search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நஜிப் ரசாக்"

    • நஜிப் ரசாக் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமானதால் அவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
    • நஜிப்பின் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

    கோலாலம்பூர்:

    மலேசியாவில் நஜிப் ரசாக் பிரதமராக இருந்த போது, அந்நாட்டின் அரசு முதலீட்டு நிதி அமைப்பான 1 எம்.டி.பி. நிறுவனத்தில் 4,500 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மலேசியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த புகார் தொடர்பாக அவருக்கு சொந்தமான சொத்துக்கள் மீது மலேசிய ஊழல் தடுப்பு பிரிவினர் சோதனை நடத்தப்பட்டு ஏராளமான நகை மற்றும் பணம் கைப்பற்றப்பட்டது.

    இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், நஜிப் ரசாக் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமானதால் அவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. 

    இந்த தீர்ப்பை எதிர்த்து நஜிப் ரசாக், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது நஜிப் ரசாக்கிற்கு உயர் நீதிமன்றம் விதித்த 12 ஆண்டு சிறைத்தண்டனையை உறுதி செய்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

    உயர் நீதிமன்ற நீதிபதி அளித்த தீர்ப்பு சரியானது என்றும், நஜிப்பின் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். அத்துடன் நஜிப்பின் தண்டனையை உறுதி செய்தனர். எனவே, நஜிப் உடனடியாக சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும். முதல் முன்னாள் பிரதமர் ஒருவர் மலேசியாவில் சிறையில் அடைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

    ஊழல் வழக்கில் விசாரணையை எதிர்நோக்கி காத்திருக்கும் மலேசியா முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மங்கோலியா நாட்டு மாடல் அழகி கொலை வழக்கிலும் சிக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. #Malaysia #NajibRazak #AltantuyaShaariibu
    கோலாலம்பூர்:

    மலேசியாவில் சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், 60 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் இருந்து வந்த பேரிசன் நேஷனல் கூட்டணி (பி.என்.) தோல்வியைத் தழுவியது.

    எதிர்க்கட்சி கூட்டணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நஜிப் ரசாக், பிரதமர் பதவியை இழந்தார். மேலும், 92 வயது மகாதீர் முகமது பிரதமர் ஆனார். அதைத் தொடர்ந்து, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஊழல் புரிந்து உள்ளதாக நஜிப் ரசாக் மீது எழுந்த குற்றச்சாட்டு சூடு பிடிக்கத்தொடங்கியது. அவர் நாட்டை விட்டு வெளியேறக்கூடாது என தடை விதிக்கப்பட்டது.

    அவரது வீட்டிலும், அவருக்கு சொந்தமான இடங்களிலும் போலீசார் அதிரடி சோதனைகள் நடத்தினர். அங்கு இருந்து பண கட்டுகள், நகைகள் வைத்து நிரப்பப்பட்ட ஏராளமான கைப்பைகள் சிக்கின.

    இந்த நிலையில் அவர் வரும் செவ்வாய்க்கிழமை அன்று விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறி ஊழல் தடுப்பு அமைப்பு சம்மன் அனுப்பி உள்ளது. அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படும். அதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்படுவாரா? என்பது தெரியவரும்.

    இந்நிலையில், மலேசியா நாட்டில் கடந்த 2006-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட மங்கோலியா நாட்டு மாடல் அழகி கொலை வழக்கில் முன்னாள் பிரதமர் நசிப் ரசாக்கை தொடர்புப்படுத்தி, மறு விசாரணை நடத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

    மங்கோலியா நாட்டை சேர்ந்தவர் அல்டன்ட்டுயா ஷாரிபு. பிரபல மாடல் அழகி. இரு குழந்தைகளுக்கு தாயான இவருக்கும் முன்னாள் பிரதமர் நசிப் ரசாக்கின் நண்பரும் அரசியல் ஆலோசகருமான அப்துல் ரசாக் பகின்டா என்பவருக்கும் இடையே காதல் இருந்ததாக முன்னர் தகவல் வெளியாகின.

    இந்நிலையில், 18-10-2006 அன்று மலேசியாவில் அல்டன்ட்டுயா ஷாரிபு(28) கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். அப்போது நஜிப் ரசாக் பாதுகாப்புத்துறை மந்திரியாகவும், துணை பிரதமராகவும் பதவி வகித்து வந்தார்.

    கடந்த 2002-ம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டில் இருந்து மலேசியாவுக்கு இரு நீர்மூழ்கி கப்பல்களை வாங்கிய பேரத்தில் நடைபெற்ற ஊழலில் அப்துல் ரசாக் பகின்டாவுக்கும், அல்டன்ட்டுயா ஷாரிபுவுக்கும் பங்கிருந்ததாகவும், இந்த விவகாரம் வெளியே கசியாமல் இருப்பதற்காக அல்டன்ட்டுயா கொல்லப்பட்டதாகவும் அப்போது தகவல்கள் வெளியாகின.

    இந்த கொலை தொடர்பாக அப்துல் ரசாக் பகின்டா மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. ஆனால், கொலை செய்ய தூண்டியதான வழக்கில் இருந்து கடந்த 2008-ம் ஆண்டில் அவர் விடுவிக்கப்பட்டார்.

    இவ்வழக்கில் கைதாகி, மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள இரு போலீசாரில் ஒருவர் மரண தண்டனைக்கு எதிரான அப்பீல் வழக்கில் ஜாமினில் வெளியே வந்து வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விட்டார். இவர்கள் இருவருமே நஜிப் ரசாக்கின் பாதுகாப்பு படையில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.


    கொலை வழக்கில் கைதான போலீசார்

    மலேசியாவில் இருந்து தப்பியோடி ஆஸ்திரியா நாட்டுக்கு சென்ற போலீஸ்காரர் சிருல் அசார் உமர் என்பவர் அந்நாட்டு குடியுரிமைத்துறை அதிகாரிகளிடம் கடந்த 2015-ம் ஆண்டு பிடிபட்டு, தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

    மலேசிய அரசு தனக்கு பொது மன்னிப்பு அளித்தால் அல்டன்ட்டுயா ஷாரிபுவை கொல்லுமாறு தனக்கு கட்டளை பிறப்பித்த பெரும்புள்ளி யார்? என்பதை வெளிப்படையாக அறிவிக்கவும், கோர்ட்டில் வந்து வாக்குமூலம் அளிக்கவும் நான் தயாராக இருக்கிறேன் என சமீபத்தில் சிருல் அசார் உமர் குறிப்பிட்டிருந்தார்.

    தற்போது மலேசியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் பல்வேறு நாட்டு தலைவர்களும் புதிய பிரதமரும் மலேசியா நாட்டின் மிக மூத்த அரசியல் தலைவருமான மஹதிர் முகம்மதுவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    அவ்வகையில், நேற்று அவருக்கு நல்வாழ்த்துகளை தெரிவித்து வாழ்த்து கடிதம் அனுப்பிய மங்கோலியா நாட்டு அதிபர்
    பட்டுல்கா கல்ட்மா, இரு குழந்தைகளுக்கு தாயான தங்கள் நாட்டுப் பெண்ணும் மாடல் அழகியுமான அல்டன்ட்டுயா ஷாரிபு மலேசியாவில் கொல்லப்பட்ட விவகாரத்தை உங்களது கவனத்துக்கு கொண்டு வருவதன் மூலம் இதற்கான நீதி கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதம் மங்கோலியா நாட்டு அரசு இணையதளத்திலும் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், மலேசியா மன்னரின் பொது மன்னிப்பின்படி சிறையில் இருந்து விடுதலையான அன்வர் இப்ராகிம், அல்டன்ட்டுயா ஷாரிபு கொலை வழக்கில் முன்னர் முறையான, நியாயமான விசாரணை நடத்தப்படவில்லை. எனவே, தற்போது நஜிப் ரசாக் மற்றும் அவரது நண்பர் அப்துல் ரசாக் பகின்டா ஆகியோரையும் இணைத்து மறுவிசாரணையை தொடங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    ஆஸ்திரியா நாட்டில் சிறைபட்டிருக்கும் சிருல் அசார் உமருக்கு பொது மன்னிப்பு அளிக்கப்பட்டு, அவரை மலேசியாவுக்கு அழைத்து வந்தால் மங்கோலியா மாடல் அழகி கொலை தொடர்பான மறுவிசாரணை சூடு பிடிக்கலாம். அப்போது, குற்றம்சாட்டப்படுபவர்கள் பட்டியலில் அப்துல் ரசாக் பகின்டா, நஜிப் ரசாக் ஆகியோரும் இணைக்கப்படலாம் என மலேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

    இதனால், ஏற்கனவே ஊழல் வழக்கில் விசாரணையை எதிர்நோக்கி காத்திருக்கும் மலேசியா முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மங்கோலியா நாட்டு மாடல் அழகி கொலை வழக்கிலும் சிக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.  #Malaysia #NajibRazak #AltantuyaShaariibu
    அரசு நிதியை சொந்த வங்கி கணக்குக்கு மடைமாற்றம் செய்தது தொடர்பாக மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு அந்நாட்டு ஊழல் ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. #NajibRazak #summon
    கோலாலம்பூர்:

    மலேசியாவின் 14வது பாராளுமன்ற தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக 60 ஆண்டுகளுக்குப் பிறகு எதிர்க்கட்சிகள் கூட்டணி வெற்றி பெற்றது. இதையடுத்து 92 வயதான மகாதிர் முகமது அந்நாட்டின் பிரதமராக பதவியேற்றுள்ளார்.

    முன்னதாக, மலேசிய அரசின் நிதியில் இருந்து 680 மில்லியன் டாலர் அளவுக்கு முறைகேடு செய்து அந்த தொகையை தனது தனிப்பட்ட வங்கிக் கணக்குகளில் மடைமாற்றி விட்டதாக மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

    இதையடுத்து, அவர் பதவி விலக வேண்டும் என முன்னாள் பிரதமரும் எதிர்க்கட்சி தலைவருமான மகாதிர் முகமது வலியுறுத்தி வந்தார். தேர்தலில் தோல்வி அடைந்த பின்னர் கட்சி தலைவர் பதவியையும் நஜிப் ரசாக் ராஜினாமா செய்தார்.

    தற்போது அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் ஊழல் வழக்கில் சிக்கியுள்ள முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லலாம் என தகவல் வெளியானது. அதற்கேற்ப, நஜிப் ரசாக் ரோஸ்மா மன்சூர் தனி விமானம் மூலம் இந்தோனேசியா தலைநகர் ஜகர்தாவுக்கு செல்ல திட்டமிட்டிருந்ததாக உளவுத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

    இதைதொடர்ந்து. நஜிப் ரசாக் மற்றும் அவரது மனைவி வெளிநாடுகளுக்கு மலேசியா நாட்டின் குடியுரிமைத்துறை தடை விதித்துள்ளது.

    இந்நிலையில், அரசு நிதி 680 மில்லியன் டாலர்களை சொந்த வங்கி கணக்குக்கு மடைமாற்றம் செய்தது தொடர்பாக வரும் செவ்வாய்க்கிழமை மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு அந்நாட்டு ஊழல் ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. #NajibRazak #summon

    மலேசியா முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் ஆட்சியில் நடந்த அனைத்து ஊழல்கள் தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் என பிரதமர் மகாதிர் முகம்மது உத்தரவிட்டுள்ளார். #Mahathir #NajibRazak
    கோலாலம்பூர்:

    மலேசியாவின் புதிய பிரதமராக 92 வயதான மகாதிர் முகம்மது பதவியேற்றுள்ளார். அவர் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் ஆட்சியில் நடைபெற்ற அனைத்து ஊழல்கள் குறித்தும் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். இதற்காக புதிய ஊழல் தடுப்பு ஏஜென்சி தலைவர் நியமனம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மகாதிர் முகம்மது, அனைத்து அமைச்சகங்களில் உள்ள ஆவணங்களையும், வெளியே எடுத்துச் செல்ல மற்றும் அழிக்கக்கூடாது.



    முன்னாள் பிரதமர் நஜிப் ராசாக் ஆட்சியில் இருந்த போது மலேசிய ஊழல் தடுப்புக்குழுவின் முன்னாள் தலைவர் அப்துல் ரசாக் மீதான ஊழல் வழக்கை விசாரிக்க விடாமல் தடுத்ததாக புகார் எழுந்தது. அப்துல் நசாக் அரசு பணம் 4.5 மில்லியன் டாலர் ஊழல் செய்ததாக் கூறப்பட்டது. அவர் மீது பல புகார்கள் செய்யப்பட்டன. இந்நிலையில், அவர் ஆட்சியில் நடைபெற்ற அனைத்து ஊழல்கள் குறித்தும் உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும்.

    என மகாதிர் முகம்மது கூறினார்.

    கடந்த வாரம் நஜிப் மற்றும் அவரது மனைவி வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்ல இருப்பதால், அவர் பயணம் செய்ய தடைவிதிக்க வேண்டும் என மகாதிர் முகம்மது கூறினார். #Mahathir #NajibRazak

    ×