search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழிலாளி உடல்"

    • கொலை செய்து வீரபாண்டியன்பட்டினம் ஜெ.ஜெ. நகர் காட்டு பகுதியில் கொலை செய்து புதைத்தது தெரிய வந்தது.
    • பிரேத பரிசோதனையை விரைந்து நடத்தக்கோரியும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் அருகே வீரபாண்டியன்பட்டினம் பிரசாத் நகரை சேர்ந்தவர் பாலகண்ணன் (வயது 40). இவர் கல்லாமொழி அனல்மின் நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார்.

    இவருக்கு பேச்சியம்மாள் (31) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். கடந்த 7-ந் தேதி பால கண்ணன் வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால், பேச்சியம்மாள் கடந்த 9-ந்தேதி திருச்செந்தூர் தாலுகா போலீசில் புகார் செய்துள்ளார்.

    உடனே போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி.க்கள் மூலமாக ஆய்வு செய்ததில் பாலகண்ணனை திருச்செந்தூர் ஜீவா நகரை சேர்ந்த வாலிபர்கள் சிலர் மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றது தெரிய வந்தது.

    இதுதொடர்பாக சம்பந்தப்பட்டவர்களில் 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், சாலையில் நடந்து சென்ற பாலகண்ணன் மீது மோதி சேதம் அடைந்த மோட்டார் சைக்கிள் உபகரணங்களை மாற்ற பணம் கேட்ட தகராறில் அவரை கொலை செய்து வீரபாண்டியன்பட்டினம் ஜெ.ஜெ. நகர் காட்டு பகுதியில் கொலை செய்து புதைத்தது தெரிய வந்தது.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே பாலகண்ணன் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்து அவரது உறவி னர்கள் திருச்செந்தூர் பகத்சிங் பஸ் நிலையம் முன்பு நேற்று மாலையில், கொலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய கோரியும், பிரேத பரிசோதனையை விரைந்து நடத்தக்கோரியும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்களிடம் திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ் தலைமையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து இன்று தாசில்தார் முன்னிலையில் கொலை செய்து புதைக்கப்பட்ட பாலகண்ணன் உடலை தோண்டி எடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதன்பின்னர் அவரது உடலை உடனடியாக பிரேத பரிசோதனை செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனையொட்டி அந்த பகுதியில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

    ×