search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேசியக்கொடி"

    • இந்த பேரணியில் பான் செக்கர்ஸ் கல்லூரி மாணவிகள் ஏராளமானார் கலந்து கொண்டு பேரணியாக புறப்பட்டனர்.
    • பேரணியானது தஞ்சை பெரிய கோவில் முன்பு நிறைவடைந்தது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சி, பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்டம், தஞ்சை பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி ஆகியவை இணைந்து 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு அனைவரது வீட்டிலும் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்ற விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.

    தஞ்சை ரயில் நிலையம் முன்பு தொடங்கிய இந்த பேரணியை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், ஆணையர் சரவணகுமார் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    இந்த பேரணியில் பான் செக்கர்ஸ் கல்லூரி மாணவிகள் ஏராளமானார் கலந்து கொண்டு பேரணியாக புறப்பட்டனர். பேரணியானது தஞ்சை பெரிய கோவில் முன்பு நிறைவடைந்தது.

    அப்போது பெரிய கோவில் முன்பு அனைவரும் கைகளை தேசியக் கொடியை ஏந்தியவாறு சுதந்திரத்தை பேணி பாதுகாக்க வேண்டும், அனைவரது வீடுகளிலும் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு சுதந்திர தின விழிப்புணர்வு உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் பான் செக்கர்ஸ் கல்லூரி இயக்குனர் அருட்சகோதரி டெரன்ஸியா மேரி, கல்லூரி முதல்வர் முனைவர் காயத்ரி, நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தழகி, தஞ்சை செஞ்சுருள் சங்க பொருளாளர் முத்துக்குமார், மாநகராட்சி பொறியாளர் ஜெகதீசன், நகரமைப்பு அலுவலர் ராஜசேகரன், உதவி பொறியாளர்கள் ரமேஷ், கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர் சந்திரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×