search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தைப்பூச தேர்த்திருவிழா"

    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    • கதித்தமலை ஆண்டவர் சாமி ரத ஆரோகணமும் நடைபெற்றது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி கதித்தமலை வெற்றி வேலாயுதசாமி கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 18-ந்தேதி தொடங்கியது. அதைத்தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். 26-ந்தேதி கீழ் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    இன்று 29-ந் தேதி திருவிழாவின் முக்கிய நிகழ்வாக காலை 7 மணிக்கு கதித்தமலை ஆண்டவருக்கு மகா அபிஷேகம் அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனையும், கதித்தமலை ஆண்டவர் சாமி ரத ஆரோகணமும் நடைபெற்றது.

    பின்னர் காலை 10 மணிக்கு மேல் மலைதேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இரவு மகா தரிசனம், சுப்பிரமணியசாமி வள்ளி தெய்வானையுடன் புஷ்ப பல்லக்கில் சாமி திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு ஊத்துக்குளி நகரம் களை கட்டியுள்ளது. நாளை 30-ந்தேதி மஞ்சள் நீராட்டு விழாவுடன் தைப்பூச தேர் திருவிழா நிகழ்ச்சிகள் நிறைவடைகிறது.

    • தேரோட்டம் அடுத்த மாதம் 5-ந் தேதி நடக்கிறது.
    • ஆலோசனை கூட்டம் மலை மீதுள்ள மண்டப கூட்ட அரங்கில் நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது.

    காங்கயம் :

    காங்கயம், சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவில் தைப்பூச தேர் திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் அடுத்த மாதம் 5-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி பாதுகாப்பு மற்றும் பக்தர்களுக்கு தேவையான வசதிகள், சுகாதார வசதிகள், பஸ் வசதிகள் போன்றவை குறித்த ஆலோசனை கூட்டம் மலைமீதுள்ள மண்டப கூட்ட அரங்கில் நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது.

    இதில் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளார்கள். இதில் பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவில் உதவி ஆணையர் அன்னக்கொடி (பொறுப்பு) தெரிவித்துள்ளார்.

    • தைப்பூச தேர்த்திருவிழாவை நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • பக்தர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

    சென்னிமலை:

    சென்னிமலை முருகன் கோவிலில் வருகிற 28-ந் தேதி தைப்பூச தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி அடுத்த மாதம் 5-ந் தேதி காலையில் தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும், 9-ந் தேதி இரவு மகா தரிசனமும் நடைபெறுகிறது. இதுதவிர பல்வேறு நிகழ்ச்சிகள் தினமும் நடைபெறும்.

    தைப்பூச தேரோட்டத்தின் போது ஏராளமான பக்தர்கள் சென்னிமலை முருகன் கோவிலுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்காக தைப்பூச தேர்த்திருவிழாவை நடத்துவது குறித்த அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் சென்னிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்திற்கு பெருந்துறை தாசில்தார் சிவசங்கர் தலைமை தாங்கினார். சென்னிமலை பேரூராட்சி தலைவர் ஸ்ரீதேவி அசோக், போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், கோவில் ஆய்வாளர் ரவிக்குமார், செயல் அலுவலர் ஏ.கே.சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் தைப்பூச தேரோட்டம் நடைபெறும் நாளான வருகிற 5-ந் தேதி மற்றும் 6-ந் தேதி ஆகிய 2 நாட்களும் மலைப்பாதை வழியாக முருகன் கோவிலுக்கு செல்ல கார்கள் உள்ளிட்ட கனரக வாகனங்களை அனுமதிப்பதில்லை என்றும், அந்த சமயத்தில் கூடுதல் பஸ்கள் ஏற்பாடு செய்து அதில் பக்தர்களை அழைத்து செல்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.

    மேலும் திருவிழா காலங்களில் மலைக்கோவில் மற்றும் அடிவாரத்தில் மருத்துவ முகாம்கள் அமைப்பது, பக்தர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

    இந்த கூட்டத்தில் பேரூராட்சி செயல் அலுவலர் பார்த்திபன், பேரூராட்சி துணை தலைவர் சவுந்தர்ராஜன் மற்றும் உள்ளாட்சி, மின்சா ரம், சுகாதாரம், உள்ளிட்ட அனைத்து துறைகளை சேர்ந்த அலுவலர்கள், கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஊராட்சி ஒன்றிய ஆணையா் விமலாதேவி முன்னிலையில் நடைபெற்றது.
    • கடந்த ஆண்டை விட ரூ.1,800 மட்டுமே அதிகரித்து ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.

    காங்கயம்:

    காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச தோ்த் திருவிழா பிப்ரவரி 5-ந்தேதி தொடங்கி 7ந்தேதி வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது. திருவிழாவை முன்னிட்டு தற்காலிக கடைகள் மற்றும் கேளிக்கை அரங்குகளுக்கு குத்தகை வசூல் செய்யும் உரிமத்துக்கான ஏலம் காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஊராட்சி ஒன்றிய ஆணையா் விமலாதேவி முன்னிலையில் நடைபெற்றது.

    இதில் கடந்த முறை குத்தகை உரிமம் ரூ.7,98,700க்கு ஏலம் போனது. இந்த தொகையை குறைந்துபட்ச தொகையாக நிா்ணயித்து இந்த ஆண்டு ஏலம் தொடங்கியது. இந்த ஏலத்தில் சிவன்மலை பகுதியை சோ்ந்த நபா் ரூ.8 லட்சத்து 500க்கு குத்தகை ஏலத்தை எடுத்தாா். இது கடந்த ஆண்டை விட ரூ.1,800 மட்டுமே அதிகரித்து ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.

    ×