search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழிலாளர்களுக்கு"

    • அடுத்த மாதம் 15-ந்தேதி தொடங்குகிறது
    • பயிற்சி பெறும் கட்டுமான தொழிலாளர்களின் கல்வி தகுதி 5-ம் வகுப்பு முதல் 12 மற்றும் ஐ.டி.ஐ.படிப்பு இருக்கலாம்.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ராஜகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு கட்டுமான கழகத்தால் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு 3 மாத கால திறன் பயிற்சி மற்றும் ஒரு வார கால திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. 3 மாத கால திறன் பயிற்சியை தமிழ்நாடு கட்டுமான கழகமானது எல் அன்ட் டி கட்டுமான திறன் பயிற்சி நிலையத்துடன் இணைந்து நடத்த உள்ளது.

    பயிற்சி பெறும் கட்டுமான தொழிலாளர்களின் கல்வி தகுதி 5-ம் வகுப்பு முதல் 12 மற்றும் ஐ.டி.ஐ.படிப்பு இருக்கலாம். வயது 18-ல் இருந்து 40 ஆக இருத்தல் வேண்டும். பயிற்சி வழங்கப்படும் தொழில்கள் கொத்தனார், பற்ற வைப்பவர், மின்சார பயிற்சி, குழாய் பொருத்துனர், மரவேலை, கம்பி வளைப்பவர், கார்பென்டர், பார்பென்டிங் மற்றும் ஸ்கப் போல்டிங் பயிற்சிக்கு கட்டணம் ஏதும் கிடையாது. உணவு, தங்குமிடம் ஆகியவை இலவசமாக வழங்கப்படும். பயிற்சி பெறுபவர்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

    இதேபோல் ஒரு வார கால பயிற்சி தையூரில் அமைய உள்ள தமிழ்நாடு கட்டுமான கழகத்தில் நடைபெறும். பயிற்சி பெறும் கட்டுமான தொழிலாளர்கள், தமிழ் மொழியில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். வயது 18-க்கு மேல் இருத்தல் வேண்டும். பயிற்சி பெறுபவர் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்து இருத்தல் வேண்டும். 3 வருடம் உறுப்பினராக இருத்தல் வேண்டும்.

    பயிற்சி வழங்கப்படும் தொழில்கள் கொத்தனார், பற்ற வைப்பவர், மின்சார பயிற்சி, குழாய் பொருத்துனர், மரவேலை, வளைப்பவர், கார்பென்டர், பார்பென்டிங் மற்றும் ஸ்கப் போல்டிங் மற்றும் பயிற்சியாளர்களுக்கு தினந்தோறும் வேலை இழப்பு ஏற்படுவதை ஈடு செய்ய தினந்தோறும் ரூ.800 வழங்கப்படும். தமிழ்நாடு கட்டுமான கழகம், எல் அன்ட் டி கட்டுமான திறன் பயிற்சி நிலையம் இணைந்து மத்திய அரசின் கீழ் உள்ள தேசிய திறன் மேம்பாட்டு கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும்.

    இது குறித்த கூடுதல் விவரங்களை அறிய பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்கள் அவர் தம் வசிக்கும் பகுதிகளுக்கு தொடர்புடைய நாகர்கோவில் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகம் அல்லது மார்த்தாண்டம் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தை அணுக வேண்டும். இந்த பயிற்சி அடுத்த மாதம் 15 -ந்தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழ்நாடு கட்டுமானத்‌ தொழிலாளர்கள்‌ நல வாரி யம்‌ மற்றும்‌ உடலுழைப்புத்‌ தொழிலாளர்கள்‌ நல வாரியம்‌ மூலம்‌ நாமக்கல்‌ மாவட்ட கண்கா ணிப்புக்குழு கூட்டம்‌ கலெக்டர் உமா‌ தலைமை யில்‌ நடைபெற்றது.
    • தொழிற் சங்க தரப்பு பிரதிநிதிகள்‌, நிர்வாக தரப்பு பிரதிநிதிகள்‌ மற்றும்‌ அரசு தரப்பு பிரதிநிதிகள்‌ அனைவரும்‌ கலந்துகொண்டனர்‌.

    நாமக்கல்:

    நாமக்கல், தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகத்தின் கீழ் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரி யம் மற்றும் உடலுழைப்புத் தொழிலாளர்கள் நல வாரியம் மூலம் நாமக்கல் மாவட்ட கண்கா ணிப்புக்குழு கூட்டம் கலெக்டர் உமா தலைமை யில் நடைபெற்றது. கூட்டத்தில் நாமக்கல், தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாது காப்புத் திட்டம்), தொழிற் சங்க தரப்பு பிரதிநிதிகள், நிர்வாக தரப்பு பிரதிநிதிகள் மற்றும் அரசு தரப்பு பிரதிநிதிகள் அனைவரும் கலந்துகொண்டனர்.

    இதில் தமிழ்நாடு கட்டுமானம், அமைப்புசாரா மற்றும் ஓட்டூநர்கள் நல வாரியங்களில் இது நாள்வரை 3,75,708 பயனாளிகளுக்கு ரூ.195 கோடியே 62 லட்சத்து 47 ஆயிரத்து 812 நலத்திட்ட உதவிகள் வழங்கப் பட்டுள்ளது. மே மாதத்தில் 5,306 பயனாளிகளுக்கு ரூ.6 கோடியே 31 லட்சத்து 36 ஆயிரத்து 250 நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள் ளது என்று தெரிவிக்கப் பட்டது. வீட்டு வசதித்திட்டம் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரி யத்தில் பதிவு பெற்ற தொழிலாளிக்கு ரூ.4 லட்சம் வழங்குவது தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப் பட்டது,

    • தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு பெற்ற சொந்த வீடு இல்லாத கட்டுமான தொழிலாளர்கள் சொந்தமாக வீட்டுமனை வைத்திருந்தால் ரூ.4 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படுகிறது.
    • இத்தகவலை தொழிலாளர் உதவி ஆணையர் முருகேசன் தெரிவித்துள்ளார்.

    ஈரோடு:

    தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு பெற்ற சொந்த வீடு இல்லாத கட்டுமான தொழிலாளர்கள் சொந்தமாக வீட்டுமனை வைத்திருந்தால் அவர்களா–கவே வீடு கட்டி கொள்ள நிதியுதவி வழங்கப்படுகிறது.

    தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் ஏற்கனவே கட்டப்பட்ட குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெற நிதியுதவி அளிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இத்தொழிலாளர்கள் வீடு கட்டும் திட்டத்தில் ரூ.4 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படுகிறது.

    நலவாரியத்தில் பதிவு பெற்று 3 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து புதுப்பித்தல் உள்ள தொழிலாளர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். சொந்த வீட்டுமனை வைத்திருந்தால் 300 சதுரடி அளவில் வீடு கட்ட இடவசதி இருக்க வேண்டும். இந்நிலம் அத்தொழிலாளி அல்லது அவரது குடும்ப உறுப்பினர் பெயரில் இருக்க வேண்டும். நில உரிமைக்கான பட்டா முறையாக பெற்றிருக்க வேண்டும்.

    நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்ட குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெற ரூ.4 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படும். அத்தொழிலாளியின் ஆண்டு வருவாய் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.

    தகுதியானவர்கள் நலவாரிய உறுப்பினர் அட்டை, ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, குடும்ப உறுப்பினர் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல், ஒரு புகைப்படம், வருமான வரி சான்றிதழ் ஆகியவற்றை tnuwwb.tn.gov.in என்ற இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

    கூடுதல் விபரம் அறிய ஈரோடு சென்னிமலை சாலை அரசு ஐ.டி.ஐ. பின்புறம் உள்ள ஒருங்கி ணைந்த தொழிலாளர் துறை அலுவலக வளாகத்தில் இயங்கும் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகம் அல்லது 0424 2275592 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு அறியலாம்.

    இத்தகவலை தொழிலாளர் உதவி ஆணையர் முருகேசன் தெரிவித்துள்ளார். 

    ×