search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொடர் மழை நீடிப்பு"

    மழை நீடித்து வருவதால் பெரியாறு மற்றும் வைகை அணைகளின் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
    கூடலூர்:

    கேரளாவிலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளிலும், கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

    இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 133.10 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,746 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 1,907 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 5,422 மில்லியன் கன அடியாக உள்ளது.

    பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதாலும் வைகை அணையின் நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையாலும் வைகை அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்தது. 71 அடி உயரமுள்ள அணையில் தற்போது 66.34 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2,461 கன அடி வீதம் தண்ணீர் வருகிறது.

    அணையில் இருந்து 1,560 கன அடி நீர் பாசனத்துக்காகவும், குடிநீருக்காகவும் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 4,935 மில்லியன் கன அடியாக உள்ளது. அணையின் நீர் மட்டம் 68 அடியை எட்டும் போது 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும். தற்போது அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வருவதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 51.60 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 87 கன அடி தண்ணீர் வருகிறது. சோத்துப்பாறை நீர் மட்டம் 126.34 அடி. வரத்து 42 கன அடி. திறப்பு 30 கன அடி.

    பெரியாறு 2.8, தேக்கடி 3, கூடலூர் 15.3, வைகை அணை 1.4, சண்முகா நதி அணை 13, உத்தமபாளையம் 13.4, மஞ்சளாறு 5 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    ×