search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நகராட்சி பணியாளர்"

    • தீவிர தூய்மை பணிகள் குறித்து விளக்க கூட்டத்தில் கலெக்டர் பங்கேற்றார்.
    • நகராட்சி பணியாளர்கள், குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள்மற்றும் பொதுமக்கள் நகரங்களின் தூய்மை குறித்த உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் நகராட்சி அலுவலககூட்டரங்கில் அனைத்து குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகளுடன் தீவிரத் தூய்மை பணிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம் குறித்த விளக்க கூட்டம் நடந்தது. இதில் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பங்கேற்று பேசியதாவது:-

    நமது சுற்றுபுறத்தை எவ்வாறு தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை அனைவரும் அறிவோம். தெரிந்த ஒன்றை எவ்வாறுசெயல்படுத்த வேண்டும் என்பதை நாம் அறிய வேண்டும். தூய்மை பணியில் ஈடுபடும் போது நம்மை மட்டும் ஈடுபடுத்தி கொள்ளாமல் அனைவரின் பங்களிப்பை உறுதிப்படுத்த வேண்டும்.

    ஒரு தண்ணீர் பாட்டிலில் தண்ணீர் இருக்கும் வரை எவ்வாறு பாதுகாக்கிறோமோ அதே அளவுக்கு தண்ணீர் முடிந்தவுடன் அந்த பாட்டிலை குப்பை தொட்டியில் போடும் வரை பாதுக்காக்க வேண்டும். முடிந்த அளவிற்கு ஒருமுறை பயன்படுத்த கூடிய பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும்.

    உணவகங்கள் உள்ளிட்ட இடங்களில் பிளாஸ்டிக் பேப்பர் மற்றும் பிளாஸ்டிக் குவளைகளை தவிர்த்து மாற்று பொருள்கள் பயன்படுத்துவதற்கு முன்வர வேண்டும்.

    நகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பொது மக்களிடம் பிளாஸ்டிக் கழிவினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.ஜூன் மாதம் 4-வது சனிக்கிழமை (நாளை) குப்பையை தரம் பிரித்து கொடுப்பது பற்றிய விழிப்புணர்வு நடவடிக்கைகளை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ள வேண்டும்.

    குப்பையை பிரித்து கொடுப்பது பற்றிய விழிப்புணர்வு கூட்டத்தில் தன்னார்வலர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பிரபலமானவர்களை முன்பே கண்டறிந்து அவர்களுக்கு இந்த செயல்பாட்டின் நோக்கம் மற்றும் அதனை மக்களுக்கு விளக்கும் முறை குறித்து முன்பே தெளிவுபடுத்த வேண்டும்.விழிப்புணர்வு மற்றும் செயலாக்க கூட்டங்கள் நடத்தப்படும் இடங்களாக பூங்காக்கள், நகர்புற விளையாட்டு மைதானங்கள் மற்றும் இதர இடங்கள் முன்பே கண்டறிந்து நடத்த வேண்டும். கூட்டம் நடக்கும் தேதி மற்றும் நேரம் அந்த பகுதி குடியிருப்பு வாசிகளுக்கும், குடியிருப்போர் நலச்சங்க பிரதிநிதிகள், பகுதி முக்கியஸ்தர்களுக்கும் பொது அறிவிப்பின் மூலம் முன்பே தெரியப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அதனைத் தொடர்ந்து கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நகராட்சி பணியாளர்கள், குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள்மற்றும் பொதுமக்கள் நகரங்களின் தூய்மை குறித்த உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.

    ×