானே கைதட்டி வரவேற்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • டெங்கு, மலேரியா உங்கள் குடும்பத்திலேயே முற்றியிருக்கிறதே. அவர்களை என்ன பண்ணுறதா உத்தேசம்?
    • கோவில்கள் கொடியவர்களின் கூடாரம் ஆகி விடக்கூடாது என்று கலைஞர் அன்றே சொன்னார்.

    சென்னை:

    சனாதனதர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. நடிகையும் சமூக ஆர்வலருமான நடிகை கஸ்தூரி உதயநிதி ஸ்டாலினை விமர்சித்துள்ளார்.

    டெங்கு, மலேரியா உங்கள் குடும்பத்திலேயே முற்றியிருக்கிறதே. அவர்களை என்ன பண்ணுறதா உத்தேசம்? ஊருக்கு உபதேசம் அதுவே திராவிடிய பரம்பரை யுக்தி சனாதனத்தின் மீது அவ்வளவு வெறுப்பு உள்ளவர்களுக்கு இந்து கோவில் சொத்து மட்டும் கேட்குதோ? முதலில் உண்டியலில் இருந்து கையை எடுங்க.

    கோவில்கள் கொடியவர்களின் கூடாரம் ஆகி விடக்கூடாது என்று கலைஞர் அன்றே சொன்னார். இதைத்தான் சொன்னார் போலும்.

    சனாதன எதிர்ப்பில் தி.க.வை. போல் தி.மு.க.வும் உறுதியாக இருந்தால் முதலில் இந்தியா கூட்டணியை விட்டு வெளியேற வேண்டும். ஏனெனில் பல சனாதனவாதிகள்தான் அந்த கூட்டணியில் இருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • வேலியே பயிரை மேய்வது போல் பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளது.
    • இன்று பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள பள்ளிகளின் பெயரை கூறுவதில்லை.

    கோவை:

    நடிகை கஸ்தூரி கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:

    பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழகம் என நாம் அறிக்கை விட்டுக் கொண்டிருந்தோம். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பள்ளி மாணவிகளுக்கு பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்களும், மர்மமான மரணங்களும் நிகழ்ந்து வருகிறது.

    வேலியே பயிரை மேய்வது போல் பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளது. இது வருத்தத்தை தருகிறது. இவை அரசியல் மற்றும் போலீசார் உதவியுடன் மூடி மறைக்கப்படுகிறது. இதை முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும்.

    தற்போது காவல்துறை மீது இருந்த நம்பிக்கை குறைந்து விட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூர் சம்பவத்தில் ஒரு உயிர் பிரிந்துள்ள நிலையில் இந்த சம்பவம் விவாத பொருளாக மாறிவிட்டது.

    சம்பவம் நடந்து 3 நாட்களாக மாணவியின் பெற்றோர் அமைதியாக விளக்கம் கேட்டபோது எந்த பதிலும் தராத அரசு கலவரம் நடந்த பிறகு பல அறிக்கைகள் தந்தது. கடந்த அ.தி.மு.க ஆட்சியின்போது காவல்துறையை நம்பாதீர்கள் என கூறிய தி.மு.க. தற்போது ஆட்சிக்கு வந்த பிறகு கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு காவல்துறை காரணமல்ல, சமூக விரோதிகள் ஊடுருவி விட்டனர் என கூறுகிறது.

    கடந்த ஆட்சி காலத்தில் இதே கருத்தை அன்று முதல்வராக இருந்த இ.பி.எஸ் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் கூறியபோது விமர்சித்தவர்கள் தற்போது கூறுவதை எப்படி ஏற்க முடியும். இதேபோல் கடந்த ஆண்டு பத்மா சேஷாத்ரி பள்ளி மீதான பாலியல் குற்றச்சாட்டு சம்பவத்தில் அப்பள்ளியின் பெயரை தொடர்ந்து கூறி விமர்சித்தார்கள்.

    இன்று பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள பள்ளிகளின் பெயரை கூறுவதில்லை. அதற்கும் அரசியல் தான் காரணம். தனியார் பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் நடைபெற்று வந்த நிலையில் இன்று கோவையில் அரசு பள்ளி ஆசிரியர் மாணவிகளிடம் அத்துமீறியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    போக்சோ சட்டத்தை போன்று எத்தனை சட்டங்கள் வந்தாலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தினால் மட்டுமே பள்ளிகளில் பாலியல் வன்கொடுமைகள் குறையும். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளில் ஆசிரியர்கள் ஈடுபடும் பட்சத்தில் அப்பள்ளியை நிரந்தரமாக மூட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×